தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 oktober 2014

இராஜதந்திரிகளின் ரவுடித்தனம் 2009 இலிருந்து தொடர்கிறது: தமரா குணநாயகம்!

பொது பலசேனா மாநாட்டிற்கு விராது தேரர் எந்த விசாவில் நாட்டுக்குள் நுழைந்தார்: ஜனா கேள்வி
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 01:04.31 PM GMT ]
சர்வதேச பயங்கரவாதி நாட்டுக்குள் வந்து பொதுபலசேனாவுடன் செயற்படுவது நாட்டிற்கோ பாதுகாப்புக்கோ அச்சுறுத்தல் அல்ல, தமிழர் வாழ்வதற்கான உரிமை கோருவது நாட்டின் பாதுகாப்புக்கும் இறைமைக்கும் அச்சுறுத்தலா என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) கேள்வி எழுப்பியுள்ளார்.
மியன்மாரின் சர்ச்சைக்குரிய விராது தேரர் பொது பலசேனாவின் மகாநாட்டிற்கு வருகை தந்து உரையாற்றியமை குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
பொது பலசேனா மாநாட்டிற்கு விராது தேரர் எந்த விசாவில் நாட்டுக்குள் நுழைந்தார். சுற்றுலா விசாவிலா, அல்லது பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றக் கூடிய விசாவில் வந்தாரா?
சுற்றுலா விசாவில் தமிழ் நாட்டில் இருந்து வந்த பத்திரிகையாளர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் புகைப்படம் எடுத்தார்கள் என்று குற்றம்சாட்டி நாடு கடத்தியவர்கள், இலங்கை வாழ் புலம் பெயர் தமிழர்கள் சுற்றுலா விசாவில் வந்து நான்கு பேர் சூழ நண்பர்கள் வட்டத்துடன் கலந்துரையாடல் நடத்தினால் அரசியல் செய்கின்றார்கள் என்று உடனே நாடு கடத்தியவர்கள்.
மேலும் சுற்றுலா விசாவில் வந்து தனது தாயின் கல்லறையில் அஞ்சலி செலுத்திய தமிழரை நாடு கடத்தியவர்கள், அதற்கும் மேலாக பொதுநல வாய மாநாட்டுக்கு முன்பு சுற்றுலா விசாவில் வந்த அவுஸ்திரேலிய, நியூசிலாந்து நாடுகளைச் சேர்ந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்திரிகையாளர்களைச் சந்திக்க இருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டு அவர்கள் குடிவரவு குடியகல்வுச் சட்டத்தினை மீறினார்கள் என்று நாடு கடத்தியவர்கள்! 
சுற்றுலா விசாவில் வந்து அரச பாதுகாப்புடன் பொது பலசேனா மாநாட்டில் கலந்து கொண்ட சர்வதேச பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்ட விராகு தேரரை எந்த வகையில் அனுமதித்தார்கள்?
இவ்வளவுக்கும் பொது பலசேனா மகாநாட்டில் விராது தேரர் பங்களிப்புடன் நடந்த உரையாடல்கள் யாவும் அப்பட்டமான அரசியலமைப்பு மீறல்களாகும்.
இலங்கையின் இறைமைக்குச் சவால் விட்ட உரைகள் மட்டுமல்ல இலங்கையின் ஐக்கியம், ஒருமைப்பாட்டிற்கும் சவால் விடுக்கப்பட்ட உரைகளே அங்கு நிகழ்த்தப்பட்டன.
இவ்வளவுக்கும் பாதுகாப்புத் தரப்பு பேசவல்ல அதிகாரி கூறுகின்றார், விராகு தேரர் வருகை நாட்டிற்கோ பாதுகாப்புக்கோ அச்சுறுத்தல் அல்லவன்று. இதிலிருந்து ஒன்று தெளிவாக விளங்குகின்றது. ஐக்கிய இலங்கைக்குள் தமிழர் வாழ்வதற்கான உரிமை கோருவது நாட்டின் பாதுகாப்புக்கும் இறமைக்கும் அச்சுறுத்தலாம்.
மியன்மார் பிக்குவும், சர்வதே பயங்கரவாதியுமான விராது தேர் முன்னிலையில் பொது பலசேனா அரசியலமைப்பைக் கேள்விக்குட்படுத்துவது, இன மொழிகளுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்துவது ஒன்றும் நாட்டிற்கோ, இறைமைக்கோ சவாலான வியடமல்ல.
இது எப்போது சவாலாகுமென்றால் வளர்த்தகடா மார்பில் பாயும்போது மட்டுமே. அப்போது அனைத்திற்கும் காலம் கடந்து விடும என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWmo5.html

