இனப்படுகொலை புரிந்த இலங்கைக்கு சலுகைகள் வழங்கக்கூடாது: ஆர்.சரத்குமார்
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 05:19.38 AM GMT ]
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சென்னை உயர்நீதிமன்றத்தில் கச்சத்தீவு தொடர்பான வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவு கடற்பகுதிகளில் மீன்பிடிக்க உரிமை இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கச்சத்தீவு தொடர்பான வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவு கடற்பகுதிகளில் மீன்பிடிக்க உரிமை இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமக்கு உரிமையான பகுதி நமக்கு திரும்பக் கிடைக்க வேண்டும் என்ற நிலையில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டால் தான் அது நியாயமானதாக இருக்கும்.
நடைபெற இருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கச்சத்தீவைத் திரும்பப்பெறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இலங்கை அரசோடு பேசி கச்சத்தீவை உடனடியாக மீட்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருப்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
அதுவே தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை ஓரளவு குறைக்க உதவும் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
வரலாறு காணாத வகையில் இனப்படுகொலை புரிந்த இலங்கைக்கு, உலகமே எதிராக குரல் கொடுத்து நடவடிக்கை எடுக்கத் தயாராகி வரும்போது நாம் அவர்களுக்கு அரசியல் சட்டத்திற்கு புறம்பாக அளித்த சலுகையை திரும்பப் பெறுவது ஒன்றும் தவறில்லை என சரத்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjsz.html
இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள்: இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 05:35.53 AM GMT ]
ஏற்கனவே சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவினை சிறிலங்கா அரசாங்கம் பேணி வருகின்றமை தொடர்பில் இந்தியா அதிருப்தி கொண்டிருந்தது.
இதற்கிடையில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் இலங்கையை பயன்படுத்தி கடல்மார்க்கமாக தென்னிந்தியாவுக்கு ஊடுறுவுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களால் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக இந்தியாவின் பாதுகாப்பு தரப்பினர் எச்சரித்துள்ளனர்.
இவ்வாறான தாக்குதல்கள் காரணமாக இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் உருவாகும் என்ற அச்சத்தில் இந்தியா இருப்பதாகவும் இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதுவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இந்திய அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் முக்கிய அவதானம் செலுத்தி பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்காகவே வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவின் அழைப்பின் பேரில் அங்கு செல்வதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjs1.html
அளுத்கமவில் இராணுவ மீள்கட்டுமானப் பணிக்கு களுத்துறை நீதிமன்றம் இடைக்கால தடை
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 06:02.56 AM GMT ]
அத்துடன் குறித்த வன்முறைகளில் உயிரிழந்த இருவரின் பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்த சட்ட வைத்திய அதிகாரிக்கும் நீதவான் அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.
குறித்த வன்முறையின் போது உயிரிழந்த இருவர் தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்று களுத்துறை மேலதிக நீதவான் ஆய்ஷா ஆப்தீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது உயிரிழ்ந்த இரு நபர்களின் சார்பிலும் ஆஜரான சட்டத்தரணிகளுக்கு மேலகதிகமாக சட்டத்தரணிகள் சங்கத்தின் தலவர் உபுல் ஜயசூரிய தலமையிலான விஷேட சட்டத்தரணிகள் குழு மன்ரில் ஆஜரானது.
இதில் சட்டத்தரணி உபுல் ஜயசூரியவுக்கு மேலதிகமாக சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் அஜித் பத்திரன சட்டத்தரணி பந்துல வீரசிங்க உள்ளிட்ட குழுவினர் ஆஜராகியிருந்தனர்.
இதன் போது மன்றுக்கு விஷேட வேண்டுகோள் ஒன்றை முன்வைத்த சட்டத்தரணிகள் சங்கத்தின் தலவர் உபுல் ஜயசூரிய உள்ளிட்ட குழுவினர் கடந்த மாதம் 15ம் திகதி அளுத்கம மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற வன்முறைகளின் போது இருவர் உயிரிழந்தும் 120 ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரச இரசாயன பகுப்பாய்வுப் பிரிவினர் அங்கு சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டினார்.
இதனைவிட குறித்த வன்முறைகளில் உயிரிழந்தவர்களில் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அதனால் குறித்த இரு ஜனாஸாக்களையும் மீண்டும் தோண்டி எடுத்து பரிசோதனைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.
அத்துடன் இவ்விரு இளைஞர்களும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இடம் மட்டுமல்லாது எரிக்கப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளில் அரச இரசாயன பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.
அதனால் அந்த இடங்களில் உடனடியாக அரச இரசாயன பகுப்பாய்வுகளுக்கு உடன் உத்தரவு பிறப்பிப்பதுடன், அந்த இடங்களில் மட்டும் தற்போதைக்கு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள மீள் கட்டுமான நடவடிக்கைகளுக்கு தற்காலிகமான தடை உத்தரவொன்றை பிறப்பிக்க வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கத்தினரால் மன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனை அடுத்து முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்த நீதிவான் ஆய்ஷா ஆப்தீன், அரச இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக கூறப்படும் இடம், தீயினால் சேதமடைந்த கடைகள் மற்றும் வீடுகளில் மீள் கட்டுமான நடவடிக்கைகளை தொடர இராணுவத்தினருக்கு தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்தார்.
அத்துடன் எதிர்வரும் 31ம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிவான் அன்றைய தினம் அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை மன்றில் சமர்பிக்குமறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அத்துடன் வன்முறைகளில் உயிரிழந்த மொஹம்மட் ஸஹ்ரான் மற்றும் மொஹம்மட் சிராஸ் ஆகியோரின் மரணம் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரியையும் அன்றைய தினம் மன்ரில் ஆஜராகுமாறு நீதிவான் அழைப்பாணை பிறப்பித்தார்.
நேற்றைய வழக்கு விசாரணைகளில் உயிரிழந்த இரு இளைஞர்களின் குடும்பத்தினர் சார்பில் சட்டத்தரணிகளான ஹஸ்ஸாலி ஹுசைன்,எம்.சால்மான், சப்ராஸ் ஹம்சா, ரமீஸ் பசீர் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjs4.html
Geen opmerkingen:
Een reactie posten