தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 4 juli 2014

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!- ஒன்றுபடு தமிழா ஒன்றுபடு -பாகம்- 5

இலங்கை அரசின் மீது நடைபெறவிருக்கும் போர்க்குற்ற விசாரணை நடந்தே தீரும் என்பதை அதன் நிபுணர் குழு அங்கத்தவராகிய அஷ்மா ஜகாங்கிர் பிபிசி வானொலிக்கு அளித்த பேட்டியில் திட்ட வட்டமாக கூறியுள்ளார்.
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
இலங்கை அரசின் மீது நடைபெறவிருக்கும் போர்க்குற்ற விசாரணை நடந்தே தீரும் என்பதை அதன் நிபுணர் குழு அங்கத்தவராகிய அஷ்மா ஜகாங்கிர் பிபிசி வானெலிக்கு அளித்த பேட்டியில் திட்ட வட்டமாக கூறியுள்ளார்.
அரசியலுக்கு அப்பாற்பட்ட முறையில் நிபுணர்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள் பிபிசி போன்ற உலக மக்களால் விரும்பப்படும் செய்தி நிறுவனங்கள் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை குறித்து தலைமை தாங்கப் போகும் நிபுணர்களை பேட்டி காணத் தொடங்கி விட்டமையானது. இலங்கை அரசிற்கெதிரான உளவியல் போர் என்றும் கருத்திற் கொள்ளலாம்.
உளவியல் ரீதியாக சிங்களத் தலைவர்கள், அறிஞர்கள் சிங்கள் மக்களைச் சந்திக்கும் கூட்டங்களில் ஐ,நா மனித உரிமை சபையில் நிறைவேறிய போர்க்குற்ற தீர்மானங்களை அறிந்தும் அறியாதவர்கள் போல் பிதற்றுகின்றனர்.
மணலைக் கயிறாய் திரித்த ராஜபக்சவும் அவரின் தம்பிமாரும்
வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதற்கேற்ப தமிழ் மக்கள் 150.000 பேரை 2009 மேயில் கொலை செய்து விட்டு சிங்கள ஆட்சியாளர்கள்  2010 ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி, காலிமுகத்திடலில் வெற்றி விழாக் கொண்டாடியதை நாம் மறந்து விடக் கூடாது.
அந்தக் கூட்டத்தில் பேசிய இலங்கை ஐனாபதி ராஜபக்ச அவர்கள் நா.க. த. அரசின் செயற்பாட்டாளர் ருத்ரகுமாரனையும், வண பிதா இம்மானுவல் அடிகளாரையும் (GTF) மிக விரைவில் கைது செய்து விடுவோம். தமிழ்ப் பயங்கரவாதிகளை முற்றாக அழித்து விடுவோம் உலகம் எங்கள் பக்கம் தான் இருக்கின்றது. என சிங்கள மக்களிடம் இனத் துவேசத்தை வளர்த்தெடுக்கும் பேச்சுக்களை அள்ளி வீசினார்.
ராஜபக்சவின் பேச்சுக்கள், சிங்கள அரசின் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் உளவியற் தாக்கத்தை ஏற்படுத்தியவற்றையும் நாம் என்றுமே மறந்து விடக்கூடாது.
2010ம் ஆண்டு தமிழீழத் தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் சிங்கள அரசிற்கெதிரான போராட்டத்தை ஆரம்பிக்கும் முன்னர் ராஜபக்ச “மணலைக் கயிறாய் திரித்துக் காட்டி விட்டேன் இதோ பாருங்கள் என்று முழங்கித் தள்ளினார்.
சிங்கள மக்களுமோ நம்பினர், தமிழ் மக்களோ, எத்தனை முறை வீழ்ந்தாலும் அத்தனை முறை எழுவோம் என்பதை செயலில் காட்டத் தொடங்கினர்.
நம்பிக்கை மலையை அசைக்கும்!
ஒன்றுபட்ட தமிழர்கள் ஆயிரக்கணக்கான சிந்தனையாளர் வட்டங்களை நாடு நாடாக அமைத்தார்கள். எழுத்தாளன் என்ற வகையில் 100 க்கு மேற்பட்ட நாடுகளில் சிந்தனை வட்டத்துடன் தொடர்புடைய பல எழுத்தாளர்களின் தொடர்புகள் கிடைத்த போது சிந்தனையாளர் வட்டம் குறித்து, என்னை நினைத்து நானே வியந்து கொண்டேன். என்னைப் பொறுத்தவரை சிந்தனையாளர் வட்டம் என்பது புதியதொன்றாகவே இருந்தது.
தமிழர்களான அரசியற் துறைப் பேராசிரியர்கள், கலாநிதிப் பட்டங்களை பெற்றெடுத்தவர்கள், உலகம் முழுவதும் ஒரு குடையின் கீழ் ஒன்றாகச் செயலாற்றத் தொடங்கினார்கள்.
