தாயை மனம் முடிக்க தனயன் ரெடி
vvvvvvvvvvvvvvvvv
vvvvvvvvvvvvvvvvv
பிரான்ஸ் நாட்டில் நபர் ஒருவர் தனது வளர்ப்பு தாயை திருமணம் செய்துக் கொள்ளப்போவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரான்ஸின் டாபோ (Dabo) எனும் சிறு கிராமத்தை சேர்ந்த சேர்ந்த எரிக் ஹோல்டர் (Eric Holder Age-45) என்ற நபர் தனது தந்தையின் 2வது மனைவியான எலிசபெத் (Elisabeth Age-48) என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
திருமணத்திற்காக பல மாதங்களாக அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த எரிக் தற்போது மணமுடிக்க அனுமதியை பெற்றுள்ளார்.
அடுத்த ஆண்டு யூன் மாதம் நடைபெறவிருக்கும் இந்த திருமணத்தில், எலிசெபத்தின் கணவரும், எரிக் ஹொல்டரின் தந்தையுமான ஸ்டீவனும் (Steven) பங்கேற்கவுள்ளார்.
மேலும் இவர்கள் இருவரும் இரத்த உறவுகள் இல்லை என்பதால் பிரான்ஸ் சட்டத்தின் கீழ் இந்த திருமணம் செல்லுபடியாகும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து எலிசபத் கூறுகையில், இது எங்களுக்கு மிக மகிழ்ச்சிகரமான தருணம் என்றும் எங்களை போல் உள்ள மற்ற தம்பதியினருக்கு எங்களது திருமணம் ஒரு எடுத்துகாட்டாக விளங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


Geen opmerkingen:
Een reactie posten