[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 03:03.23 PM GMT ]
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நியூயோர்க்கில் அவ்வாறான ஓர் சந்திப்பே அண்மையில் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், இலங்கை குறித்த நிலைப்பாட்டை அமெரிக்கா தளர்த்தியுள்ளதாகவோ அல்லது கெரியுடனான சந்திப்பு குறித்தே அரசாங்கம் எவ்விதமான உத்தியோகபூர்வமான அறிக்கைகளையும் வெளியிடவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான தனது நிலைப்பாட்டை அமெரிக்கா மென்மையாக்கியுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால், அவ்வாறு நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என அண்மையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் ப்சான்கி உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.
ஜனாதிபதிக்கும் கெரிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு குறித்த ஊகங்களின் அடிப்படையில் சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்ததாகவும் அவை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையல்ல எனவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
எவ்வாறெனினும், அமெரிக்காவுடன் தொடர்ச்சியாக இவ்வாறான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி- இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை: அமெரிக்கா
http://www.tamilwin.com/show-RUmszATaKWmpy.html
நாட்டிலுள்ள அனைத்து சேரி புறங்களும் அகற்றப்படும்: ஜனாதிபதி மஹிந்த
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 03:09.36 PM GMT ]
அடுத்து வரும் இரண்டு வருடங்களில் நாட்டிலுள்ள அனைத்து சேரி புறங்களும் அகற்றப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சேரி புறங்களை அகற்றி, அதற்குப் பதிலாக அனைவருக்கும் வீடுகளில் வசிப்பதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுத்தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு, கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.
நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் வீடு கிடைக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
சிறார்களுக்கு சிறந்த வாழ்வை பெற்றுக்கொடுத்து அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது.
போதைப்பொருட்களில் இருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கும் பொறுப்பை உரியவகையில் நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேசிய வீடமைப்பு கொள்கைப் பிரகடனத்தை, அமைச்சர் விமல் வீரவன்ச ஜனாதிபதி மஹிந்தவிடம் கையளித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWmpz.html
மீனவர் பிரச்சினைகளை மத்திய அரசாங்கமே தீர்த்து வைக்க வேண்டும்!- வல்வெட்டித்துறையில் பா.கஜதீபன்
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 03:17.53 PM GMT ]
இன்று 6.10.2014 திங்கட்கிழமை காலை முதல் மாலை 05மணிவரை தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனபதையும், அவற்றுக்குத் தீர்வு காணுமாறும் வலியுறுத்தி 160 க்கு மேற்பட்ட மீனவக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
அவ் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்து, அம்மக்களுடன் கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எமது தாயகப் பிரதேசத்திலுள்ள ஆழ்கடற் பிரதேசங்கள் யாவும் ஸ்ரீலங்கா கடற்படையினரின் அனுசரணையுடன் தென்னிலங்கையின் சிங்கள மீனவர்களாலும், இந்திய மீனவர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு எமது கடல் வளங்கள் சுரண்டப்பட்டு சூறையாடப்பட்டு வருகின்ற இந்நேரத்தில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையைப் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் எமது மீனவர்கள் சிலர் இப்பொழுது பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் சட்டத்தை அறிந்தவர்களுடன் உரையாடுகின்ற போது , ரோலர் மீன்பிடி முறையிலும் இயந்திரங்களைப்பாவிக்காமல் கைகளால் வலையை இழுத்து அத்தொழிலை மேற்கொள்ளும் போது அது சட்ட விரோதமானதல்ல எனத்தெரிவித்துள்ளனர்.
எது எவ்வாறிருப்பினும் பாதிக்கப்பட்டிருக்கும் இம்மீன்பிடி முறையைப் பின்பற்றுபவர்களுக்கு சட்டத்தின் உதவியுடன் அவர்களுக்குரிய நீதி விரைவாகக் கிடைக்க வேண்டும். அதுவரைக்கும் அவர்களுக்குரிய இடைக்கால நிவாரணங்கள் சரியான முறையில் வழங்கப்படுவதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
ஆனால் இவற்றையெல்லாம் செய்ய வேண்டிய மத்திய அரசாங்கம் தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல், ஆழ்கடல்கள் தொடர்பான அதிகாரங்கள் எதுவுமற்ற எமது மாகாண அரசாங்கம் தான், இம்மக்களுக்கு துரோகம் இழைக்கிறது என்பதான பொய்த் தோற்றப்பாடு ஒன்றை ஏற்படுத்தி எம்மக்களைக் குழப்பி வருகின்றது.
ஆனால் எம்மக்கள் மிகவும் தெளிவாக இன்றைக்கு வெளிக்காட்டியுள்ள இந்த ஒற்றுமை உணர்வை மிகப்பெரிய அளவில் கட்டியெழுப்பி தங்கள் உரிமைக்காக, இவை தொடர்பான அதிகராங்களையுடைய மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்கக்கூடிய அளவிற்கு ஒன்றுபட்டு செயற்பட்டு உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.
எமது ஆழ்கடல் மீனவர்களின் பிரச்சினைகளைக் களையும் அதிகாரங்களைக் கையில் வைத்துள்ள மத்திய அரசு , மக்களிடம் பொய்த் தகவல்களைக் கூறி குழப்பாமல் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதே வேளை மக்களுக்கான சரியான தகவல்களைக் கொடுத்து மக்களை அணிதிரட்டி தீர்வுகளைப் பெறும் முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டிய கடப்பாடும் மாகாணசபைக்கு உண்டென்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான க.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சார்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், வல்வெட்டித்துறை நகரசபை உப தலைவர் சதீஸ், மற்றும் உறுப்பினர்கள், ஊரவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWmp0.html
Geen opmerkingen:
Een reactie posten