[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 11:55.20 AM GMT ]
கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் இந்த காலகட்டத்தில் தமிழர் தரப்புக்களை அழைக்காமலும் எந்தத் தீர்மானங்களும் சபையில் எடுக்கப்படாமலும் தான்தோன்றித்தனமாக தமிழ் மக்களை புறக்கணித்து தற்போதைய முதல்வர் எடுக்கும் தீர்மானங்களுக்களை கண்டித்து த.தே.கூட்டமைப்பினர் ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக த.தே.கூட்டமைப்பு கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அ.அமிர்தலிங்கம், வி.கமலதாசன், அ.விஜயரெட்னம், சி.ஜெயக்குமார் ஆகியோர் கூட்டாக விட்டிருக்கும் அறிக்கை வருமாறு,
கல்முனை மாநகரசபை தற்போதைய முதல்வரால் திட்டமிட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதன் மற்றுமொரு நடவடிக்கையே இன்று கல்முனை பொது நூலகத்திற்கு தீர்மானம் எதுவும் எடுக்கப்படாத நிலையில் ஏ.ஆர்.மன்சூர் பொது நூலகம் எனவும், சேனைக்குடியிருப்பு கரைவாகு மேற்கு பொது நூலக திறப்பு விழாவிலும் கல்முனை பழைய பஸ்தரிப்பு நிலையத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற ஐக்கியமில்லாத ஐக்கிய சதுக்கத்தின் முதலாம் கட்ட புனரமைப்பு வைபவத்திலும் தமிழர் பிரதி நிதிகளான எங்களை நன்கு திட்டமிட்டு புறம் தள்ளிய இந்த முதல்வர் சாய்ந்தமருது கடற்கரை பூங்கா திறப்பு விழாவிற்கான அழைப்பிதலை மட்டும் ஏன் அனுப்பி வைத்தார்?
தமிழர் பிரதேசங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்களை ஏன் அனுப்பி வைக்க முடியவில்லை? இது இவரின் கபடத்தனமானதும், கடும் இனவாதப் போக்குமுடனான இந்த செயற்பாட்டினை வன்மையாக கண்டிக்கின்றோம்.
முன்பொரு போதும் இல்லாதவாறு இப்படியான செயல்களை திட்டமிட்டு செய்வது மட்டுமல்லாது பேசும் போது மட்டும் தமிழர்களோடு சேர்ந்து எந்த இனப்பாகுபாடுமற்ற அரசியலையே செய்து வருகின்றேன் என தம்பட்டம் அடித்து கொண்டு செயலில் கல்முனையில் தமிழர்களை ஓரம் கட்ட வேண்டும் என்ற உணர்வுடன் செயற்படும் இவரை நாம் எப்படி நம்பலாம்.
இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என கட்சி தலைமைகள் சிந்தித்து செயற்படும் இந்த காலகட்டத்தில் இப்படிப்பட்டவர்களின் நடவடிக்கையினால் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை கேள்விக் குறியாகி விடும் எனவும் அவர்கள் அறிக்கையில் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszARXKXnp1.html
இந்தியா இரண்டு கடல் பரிசோதனை படகுகள் உட்பட மேலும் சில போர் தளபாடங்களை இலங்கைக்கு வழங்க தீர்மானித்துள்ளது.

இலங்கைக்கு போர் தளபாடங்களை வழங்கும் இந்தியா
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 12:05.20 PM GMT ]
அயல் நாடுகளுடன் பாதுகாப்பு ரீதியான தொடர்புகளை வலுப்படுத்தி சீனாவினால் ஏற்பட்டு வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் முலோபாய நடவடிக்கையாக இந்த தீர்மானம் அமைந்துள்ளதாக இந்திய அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா இதற்கு முன்னரும் போர் தளபாடங்களை இலங்கைக்கு வழங்கியது. ரோடார் கருவிகள், கண்ணி வெடிகளில் இருந்து தப்பிக்கும் வாகனங்கள் உட்பட பல தளபாடங்கள் அதில் அடங்கும்.
இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த இந்திய பாதுகாப்புச் செயலளருக்கும் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருத்தரப்பு ஒத்துழைப்புகளை எப்படி அதிகரிப்பது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszARXKXnp3.html
நாடு முழுவதும் இன்று காலை ஒன்பது மணிமுதல் பேரிடர் முகாமைத்துவ ஒத்திகை நடைபெற்று வருகின்றது.
இந்தியா இதற்கு முன்னரும் போர் தளபாடங்களை இலங்கைக்கு வழங்கியது. ரோடார் கருவிகள், கண்ணி வெடிகளில் இருந்து தப்பிக்கும் வாகனங்கள் உட்பட பல தளபாடங்கள் அதில் அடங்கும்.
இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த இந்திய பாதுகாப்புச் செயலளருக்கும் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருத்தரப்பு ஒத்துழைப்புகளை எப்படி அதிகரிப்பது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszARXKXnp3.html
நாடு தழுவிய ரீதியில் பேரிடர் முகாமைத்துவ ஒத்திகை- விசேட அதிரடிப் படையின் முற்றுகையில் கந்தளாய்க் குளம்
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 12:28.45 PM GMT ]
சுனாமி, வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயங்களின் போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்து பொதுமக்களை அறிவுறுத்தும் வகையில் இந்த ஒத்திகை நடத்தப்படுவதாக தேசிய பேரிடர் முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக இன்று முற்பகலில் வெள்ளம் ஏற்படும் சூழலில் தப்பித்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்த விளக்கமும், ஒத்திகையும் நடைபெற்றது. நாட்டின் சில மாவட்டங்கள் இதற்கென தேர்வு செய்யப்பட்டிருந்தன.
அதனையடுத்து மத்திய மலை நாட்டின் சில மாவட்டங்களில் மண்சரிவு அபாயத்தின் போது நடந்து கொள்ள வேண்டிய முறை மற்றும் ஒத்திகை என்பன நண்பகலில் நடைபெற்றது.“
இன்று மாலை கரையோரப்பிரதேசங்களில் சுனாமி தொடர்பான முன்னெச்சரிக்கையும், ஒத்திகையும் நடைபெற்று வருகின்றது.
இவ்வாறான ஒத்திகைகளின் மூலம் நாட்டில் பேரிடர் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அழிவுகளைக் குறைத்துக் கொள்ள முடியும் என்று பேரிடர் முகாமைத்துவ நிறுவனம் எதிர்பார்க்கின்றது.
விசேட அதிரடிப் படையின் முற்றுகையில் கந்தளாய்க் குளம்
விசேட அதிரடிப்படை பட்டாலியன் ஒன்று கந்தளாய்க் குளத்தை சுற்றிவளைத்து நிலை கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.
அண்மையில் திருமலை மாவட்டத்தில் நிலவிய கடும் வரட்சி காரணமாக கந்தளாய்க் குளம் முழுமையாக வற்றிப் போயிருந்தது.
இதன்போது அப்பகுதி மக்கள் மட்டுமன்றி, வெளியூர்களைச் சேர்ந்தவர்களும் சுமார் இரண்டாயிரம் பேரளவில் குளத்தின் நீர் தேங்கும் பகுதியில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் காரணமாக குளத்தின் நீரேந்து பகுதிகள் எங்கும் குழிகளும், பள்ளங்களும் உருவாகியுள்ளன.
இந்நிலையில் தற்போது பெய்துவரும் அடைமழை காரணமாக கந்தளாயக்குளம் மீண்டும் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது. குளத்தில் உள்ள குழி, பள்ளங்கள் காரணமாக அதில் குளிக்க வருபவர்கள் உயிரிழப்புகளை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வாளர்களும் குளத்தை குறிவைத்து காத்திருக்கின்றனர்.
இவ்வாறான நிகழ்வுகளைத் தடுக்கும் நோக்கில் தற்போது குளத்தைச் சுற்றியுள்ள பகுதி முழுமையாக விசேட அதிரடிப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
அங்கு ஒரு பட்டாலியன் அதிரடிப் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszARXKXnp4.html

Geen opmerkingen:
Een reactie posten