தமிழ் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்ற முழக்கத்துடன் தொடங்கிய நா.க.த.அரசு, உலகத்தமிழர் பேரமைப்பு,  பிரித்தானியத தமிழர் அமைப்பு, நாம் தமிழர் இயக்கம், தமிழ்த் தேசிய இயக்கம். போன்றவை இன்று வரைக்கும் சளைக்காது சிங்களத்திற்கெதிராக போராடிக்கொண்டே இருக்கின்றார்கள்.
நாடு நாடாக அமைக்கப்பட்ட தமிழர்களின் சிந்தனை வட்டங்கள். சிந்திச் சிதறாமல் ஒற்றுமையாகச் செயற்பட்டதன் விளைவே இன்றைய போர்க்குற்ற விசாரணையாகும்..போர்க்குற்ற விசாரணையின் ஒரு வீத வெற்றியில் நிற்கும் தமிழினம் இன்னும் அக்கறையாகவும், ஓர்மத்துடனும் செயற்பட்டாற்தான் விசாரணை முடிந்து 99 வீத வெற்றியை நாம் அடையமுடியும்.
ஈழத்தமிழர் பிரச்சினை பாதுகாப்புச் சபையின் தீர்மானத்திற்குப் போகப் போகின்றதா? குற்றஞ் சாட்டப்பட்ட அனைவரையும் விசேட நீதிமன்றம் நிறுவப்பட்டு விசாரிக்கப்படுவார்களா? தென்சூடானா? கம்போடியாவா? இரண்டு, மூன்று வருடத்திற்குள் நடக்கப் போவது என்ன என்பதை உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கின்றது.
புலத்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் தமிழர்களுக்காக சளைக்காது நின்று போராடும் தமிழ் அறிஞர்கள் பக்கம் கைகொடுத்து எதிரியை வீழத்துவார்கள் என்பதனை ஆரம்பத்திலேயே கண்டு கொண்டோம்.
தமிழீழத்திற்காக எந்த வடிவத்திலும் மரணிப்பதும் வாழ்வாகும்
விடுதலைப் புலிகள் இறுதிக்கட்ட யுத்தத்தில் கூட இலங்கை அரசை போர்க்குற்றங்களில் சிக்க வைப்பதில் கண்ணும் கருத்துமாயிருந்தனர். ஏனென்றால் போராடி உயிர் கொடுத்து வாழ வழிவகுத்தவர்கள், சரணடைந்து, சித்திரவதைப்பட்டு தலைவனின் ஆணையின் கீழ் சிங்கள அரசினை போர்க்குற்ற விசாரணைக்குள் தள்ளிவிட்டார்கள்.
மரியாதைக்குரிய நடேசன், தளபதி ரமேஸ், உலக சித்தாந்த வல்லுனர் பாலகுமார் போன்ற நூற்றுக்கணக்கான முக்கிய போராளிகள் சரணடைந்து சித்திரவதைப்பட்டு இன்று சிங்கள மக்கள் அனைவரையும் உலக சமுதாயத்தின் முன்னே குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக்கி விட்டு தமது இனிய உயிர்களை எமக்காக அர்ப்பணித்து விட்டு, புலம்பெயர் தமிழர்களிடம் போராட்டத்தை ஜனநாயக வழியில் தொடர்ந்து நடத்துங்கள் என்று கட்டளையிட்டுவிட்டு இலட்சியப் பாதையில் மரணத்தை வாழ்வாகக் கொண்டார்கள்.
போரளிகளைப் பொறுத்த மட்டில் தமிழ் ஈழத்திற்காக என்ன வடிவத்திலும் மரணிப்பதும் வாழ்வாகும். அவர்களின் மரணம் என்பது எழுத்து வடிவத்தில் சொல்ல முடியாத பொருளாகும்.
சிங்கள அரசியல் அறிஞர்கள், அரசியல்வாதிகள், இராணுவத் தளபதிகள் அனைவரும் எழுதிய நூல்களில் விடுதலைப் புலிகளின் வீரத்தினை புகழந்துள்ளமையே இதற்குச் சான்றாகும்.
வரலாற்றுக் கவிஞன் பாரதி, பாரதிதாசன் போன்றோர் தங்கள் தீர்க்க தரிசனமான பாடல்களில் கூட தமிழ் மக்களை, போராட்ட வல்லமை கொண்ட படையாகவே படைத்து விட்டுச் சென்றார்கள்.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்பதை புலிப்படையைப் பற்றி தீர்க்க தரிசனமாகப் பாடிச் சென்றார். பெருங் கவிஞன் பாரதிதாசன்.
அவர் சொன்னது போல் “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே” என்ற பாடலையும் செயற்திறனில் காட்டிய தமிழினத்தின் விடிவுகாலம் வெகு தூரத்தில் இல்லை.
நாளை தமிழ் ஈழத்தில் சந்திப்போம் என்ற வாசகத்தையும் நினைவுபடுத்தி, பல அமைப்புக்களில் இருந்தாலும், நமது பொது எதிரியான சிங்களவனை வெற்றி கொள்ள செயல் வீரர்களாய் தொடர்ந்து பாடுபடுவோம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.
ஆ.கோபால்
ரொறன்ரோ. கனடா.
arumugamgopal9@gmail.com
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjs6.html

Geen opmerkingen:

Een reactie posten