தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 24 juli 2014

வட இலங்கையில் பெரும் அழிவுகள்: நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி!

வெள்ளைக் கொடியுடன் இலங்கை கடற்படையினரிடம் சரணடையப் போகிறோம்: தமிழக மீனவர்கள் அறிவிப்பு
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 04:48.12 PM GMT ]
தமிழக மீனவர்களும் அவர்களது குடும்பங்களும் இலங்கை கடற்பரப்புக்கு சென்று சரணடையப் போவதாக தெரிவித்துள்ளனர்.
தம்மீது தொடர்ந்தும் இலங்கை கடற்படையினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அத்துடன் கைதுகளும் இடம்பெறுகின்றன.
இதன்காரணமாக தமது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் எதிர்வரும் 28 ஆம் திகதியன்று மாவட்ட நிர்வாகியை சந்திக்கப் போவதாக கூறியுள்ள மீனவர்கள் அவரிடம் தமது மீன்பிடி அனுமதிகளையும் ஆவணங்களையும் கையளிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஆகஸ்ட் 2ஆம் திகதியன்று மீனவர்களும் அவர்களின் குடும்பங்களும் படகுகளில் வெள்ளைக் கொடிகளை பறக்கவிட்டவாறு இலங்கை கடற்படையினரிடம் சரணடையப் போவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்போதாவது தமது வாழ்க்கையை அமைதியாக கொண்டு செல்லமுடியும் என்று அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLcjp6.html

கிளஸ்கோவில் இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாட்டாளர்கள் அனுமதி
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 05:05.37 PM GMT ]
ஸ்கொட்லான்ட், கிளஸ்கோ நகரில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுக்களின் போது மைதானத்துக்கு வெளியே தமிழ் குழுக்கள் இலங்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை நடத்த ஏற்பாட்டாளர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
கிளாஸ்கோ 2014இன் நிறைவேற்று பொறுப்பாளர் டேவிட் கிரிவெம்பேக்கின் தகவல்படி தமிழ் குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு தாம் அனுமதியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விளையாட்டு நிகழ்வின்போது பாதுகாப்பு பிரச்சினைகளை காரணம் காட்டி பொதுநலவாய நாடுகளின் தவிசாளரான இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அந்த நிகழ்வை புறக்கணித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLcjqy.html

வட இலங்கையில் பெரும் அழிவுகள்: நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 09:06.56 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பல கிராமங்களில் பொதுமக்களின் வீடுகள், ஆலயங்கள், பாடசாலைகள், பொதுக் கட்டிடங்கள் என்பன எதுவுமே இல்லாமல் வெட்டவெளியாக இருப்பதாக அங்கு சென்று திரும்பியவர்கள் கூறுகிறார்கள்.
மயிலிட்டி வீரமாணிக்கந்தேவன்துறையில் அமைந்துள்ள முருகன் ஆலயம் மற்றும் கண்ணகை அம்மன் ஆலயங்களில் அந்தப் பகுதி மக்கள் வழிபாடு செய்வதற்காக இராணுவம் அனுமதி வழங்கியிருந்தது.
இதனையடுத்து, மயிலிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களை இராணுவத்தினர் அங்கு அழைத்துச் சென்றிருந்தனர்.
இவ்வாறு மயிலிட்டி பகுதிக்குச் சென்று திரும்பியுள்ள வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற, புனர்வாழ்வு சங்கத் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் அந்தப் பகுதிகளில் முன்னர் இருந்த பல ஆலயங்களையும், பாடசாலைகளையும் காணவில்லை என கூறுகின்றார்.
அங்கு மயிலிட்டி எது பலாலி எது என்று அடையாளம் காண முடியாத வகையில் அந்தப் பிரதேசம் முழுவதுமே சிதைந்து உருமாறிப் போயிருப்பதாக அவர் பிபிசி தமிழோசையிடம் விபரித்தார்.
அந்தப் பிரதேசம் தற்போது இருக்கின்ற நிலையில் அங்கு மீள்குடியேற்றம் சாத்தியமாகுமா என சந்தேகம் எழுப்பியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், எப்படியாவது தமது சொந்தக் காணிகளை மீட்டு.
அங்கு மீள்குடியேற வேண்டும் என்ற மன உறுதி அங்கு சென்று திரும்பிய மக்கள் மனங்களில் தோன்றியிருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

முற்றாக அழிந்துள்ள ஒரு ஆலயம்

நொறுங்கி விழும் நிலையில் ஒரு ஆலயத் தேர்

கடற்கரையோராமாகவும் அழிவுகள்
http://www.tamilwin.com/show-RUmsyHRYLcjqz.html

Geen opmerkingen:

Een reactie posten