[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 05:02.07 AM GMT ]
இது தொடர்பாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கருத்து வெளியிட்டுள்ளார்.
புலம்பெயர் இலங்கைத் தமிழ் முக்கியஸ்தர்களுக்கு அரசாங்கத்தின் சில்லறை வரப்பிரசாதங்கள் சில வழங்கப்பட்டுள்ளன.
தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிறில் ரமபோசா, ஒரு வர்த்தகர். தனது வர்த்தக நலனுக்காகவே இலங்கைக்கு வந்திருந்தார். நிலக்கரி வர்த்தகம் அவரது பிரதான வர்த்தகமாகும். இலங்கையின் அனல் மின்நிலையங்களுக்கு நிலக்கரி வழங்கும் ஒப்பந்தத்தைப் பெற அவர் முயற்சித்தார்.
இதற்கிடையே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ருத்திரகுமாரனுக்கு இந்த ஒப்பந்தத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் அவரை வளைத்துப்போட்டு, இலங்கையிலுள்ள தமிழர்களின் வாக்குகளைப் பெற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
குறைந்த பட்சம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களை மஹிந்தவுக்கு எதிராக வாக்களிக்காமால் தடுப்பது இதன் நோக்கமாகும் என்றும் விஜித ஹேரத் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையே ருத்திரகுமாரனுடனான அரசாங்கத்தின் புதிய நல்லுறவு தொடர்பில் கடந்த வாரம் கூடிய ஜே.வி.பி.யின் செயற்குழு கூட்டத்தில் நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATYKVeu0.html
மஹிந்தவுக்கு முடியும்! ஆளுங்கட்சியின் தேர்தல் பிரச்சார சுலோகம்
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 05:06.18 AM GMT ]
மஹிந்த ராஜபக்ஷ இரண்டுதடவைகள் ஜனாதிபதியாகப் பதவி வகித்துள்ள நிலையில், மூன்றாம் தடவையும் அப்பதவிக்குத் தகுதியற்றவர் என்று ஐ.தே.க. கடுமையாக விமர்சித்து வருகின்றது.
மேலும் “மஹிந்தவுக்கு முடியாது” என்ற தலைப்பில் புத்திஜீவிகள், வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்களைக் கொண்டு நாடுமுழுவதும் கருத்தரங்குகளையும் நடத்தி வருகின்றது.
இதற்கு கணிசமான அளவில் பொதுமக்களின் ஆதரவு அதிகரித்து வருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் இந்தப் பிரச்சாரத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் “மஹிந்தவிற்கு முடியும்” என்று அரசாங்கத்தின் பிரச்சாரத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தர்களில் ஒருவரான எல்லே குணவங்ச தேரர் இந்தக் கருத்தரங்கை முன்னின்று நடத்திச் செல்லவுள்ளார்.
இவருடன் நாடறிந்த கடும் போக்குவாதிகளான ஊடகவியலாளர் சந்திரபிரேம, வழக்கறிஞர் கோமின் தயாசிறி ஆகியோரும் இந்தக் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
சந்திரபிரேம பொதுபலசேனாவின் அதிகாரபூர்வமற்ற செய்தித் தொடர்பாளரக உள்ளார்.
வழக்கறிஞர் கோமின் தயாசிறி, பொதுபல சேனாவின் சட்ட ஆலோசகராக உள்ளார். இந்நிலையில் கடந்த காலங்களைப் போன்று இம்முறையும் கடும் இனவாதிகளின் துணையுடன் தனது தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszATYKVeu1.html
கடத்தப்பட்ட மணமகள் யால காட்டுக்குள்ளிருந்து மீட்பு (செய்தித் துளிகள்)
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 05:24.46 AM GMT ]
கடத்தப்பட்ட சூரியவெவ பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையமொன்றில் பிரஸ்தாப யுவதி பணிபுரிந்துள்ளார்.
அவரது அழகில் மயங்கிய வாலிபரொருவர் யுவதியின் பெற்றோரை அணுகி, தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு பெற்றோரும் பேசி நிச்சயித்தபடி கடந்த வெள்ளிக்கிழமை இந்த யுவதிக்கு திருமணம் ஏற்பாடாகியிருந்தது.
எனினும் அவர் ஆரம்பம் தொட்டு திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை குறித்த யுவதியை இளைஞர்கள் குழுவொன்றினால் கடத்தப்பட்டார்.
அவரைக் கடத்திய வான் மற்றும் சாரதியை திஸ்ஸமகாராமை பிரதேசத்தில் வைத்து அன்றிரவே பொலிசார் கைது செய்திருந்தனர்.
எனினும் யுவதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
பொலிசாரின் தீவிர தேடுதல் வேட்டை தொடர்ந்த நிலையில் நேற்று மாலை யுவதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
யால வனாந்திரத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் வேப்பம் மரமொன்றின் மீதேறி மறைந்திருந்த நிலையிலேயே அவர் பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அவரைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் இளைஞனும் அப்பகுதியிலிருந்து சற்றுத்தள்ளி மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் போலி நாணயத்தாளை கொடுத்து எரிபொருளை கொள்வனவு செய்ய முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் எரிபொருளை பெற்றுக்கொண்ட பின், இரண்டு 500 ரூபா போலி நாணயத்தாள்களை கொடுத்துள்ளார்.
எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவரிடம் இருந்து மேலும் ஒரு போலி நாணயத்தாள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் 30 வயதான முல்லைத்தீவு பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பகுதியில் குண்டுவெடிப்பு
புதுக்குடியிருப்பில் சிறிய ரக குண்டுவெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதியில் வசிக்கும் ஜெயசுதா என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவரது புதல்வன் ரஞ்சித் ரஜிந்தன் என்பவர் தோட்டத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த சிறிய கற்கள் அருகில் விளையாடிக் கொண்டிருந்திருக்கின்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கற்களுக்குள்ளிருந்து சிறிய ரக வெடிபொருள் ஒன்று வெடித்துச்சிதறியுள்ளது.
எனினும் குழந்தைக்கோ அல்லது பொருட்களுக்கோ எதுவித சேதமும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszATYKVeu3.html
Geen opmerkingen:
Een reactie posten