[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 04:48.28 AM GMT ]
இந்தநிலையில் இடதுசாரி அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண மற்றும் டியு குணசேகர ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து ஜனாதிபதி தேர்தலை பிற்போடுமாறு கோரியுள்ளனர்.
இதேநேரம், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணத்துங்கவை லண்டனில் சந்தித்துள்ளார்.
இதன்போது சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதி பொதுவேட்பாளராக போட்டியிட்டால் ரணில் விக்கிரமசிங்க பிரதம மந்திரியாக போட்டியிடுவதற்கு இணக்கம் வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszATYKVeuy.html
நவ்று முகாம் துஷ்பிரயோகம் பற்றி விசாரணை நடத்தப்படும்: மொரிசன்
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 04:49.55 AM GMT ]
நவ்று தீவில் பெண்களையும், பிள்ளைகளையும் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதாகவும், இதன் காரணமாக பலர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இது பற்றி விசாரணை நடத்தப்படும் என மொரிசன் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர்கள் தம்மை தாமே துன்புறுத்தியதாக கூறும் கருத்து உண்மைக்கு புறமானது என தெரிவித்துள்ளார்.
செனட்டர் சாரா ஹான்சன் யங் கடந்த வாரம் நவுரு தீவு தடுப்பு முகாம் பற்றிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
இங்குள்ள பெண்கள் குளியல் அறையை நாட வேண்டுமானால் காவற்பணியாளர்களின் இச்சையைத் தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதாக அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszATYKVeuz.html
Geen opmerkingen:
Een reactie posten