கறுப்பு யூலை சம்பந்தமாக உத்தியோக பூர்வமான எதிர்க்கட்சி தலைவர் Tom Mulcair கீழ் காணப்படும் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இன்று புதிய ஜனநாயக கட்சியின் சிந்தனைகள்  கனடா மற்றும் உலகம் பூராகவும் வாழும் தமிழ் சமுதாயத்தின் கறுப்பு யூலை நினைவாக உள்ளன.
1983 யூலை 23-ந் திகதி தமிழ் மக்களிற்கு இலக்கு வைத்து அவர்களிற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டவன்முறைகள் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வதிவிடங்கள் மற்றும் தொழில்கள் அழிக்கப்பட்டு அவர்கள் புலம்பெயரந்ததையும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதையும் நாம் நினைவு கூருகின்றோம். இந்த வன்முறைகளை இழைத்தவர்களோ அல்லது அதன் அமைப்புக்களோ தங்கள் நடவடிக்கைகளிற்கு ஒரு போதும் பொறுப்பேற்க வில்லை.
நினைவு கூரும் இவ் வேளையில்  இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் எங்கள் உறுதிப்பாட்டை புதுப்பிப்பதோடு  அழுத்தத்தையும் கொடுப்போம்.
எல்லா நாடுகளிலும் அடிப்படை மனித உரிமைகள் கடைப் பிடிக்கப் படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது கனடா மற்றும் உலக நாடுகளின் பொறுப்பாகும்.
மேலும் கனடா மற்றும் உலக நாடுகளில் உள்ள புலம்பெயர் குழுக்கள் மீது இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடையை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம்.