தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 oktober 2014

காணாமல் போனவர்களை நினைவுகூரும் தேசிய தினம்- சப்ரகமுவ பல்கலை மீள் திறப்பு: நாளை ஆராய்வு!



என் பெயர் எங்கே போனது? அமைச்சர் அமரவீரவிடம் மேர்வின் சில்வா வாக்குவாதம்
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 04:18.00 AM GMT ]
அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் அமைச்சர் மேர்வின் சில்வா ஆகியோருக்கிடையில் தொலைபேசி வழியாக கடும் வாக்குவாதம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
களனி தொகுதியின் வராகொடை பிரதேசத்தில் கால்வாய் ஒன்றின் புனரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன. அதற்கான நிதி அமைச்சர் மேர்வின் சில்வாவின் வேண்டுகோளின் பேரில் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று வாய்க்கால் புனரமைப்பு பணி தொடர்பான அடிக்கல்லைத் திறந்து வைப்பதற்கு தொகுதி அமைப்பாளர் மேர்வின் சில்வா வருகை தந்திருந்தார்.
எனினும் அடிக்கல்லில் அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இதனையடுத்து அங்கிருந்தபடியே அமைச்சர் அமரவீரவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு காரசாரமாக வாக்குவாதப்பட்டுள்ளார்.
“அடிக்கல்லில் எனது பெயர் எங்கே போனது? ஏன் எல்லோருமே இப்படி எனக்கு அநீதி இழைக்கின்றீர்கள்” என்ற அர்த்தப்படும் வகையில் அவர் வாக்குவாதப்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszARXKWewz.html
சஜின் அடித்த அடியில் பல் உடைந்தது! கிறிஸ் நோனிஸிற்கு சத்திரசிகிச்சை
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 04:41.05 AM GMT ]
பிரிட்டனுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் கிறிஸ் நோனிஸ் இற்கு உடைந்த பல்லைச் சீரமைப்பதற்கான சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தின்போது நியூயோர்க்கில் வைத்து கிறிஸ் நோனிஸ் உம், நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவும் வாக்குவாதப்பட்டிருந்தனர்.
இதன் பின்னர் சஜின் வாஸ் ஓங்கி அறைந்த வேகத்தில் கிறிஸ் நோனிஸ் தடுமாறி கீழே விழுந்து விட்டதாகவும் தகவல்கள் பரவியிருந்தன.
இந்நிலையில் உடைந்த பல் ஒன்றை சீரமைப்பதற்கான சத்திர சிகிச்சையொன்றுக்கு கிறிஸ் நோனிஸ் உட்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த வார இறுதியில் லண்டனில் இந்தச் சத்திர சிகிச்சை நடைபெற்றுள்ளது.
சஜின் வாஸின் தாக்குதலின் பின்னர் கிறிஸ் நோனிஸ் தொடர்ச்சியான பல் வலியினால் அவதிப்பட்டிருந்தார். பின்னர் கடந்த வார இறுதியில் கடுமையான பல்வலி காரணமாக அவர் மயக்க நிலைக்குச் சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்தே அவருக்கு மேல் வரிசைப் பற்களை சீரமைக்கும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது அவர் படிப்படியாக குணமடைந்து வருவதாக தெரிய வந்துள்ளது. இருந்தும் இதுவரை அவரால் பழையபடி வாயைத் திறந்து பேச முடியாத நிலையில் இருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARXKWew0.html
முன்னேஷ்வரம் கோவில் குருக்கள் கைது- ஒன்பதே மாதத்தில் 690 மில்லியன் தங்கம் பறிமுதல்
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 04:51.31 AM GMT ]
இந்துக்களின் புனித இடங்களில் ஒன்றாகக் கருதப்படும் சிலாபம், முன்னேஸ்வரம் கோவிலின் உதவி குருக்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னேஸ்வரம் கோவிலின் உட்பிரகாரத்தில் அமைந்திருந்த பூஜை மண்டபமொன்றை இடித்துக் கட்டியதற்காகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னேஸ்வரம் கோவிலானது சுமார் 2300 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும்.
தற்போதுள்ள கட்டிடம் சுமார் 600 வருடங்களுககு முன் பராக்கிரமபாகு மன்னன் கட்டுவித்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இந்தக் கட்டிடத்தின் புராதன பெறுமதி காரணமாக 2009ம் ஆண்டு தொடக்கம் விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலமாக இக்கோவில் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனவே அங்கு சிறியதொரு மாற்றம் செய்வதாயினும் தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதி பெற வேண்டிய நிலை எற்பட்டுள்ளது.
இந்நிலையில் தொல்பொருள் திணைக்களத்தின் முன் அனுமதியின்றி கோவில் பிரகாரத்தினுள் இருந்த பூஜை மண்டபமொன்றை இடித்து, அதனைப் புதுப்பிக்க முனைந்த குற்றச்சாட்டில் சந்தேக நபரான கோவிலின் உதவி குருக்கள் சர்வேஸ்வர ஐயர் பத்மநாப குருக்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவிலின் பிரதம குருக்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஒன்பதே மாதத்தில் 690 மில்லியன் தங்கம் பறிமுதல்
கடந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் சட்டவிரோதமாக தங்கம் கடத்த முயற்சித்தவர்களிடம் இருந்து 690 மில்லியன் ரூபா தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் எடுத்து வர முயன்ற மற்றும் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல முயன்ற போது பிடிபட்ட தங்கத்தின் பெறுமதியே இதுவாகும்.
இதன் மொத்த எடை 130 கிலோ கிராம் என்று சுங்கத்திணைக்களம் அறிவித்துள்ளது.
தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் நூற்றுக்கும் அதிகமான சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கம் கடத்துவதற்கு உடந்தையாக இருந்த விமான நிலைய ஊழியர்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இவை தவிர வடக்கு கடற்பிரதேசத்திலிருந்து கடற்படையினரும் பெருந்தொகையான தங்கக் கட்டிகளை அண்மையில் கைப்பற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த தங்கக் கட்டிகள் இந்தியாவுக்கு கடத்திச் செல்வதற்காக மீனவர் படகுகளில் எடுத்துச் செல்லப்பட்டபோது கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
http://www.tamilwin.com/show-RUmszARXKWew1.html


