கனடா கலிபக்ஸ் பகுதியில் ஆயுததாரி கைது. ஆயுதமும் மீட்பு !
0
கலிபக்ஸ் நகர மத்தியில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது எனவும் எந்த விதமான துப்பாக்கி மீட்கப்பட்டது என்று தெரிவிக்கப்படவில்லை.
நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச்சூட்டு நிகழ்வுக்கும் இதற்கும் ஏதாவது தொடர்புள்ளதா என தெளிவாக தெரியவில்லை எனவும் இது தொடர்பான மேலதிக விபரங்களை (902) 490-5020 எனும் தொலைபேசி இலக்கத்தில் தெரிவிக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
வெள்ளை மாளிகையினுள் நுழைந்தவரை விரட்டி பிடித்த மோப்ப நாய்கள்! அமெரிக்காவில் பரபரப்பு.
0
இந்நிலையில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையினுள் நேற்று முன்தினம் மீண்டும் ஒரு மர்ம நபர் வேலியை தாண்டி உள்ளே நுழைந்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ‘சீக்ரட் சர்வீஸ்’ படையை சேர்ந்த மோப்ப நாய்கள் மர்ம நபரை விரட்டி பிடித்தன. நாய்களால் பிடிபட்ட மர்ம நபரை ‘சீக்ரட் சர்வீஸ்’ அதிகாரிகள் கைது செய்தனர்.
பிடிபட்ட மர்ம நபரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபரின் பெயர் டொமினிக் அதிசன்யா, என்றும் வயது 23 என்றும், மேரிலாண்ட் என்ற பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அவர் வெள்ளை மாளிகையினுள் வேலி தாண்டி குதித்ததின் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம், அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகை 90 நிமிடம் மூடப்பட்டு, பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
- See more at: http://www.canadamirror.com/canada/33003.html#sthash.RNkRXYeA.dpuf
Geen opmerkingen:
Een reactie posten