தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 oktober 2014

கனடா சென்றதும் மாயமாகும் பாக்கிஸ்தான் விமானப் பணிப்பெண்கள்: 16 பேரைக் காணவில்லை !

எபொல்லா வைரஸை அமெரிக்காவுக்குள் முதன் முதல் கொண்டு சென்ற புண்ணியவான் இவர் தான் !

[ Oct 03, 2014 05:04:10 AM | வாசித்தோர் : 4700 ]
ஆபிரிக்க நாடான லைபீரியாவில் பலர் எபொல்லா என்னும், படுமோசமான வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார். அன் நாட்டில் இருந்து எரிக் டங்கன் என்னும் நபர் அமெரிக்காவில் உள்ள டாலஸ் விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார். அவடது காதலி எபொல்லா வைரஸ் தாக்கி இறந்து விட்டார். எபொல்லாவின் தாக்கம் தனக்கு இருப்பதை உணர்ந்தும் அவர், அமெரிக்காவுக்குள் சென்றுவிட்டார். விமான நிலையத்தில், பல கேள்விகள் இதுதொடர்பாக கேட்க்கப்பட்டபோதும், அனைத்திற்க்கு இல்லை என்று பதிலை வழங்கிய பின்னரே அவர் அமெரிக்காவுக்குள் பிரவேசித்துள்ளார். தற்போது அவருக்கு எபொல்லா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் பயணித்த விமானத்தில் பயணித்த நபர்கள் உட்பட சுமார் 100 பேருடன் அவர் பழகியுள்ளார்.
இந்த 100 பேரையும் தேடிக் கண்டு பிடிக்கும் பணியில் ஐக்கிய நாடுகளின் சுகாதாரப் பிரிவு இறங்கியுள்ளது. இதேவேளை அமெரிக்காவில் அவர் பொலிசாருடனும் பேசியுள்ளார். குறித்த இந்த வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான நபரிடம் இருந்து இந்த எபொல்லா வைரஸ் மிக இலகுவாக மற்றைய நபருக்குப் பரவும். இது காற்றில் கூட பரவ வாய்ப்பு உள்ளதாக தற்போது பெரும் குண்டு ஒன்றை துக்கிப்போட்டு உள்ளது ஐ.நாவின் சுகாதார திணைக்களம். இதனால் பலர் ஆடிப்போயுள்ளார்கள். அமெரிக்கா தற்போது பெரும் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என அறியப்படுகிறது.
குறித்த நபரை வீட்டில் கைதுசெய்து வைத்துள்ள அமெரிக்க அதிகாரிகள், அந்த சுற்றுவட்டாரத்தையே சீல் வைத்து அங்குள்ள அனைவரையும் பரிசோதித்து வருகிறார்கள்.
http://www.athirvu.com/newsdetail/1135.html

கனடா சென்றதும் மாயமாகும் பாக்கிஸ்தான் விமானப் பணிப்பெண்கள்: 16 பேரைக் காணவில்லை !

[ Oct 03, 2014 05:19:35 AM | வாசித்தோர் : 5780 ]
பாகிஸ்தான் ஏர்லைன் நிறுவனத்தில் பணிபுரிந்த 16 விமான பணிப் பெண்கள் கனடாவில் வைத்து திடீரென மாயமாகியுள்ள நிலையில் இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இருநாட்டு விமான நிறுவனங்களும் அறிவித்துள்ளன. கடந்த மாதம் பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த குறித்த பணிப்பெண்கள் தங்கியிருந்த விடுதியில் வைத்தே இவ்வாறு மாயமாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளனது. கடந்த 5 மாதங்களில் 16இக்கும் மேற்பட்ட விமானப் பணிப்பெண்கள் கனடாவிற்கு சென்ற பின்னர் பாகிஸ்தான் திரும்பவில்லை என்பதை பாகிஸ்தான் விமான சேவை நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.
இவர்கள் காணமல் போவது ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்லவே. பாக்கிஸ்தான் நாட்டவர்கள், கனடா சென்று குடியேறுவது என்றால் அது பெரும் விடையம். கனவிலும் பலிக்காத விடையமாக உள்ளது. வெளிநாடுகளில் சென்று குடியேற விரும்பும் இதுபோன்ற பாக்கிஸ்தான் பெண்கள், விமான பணிப் பெண்களாக தம்மை இணைத்துக்கொள்கிறார்கள். வேண்டி நாட்டுக்குச் சென்றதும் அங்கே மறைந்துவிடுகிறார்கள். பின்னர் என்ன அகதிகள் அந்தஸ்தை கோருவார்கள். ஒரு பெண் மாயமாக மறைந்தால் , ஏதவது நடந்து இருக்குமோ என்று நினைக்கமுடியும். சொல்லிவைத்தது போல 16 பெண்கள் காணமல் போயுள்ளபோதே தெரியவேண்டாமா ? இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று ...
http://www.athirvu.com/newsdetail/1136.html

Geen opmerkingen:

Een reactie posten