காணாமல் போனவர்களை நினைவுகூரும் தேசிய தினம்- சப்ரகமுவ பல்கலை மீள் திறப்பு: நாளை ஆராய்வு
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 05:05.45 AM GMT ]
இலங்கையில் காணாமற்போனவர்களை நினைவுகூரும் வகையில் தேசிய தினம் ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27ம் திகதி காணாமற்போனவர்களுக்கான தேசிய தினமாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக காணாமற்போனவர்களுக்கான அமைப்பு அறிவித்துள்ளது.
சீதுவை, ரத்தொளுகமை சந்தியில் உள்ள காணாமல் போனவர்களுக்கான நினைவுத் தூபி அருகே இந்த வைபவம் நடைபெறவுள்ளது.
காணாமல் போனவர்களை நினைவு கூரும் வகையில் தூபிக்கு மலரஞ்சலி செய்யவும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
இந்த வைபவத்தில் ராவய பத்திரிகையின் பிரதம ஆசிரியர் விக்டர் ஐவன் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.
சகல சமயங்களையும் சேர்ந்த முக்கிய மதகுருமாரும் இவ்வைபவத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
1988-89ம் ஆண்டு காலப்பகுதியில் தென்னிலங்கையின் உள்நாட்டுக் கிளர்ச்சியின் போது 69 ஆயிரம் சிங்கள இளைஞர்கள் காணாமல் போயிருந்தனர்.
இது குறித்து அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, ஜெனீவா வரை சென்று குரல் கொடுத்திருந்தார்.
எனினும் 2009ம் ஆண்டு நடைபெற்ற விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின்போது ஒன்றரை லட்சம் அப்பாவி மக்கள் காணாமல் போயுள்ளனர்.
இது குறித்து அரசாங்கம் எதுவித கரிசனையும் காட்டத் தயாராக இல்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மீள் திறப்பு! நாளை ஆராய்வு
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தை மீளத் திறப்பது குறித்த கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது. அரசாங்கத்தின் உயர்கல்விக் கொள்கைகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவதில் காட்டும் அசிரத்தை போன்றவற்றைக் கண்டித்து சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மாணவர்களின் தங்குவிடுதியைத் திறந்து வைப்பதற்காக அங்கு சென்றிருந்த அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவுக்கும், மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையைத் தளர்த்துவதற்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
இதன் பிரதிபலனாக நாளை பல்லைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது பல்கலைக்கழகத்தை மீளத் திறப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARXKWew2.html

Geen opmerkingen:

Een reactie posten