ஆஸ்திரேலியாவில் இருந்து வீட்டை விட்டு ஓடிப்போய் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் வெளியிட்டுள்ள மிரட்டல் வீடியோ ஒன்றில் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையிலும், பிரிட்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையிலும், ஐ.எஸ்.ஐ.எஸ் கொடி பறக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என்று மிரட்டியுள்ளார். இந்த மிரட்டல் வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இருந்து வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது அப்துல்லா எலிமிர் என்ற இளைஞர் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசும் வீடியோ ஒன்று நேற்று வெளியாகியுள்ளது. இந்தவீடியோவில் அப்துல்லா எலிமிர் அருகில் பல ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் உள்ளனர்.
இந்த வீடியோவில் எலிமிர் பேசியதாவது, “ஐரோப்ப்ய நாட்டு தலைவர்களுக்கும், அமெரிக்க அதிபர் ஓபாமா மற்றும் இங்கிலநது பிரதமர் ஆகியோர்களுக்கும் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், நாங்கள் வேண்டும் என்று இந்த ஆயுதங்களை கையேந்தவில்லை,நாங்கள் இந்த புனிதப்போரைநிறுத்தப்போவது இல்லை. எங்களுக்குரிய நிலங்களை நாங்கள்அடையும் வரை எங்கள் ஆயுதங்களை கீழே போடப்போவது இல்லை.ஒவ்வொரு கொடுங்கோலனின் தலையை எடுக்கும் வரை மற்றும் ஓவ்வொரு தேசத்திலும் உயரே கறுப்புக்கொடி பற்க்கும் வரை நாங்கள் சண்டையை நிறுத்தப் போவது இல்லை நாங்கள் உங்களுடன் போரிடுவோம். உங்களை தோற்கடிப்போம்
இந்த கூட்டணியை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கையை பொருட்படுத்தாமல் பக்கிங்காம் அரண்மனை மற்றும் வெள்ளை மாளிகையின் மேல் எங்கள் கொடி பறக்கும் வரை ஐ.எஸ்.ஐ.எஸ் ஓயாது என்று கூறியுள்ளார்.இவன் அவுஸ்ரேலியாவை விட்டு வெளியேறியதில் இருந்து இவனது குடும்பத்தினர் மனமுடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவுஸ்ரேலியாவின் அரசு செய்தி தொடர்பாளர் கூறுகையில், இது போன்ற சம்பவங்களினால் தான் அவுஸ்திரேலியா மற்ற நாடுகளுடன் சேர்ந்து ஈராக்கின் ஐ.எஸ்.ஐ.எஸ்-யை அழித்து நாட்டை பாதுகாக்க போராடுகிறது என தெரிவித்துள்ளார்.
- See more at: http://www.canadamirror.com/canada/33006.html#sthash.9AiBV51l.dpuf