தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 24 oktober 2014

சாகீர் ஹூசைன் உட்பட மூன்று பேருக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரான இராணுவ மேஜர் ஜெனரல்
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 09:05.03 AM GMT ]
மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சி விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இவர், ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் உள்ள சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சின் செயலாளராக பணியாற்றினார்.
சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சின் செயலாளராக முன்னாள் பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதித் தேர்தலில் பொலிஸாரின் சேவைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த நியமன மாற்றங்கள் வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnt4.html
இளவரசர் சார்ள்ஸின் கடன் அட்டையை பயன்படுத்தி மோசடி செய்த மாநகர உறுப்பினர்
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 09:33.56 AM GMT ]
பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் பயன்படுத்தும் கடன் அட்டைக்கு இணையான கடன் அட்டையை பயன்படுத்தி 86 லட்சம் ரூபாவை மோசடி செய்த மாநகர சபை உறுப்பினர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர - கோட்டே மாநகர சபையின் உறுப்பினரான டயர் ரஞ்சன் என அழைக்கப்படும் தோன் ரஞ்சன் பொன்னம்பெரும உட்பட மூன்று பேரை தலா பத்து லட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
1996-97 ஆம் ஆண்டு காலத்தில் இந்த மோசடி நடந்துள்ளதாக கூறப்படுவதுடன் வழக்கு 1999 ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
ஹொங்கொங் எண்ட் ஷங்காய் வங்கியின் லண்டன் கிளையின் தலையீட்டை அடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாநகர சபை உறுப்பினர் டயர் ரஞ்சன், 90 ஆம் ஆண்டுகளில் மக்கள் வங்கியின் பாதுகாப்பு பிரிவில் ஊழியராக பணியாற்றினார்.
எனினும் தற்போது அவர் நுகேகொட பிரதேசத்தில் ரஞ்சன் டயர் ஹவுஸ் உட்பட பல வியாபார நிறுவனங்களுக்கு சொந்தகாரர் என்பதுடன் கோடிஸ்வரருமாவார்.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnt5.html
சாகீர் ஹூசைன் உட்பட மூன்று பேருக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 09:33.57 AM GMT ]
இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட மூன்று இலங்கை பிரஜைகளுக்கு எதிராக சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ அமைப்புக்கு உதவி வழங்கி, இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சாகீர் ஹூசைன், சிவபாலன் மற்றும் மொஹமட் சலீம் ஆகியோர் இந்திய பாதுகாப்பு பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகனை முன்வைத்துள்ள இந்திய தேசிய விசாரணை அமைப்பின் அதிகாரிகள், இது சம்பந்தமாக மேலும் 6 பேரை கைது செய்ய உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் இலங்கையில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் பணியாற்றிய இருவர் இருப்பதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnt6.html
பொன்சேகாவுக்கு மீண்டும் குடியுரிமை கோரி 10 லட்சம் கையெழுத்து
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 10:22.59 AM GMT ]
ஜனநாயகக் கட்சியின் தலைவரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பறிக்கப்பட்ட குடியுரிமையை மீண்டும் வழங்குமாறு கோரி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது.
கம்பஹா மாவட்டம் கிரிந்திவளை நகரில் பொதுமக்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன.
நாடு முழுவதிலும் பல பிரதேசங்களில் பொதுமக்களிடம் கையெழுத்துக்களை பெற்று அதனை சர்வதேசத்திற்கு அனுப்பி வைக்க ஜனநாயகக் கட்சி திட்டமிட்டுள்ளது.
சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் குடியுரிமை வழங்க வேண்டும் என்பதற்காக கிரிந்திவல நகருக்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வருகை தந்து மகஜரில் கையெழுத்திட்டதாக ஜனநாயகக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ரஜித ஹப்புவாராச்சி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnuz.html

Geen opmerkingen:

Een reactie posten