[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 03:56.54 AM GMT ]
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரான அசாத் சாலி, மத்திய மாகாண சபை உறுப்பினராக உள்ளார். முஸ்லிம் தரப்பில் இருந்து அரசாங்கத்தை விமர்சிப்பதில் முதலாமவராகவும் உள்ளார்.
இதன் காரணமாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் அவரது கைத்துப்பாக்கிக்கான லைசென்ஸை புதுப்பிக்க பொலிசார் மறுப்புத் தெரிவித்துள்ளனர். மேலும் மாகாண சபை உறுப்பினருக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் அவருக்கு வழங்கப்படவில்லை.
அண்மையில் அவர் கண்டி குயீன்ஸ் ஹோட்டலில் வைத்து அமெரிக்கத் தூதுவரை சந்தித்தபோது புலனாய்வுத் தரப்பினர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
மேலும் சமரசிங்க என்றொரு பொலிஸ் அதிகாரி தொலைபேசி மூலம் ஹோட்டலைத் தொடர்பு கொண்டு சந்திப்பு தொடர்பான விபரங்களைக் கேட்டிருந்தார்.
மேலும் அளுத்கம கலவரத்தின் பின்னர் அங்கு விஜயம் மேற்கொண்டபோதும் புலனாய்வுத்தரப்பினர் அவரைப் பின்தொடர்ந்திருந்தனர்.
தற்போது புலனாய்வுத் தரப்பினர் மூலம் தனக்கு மீண்டும் உயிரச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கடிதம் மூலம் அவர் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பட்டுள்ளார்.
குறைந்த பட்சம் தனக்கு பள்ளிவாசலுக்குச் செல்லக்கூட முடியாத நிலை இருப்பதாக அவர் தனது கடிதம் மூலம் சுட்டிக்காட்டுகின்றார்.
புலனாய்வுத்தரப்பினர் மாத்திரமன்றி மர்ம நபர்களும் தன்னைப் பின்தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகல மற்றும் அரசாங்கம் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATYKVet5.html
அரசாங்கத்திடம் சரியான பொருளாதாரக் கொள்கை இல்லை! சம்பிக்கவின் திடீர் ஞானோதயம்
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 04:35.20 AM GMT ]
எரிபொருள் பயன்பாடு மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக வியாழக்கிழமையன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் சீரிய பொருளாதாரக் கொள்கை இன்றி தான்தோன்றித் தனமாக செயற்படுகின்றது. வாக்கு வங்கியைக் குறிவைத்து நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கின்றது.
மின்சார சபை கடும் நட்டத்தில் இயங்கும் நிலையில் ஜனாதிபதி மின் கட்டண குறைப்பு தொடர்பில் அறிவித்துள்ளார். இது மின்சார சபையை அதாள பாதாளத்தில் தள்ளிவிடும்.
தற்போதைய நிலையில் மின்சார சபை மக்கள் வங்கியில் பெரும் தொகையை கடனாக பெற்றுள்ளது. திருப்பிச் செலுத்தப்படாத இந்தக் கடன் காரணமாக மக்கள் வங்கியும் நட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
எரிபொருள் சிக்கனம் தொடர்பாகவும் அரசாங்கத்திடம் முறையான கொள்கை இல்லை. எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் கடன்சுமை காரணமாக இலங்கை வங்கியும் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இவ்வாறாக அரசாங்கம் ஒரு துறையில் மேற்கொள்ளும் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள், இன்னொரு துறையை பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் அமைந்து விடுகின்றது. இதன் காரணமாக பொருளாதார நெருக்கடி அதிகரித்துச் செல்கின்றது என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அமைச்சர் சம்பிக்க எரிபொருள் மற்றும் மின்சக்தி அமைச்சராக செயற்பட்ட காலத்தில் தான் இந்த இரண்டு நிறுவனங்களும் கடுமையான பொருளாதார சரிவை எதிர்கொண்டதாக அதன் ஊழியர்கள் விமர்சித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszATYKVet6.html
சுகாதார சேவைக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு: வருடாந்தம் லட்சக்கணக்கானோர் இறப்பு
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 04:35.45 AM GMT ]
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டது முதல், ஏனைய துறைகளுக்கான நிதியொதுக்கீடுகளைக் கணிசமாக குறைத்துள்ளார்.
பாதுகாப்புத்துறைக்கும் அமைச்சர் பசிலின் கீழ் உள்ள துறைகளுக்கும் மட்டுமே கூடுதல் நிதி ஒதுக்கப்படுகின்றது.
இந்நிலையில் நிதிப் பற்றாக்குறை காரணமாக தற்போது இலங்கையின் சுகாதார சேவை சீர்குறைந்துள்ளது.
மருந்துகளின் பற்றாக்குறை காரணமாக சாதாரண நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் மரணத்தைத் தழுவும் அவலம் தொடர்கின்றது.
இது தொடர்பாக சுகாதார சேவைகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும் அண்மையில் கவலை வெளியிட்டிருந்தார்.
மகரகம புற்றுநோய் மருத்துவமனைக்கு வருகை தந்திருந்த அவர், சுகாதார சேவை சீர்கேடு தொடர்பில் அரசாங்கத்தை மறைமுகமாக குற்றம் சாட்டியிருந்தார்.
சுகாதார அமைச்சின் அறிக்கையின் படி வருடாந்தம் 60 ஆயிரம் தொடக்கம் ஒரு லட்சம் பேர் வரையானோர் சாதாரண வியாதிகளுக்கான மருந்தின்றி இறப்பதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கும் தேவையான மருந்துகள் கையிருப்பில் இல்லாத நிலையில் வருடாந்தம் 20 ஆயிரம் வரையானோர் இறப்பை எதிர்கொள்வதாக அவர் கவலை தெரிவித்திருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszATYKVet7.html
Geen opmerkingen:
Een reactie posten