மட்டக்களப்பில் காரை நசுக்கிய டிப்பர் வாகனம்: மூவர் படுகாயம்
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 01:18.34 PM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோப்பாவெளியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
பெரியபுல்லுமலையிலிருந்து செங்கலடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் ரக வாகனம், மட்டக்களப்பிலிருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது மோதியதனாலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஹிரோஸ் நுவாஞ்ஜித் (வயது 29), நாமல் திஸாநாயக்க (வயது 32) மற்றும் தாரங்க வீரசிங்ஹ (வயது 35) ஆகியோரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
இவர்கள் உடனடியாக கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக கரடியனாறு வைத்தியசாலையில் வட்டாரங்கள் தெரிவித்தன.
டிப்பர் ரக வாகனத்துக்குள் அகப்பட்ட காரிலிருந்து காயமடைந்தவர்களை மீட்டெடுப்பதற்காக சுமார் ஒரு மணிநேரம் சென்றதாக விபத்து நடந்த இடத்திற்குச் சென்றிருந்த மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் உயிரிழப்பு
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணி வீதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று மின்சார தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
மேற்படி வந்தாறுமூலை கிழக்கில் விசித்து வந்த ஜோன் ரஞ்சன் (வயது 46) என்ற இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையே மின்சார தாக்குதலுக்குளாகி உயிரிழந்துள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.
தனது வீட்டிற்குள் இருந்த மின்சார பொருட்களை தான் பழுதுபார்த்துக் கொண்டிருக்கும்போதே மின்சார தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்து இருக்கின்றார் என பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்வம் தொடர்பாக ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWmo6.html
இராஜதந்திரிகளின் ரவுடித்தனம் 2009 இலிருந்து தொடர்கிறது: தமரா குணநாயகம்
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 02:34.45 PM GMT ]
2009 இல் ஜெனீவாவில் ஆரம்பமான துன்பியல் சம்பவங்கள் இப்பொழுதும் தொடர்கின்றன. அதே வில்லன்கள் அதை முன்னெடுப்பதாக ஜெனீவாவிற்கான முன்னாள் தூதுவர் தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.
2011 மற்றும் 2012ம் ஆண்டிலும் ஜெனீவாவில் இவை இடம்பெற்றன. பாரிசிலும், ரோமிலும் கூட இவை இடம்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸை பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து கருத்து ஆங்கில ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடும்போதே அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராஜதந்திரிகளின் ரவுடித்தனமான செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்தின் அடிப்படை குணாதிசயங்கள் குறித்து கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளது.
இவ்வாறான நிலையில் நாடு அவமானப்படுத்தப்படுவதை தடுப்பதற்கு, பாராளுமன்றமும், கட்சிகளும், மக்களும் முன்வர வேண்டும்.
நாட்டின் இறைமையையும், சுதந்திரத்தையும், கௌரவத்தையும் காப்பாற்ற இது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு அவர்கள் கூட்டாக இணைந்து தங்களுக்கு விருப்பமில்லாதவர்களை தொல்லைப்படுத்தும் தந்திரோபாயத்தை கையாண்டனர். தற்போது உடல் ரீதியான தாக்குதல்களில் இறங்கியுள்ளனர். 
இந்த உயர் இராஜதந்திரிகள் தங்களுடைய நடவடிக்கைகளை தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் தொடர்கின்றனர். அவர்களுக்கு உயர்மட்ட ஆதரவும், பதவி உயர்வுகளும், பணமும் தாராளமாக கிடைக்கின்றது.
அவர்கள் செயற்படும் முறை மாறியிருக்கலாம், ஆனால் அவர்களுடைய நோக்கம் மாறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
"ஏன் இப்போது?, ஏன் நியூயார்க் சூழலில்?, ஏன் ஐ.நா. பொது சபை சூழலில்?, ஏன் ஜெனீவா மனித உரிமைகள் சபையின் அமர்வின் போது?இலங்கை இராஜதந்திரிகள் நோக்கம் என்ன? " போன்ற கேள்விகளை அனைவரும் கேட்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWmo7.html

Geen opmerkingen:

Een reactie posten