தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 oktober 2014

கூட்டமைப்புக்கு தேசிய மட்டத்தில் அங்கீகாரம்: இரா. சம்பந்தன்!

மகிந்த ஆசியாவின் சிரேஷ்ட தலைவர், முஸ்லிம்கள் அவருக்கே வாக்களிக்க வேண்டும்: அஸ்வர் எம்.பி.
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 05:33.38 AM GMT ]
ஆசியாவில் மிகவும் சிரேஷ்ட தலைவராக கருதப்படும் ஜனாதிபதிக்கு முஸ்லிம் உலகத்தின் உதவி குறையாது எனவும் அது தொடர்ந்தும் கிடைக்கும் எனவும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முஸ்லிம் மக்கள் அன்பை வென்றுள்ள ஜனாதிபதிக்கு அவரது தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு முஸ்லிம் ஆதரவு வழங்கி, அடுத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி, பலஸ்தீனத்திற்கு நிதியுதவி வழங்கியதை எதிர்க்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதில்லை என்று முஸ்லிம் மக்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.
நாடாளுமன்றத்திற்குள் முஸ்லிம்களின் ஷரியா சட்டத்தை விமர்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்துகளுக்கு எதிரான முனைப்புகளை இதுவரை அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளவில்லை.
இதனால், ஐக்கிய தேசியக் கட்சியின் மீது முஸ்லிம்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர் எனவும் அஸ்வர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVeoz.html
கூட்டமைப்புக்கு தேசிய மட்டத்தில் அங்கீகாரம்: இரா. சம்பந்தன்
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 05:39.25 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தற்போது தேசிய மட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இது தமிழ் மக்களுக்கு முக்கியமானது என நாங்கள் கருதுகிறோம். இதனால், எதிர்காலத்தில் நாட்டு மக்களுக்கு ஒரு தீர்மானகரமான காலம் உதயமாகும்.
இந்திய - இலங்கை உடன்படிக்கையின் படி நாட்டில் வாழும் சகல இனங்களும் தமது உரிமைகளை பாதுகாத்து வாழக்கூடிய உரிமை வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாட்டின் அரசு உருவாக்கப்பட வேண்டும்.
நாட்டில் சிறுபான்மை இனம் வாழவில்லை என தெரிவித்த ஜனாதிபதி, நாட்டில் பல தேசிய இனங்கள் வாழவில்லை என என்றும் கூறவில்லை.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இலங்கையில் தேசிய பிரச்சினை, வடக்கின் அபிவிருத்தி போன்றன குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
எனினும் இன்னும் வடக்கில் உள்ள மக்களுக்கு வாழ்வதற்கு காணிகள் இல்லை. இந்த நிலைமையில் இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு இன்னும் 10 வருடங்களுக்கு தீர்வு கிடைக்காது.
கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் எமக்கு இருந்தது. எனினும் அந்த சந்தர்ப்பத்தை நாம் தவறவிட்டோம்.
எமது உரிமைகளை பெறுவதற்காக ஆரம்பிக்கப்பட உள்ள சத்தியாகிரக போராட்டத்திற்கு குறிப்பாக முஸ்லிம் சமூகம் ஆதரவு வழங்க வேண்டும். அத்துடன் கட்சி என்ற வகையிலும் நாம் வலுவாக வேண்டும்.
ஆனால், இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குழப்பமடைந்துள்ளதாகவும் அறிய கிடைத்துள்ளது எனவும் இரா. சம்பந்தன் கூறியதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATXKVeo0.html

Geen opmerkingen:

Een reactie posten