[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 03:38.27 AM GMT ]
முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி இதனை குறிப்பிட்டுள்ளார்.
அளுத்கம புனர் அமைப்புக்காக 200 மில்லியன் ரூபாய்களை இலங்கை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இந்தநிலையில் இது, கட்டிட சேதங்களை மறைக்கக்கூட போதாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதியாக முஸ்லிம்கள் தம்மை தாமே தாக்கிக் கொண்டதாகவும் தமது வீடுகளுக்கு தாமே தீயிட்டுக் கொண்டதாகவும் அரசாங்கம் கூறுவதாக ஹசன் அலி குறிப்பிட்டார்.
இலங்கை எமது நாடு எனவே அங்கிருந்து வெளியேறவோ அல்லது மற்றவரின் உதவியை எதிர்பார்க்கவோ தேவையில்லை என்றும் ஹசன் அலி தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjr3.html
பரவிப்பாஞசான் மக்களின் மீள் குடியேற்றத்தை வழியுறுத்தி கிளிநொச்சியில் இன்று கவனஈர்ப்பு போராட்டம்
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 04:29.57 AM GMT ]
யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் இன்றுவரை மீள் குடியேற்றப்படவில்லை.
இவர்கள் பல ஆண்டுகளாக நண்பர்கள்,உறவினர்கள், வீடுகளில் அகதிகளாக தங்கிவாழ்கின்றனர்.
இவர்களுடைய வீடுகள் மற்றும், பொது நிலையங்கள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 28 ஆம் திகதி இம்மக்களின் மீள் குடியேற்றத்தை வழியுறுத்தி கவனஈர்ப்பு போராட்டம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் மேற்கொள்ளப்பட்டது.எனினும் இம்மக்களின் மீள்குடியேற்றம் பற்றிய ஆக்கப்பூர்வமான எந்த ஓரு நடவடிக்கையும் இதுவரை உரிய அதிகாரிகளால் மேற்கொள்ளகப்படவில்லை.
பரவிப்பாஞ்சான் பகுதிகள் உட்பட இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்குச் சொந்தமான காணிகள், வீடுகளில் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து உடனடியாக வெளியேறுவதுடன்,அந்த மக்களின் வீடுகளையும், நிலங்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியும்,இது தொடர்பில் சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பு விடுத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjr4.html
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்: பான் கீ மூன்
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 05:02.57 AM GMT ]
பான் கீ மூனின் இந்தக்கோரிக்கையை அவரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் நேற்று வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் தென்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பில் செயலாளர் கரிசனை கொண்டுள்ளதாகவும் டுஜாரிக் குறிப்பிட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனையின்படி, சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்ததாக பான் கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjr6.html
Geen opmerkingen:
Een reactie posten