தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 25 juli 2014

புரட்சியை எற்படுத்தும் இணையத்தளங்கள்! இளைஞர்கள் மீண்டும் துப்பாக்கிகளை ஏந்தலாம்: ராஜித சேனாரத்ன!

இலங்கையர் மூவரும் சந்தேகத்திற்குரியவர்கள் இல்லை: தமிழக பொலிஸார்
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 02:50.47 AM GMT ]
இலங்கையர் மூவர் தொடர்பில் தமிழகப் பொலிஸாரும் கியூ பிரிவினரும் தமது விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதன் அடிப்படையில் குறித்த மூவரும் பிரச்சினைகளில் தொடர்பில்லாதவர்கள் என்று காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
இலங்கையை சேர்ந்த மூன்று பேர் ஆடை கொள்வனவுக்காக சென்றிருந்த வேளையில் வாடகைக்கு இருந்த வீட்டின் சொந்தக்காரர் வழங்கிய முறைப்பாட்டின் பேரில் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பூர் சென்ற இவர்கள், வீடு ஒன்றில் வாடகைக்கு இருந்துள்ளனர். இந்தநிலையில் வீட்டின் சொந்தக்காரர் அந்த வீட்டை புதிய ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார்.
எனினும் அவரின் பரிந்துரையின்பேரில் வாடகைக்கு இருந்த இலங்கையர்கள் அப்படியே தங்கியிருந்தனர்.
எனினும் மொழிப் பிரச்சினை மற்றும் வாடகை தராமல் சென்று விடுவர். அத்துடன் அவர்கள் மீது சந்தேகம் என்ற அடிப்படையில் வீட்டின் புதிய சொந்தக்காரர் பொலிஸில் முறையிட்டுள்ளார்.
எனினும் விசாரணைகளின் போது மூன்று இலங்கையர்களும் சட்டரீதியான ஆவணங்களை கொண்டிருந்தனர். அத்துடன் அவர்கள் மீது எந்த சந்தேகமும் இருக்கவில்லை என்று பொலிஸார் முடிவுக்கு வந்துள்ளதாக தெ ஹிந்து தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjr0.html
அடுத்த ஆறு மாதங்களில் பல விடயங்கள் நிகழலாம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 05:47.02 AM GMT ]
அமைச்சர் பதவியில் இருந்த தன்னை விலகுமாறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், திடீரென தான் பதவியில் இருந்து விலகினால் அது அவர்களுக்கு உரமிட்டதாக அமைந்து விடும் என நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அக்கரைபற்று பிரதேசத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் காரணமாக இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என்பதுடன் என்னை அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என பலர் தெரிவித்து வருகின்றனர்.
இது இசை நாற்காலி போட்டியை போன்றது. நான் அவசரமாக அமைச்சர் பதவியில் இருந்து விலகினால் அது இசை நாற்காலி போட்டியின் இசைக்கு உரமிட்டது போல் ஆகிவிடும்.
இதனை ஏகாதிபத்திய சதித்திட்டம் என்று கூறும் தேவை அவர்களுக்கு உள்ளது. அப்படியான மனநிலையை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.
அடுத்த ஆறு மாதங்களில் நாட்டில் முக்கியமான சில தேர்தல்கள் நடைபெற உள்ளன. அப்போது கட்சிக்குள் பல விடயங்கள் இடம்பெறக் கூடும்.
இந்த சகல விடயங்கள் குறித்தும் கவனத்தை செலுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சரியான முடிவுகளை எடுக்கும்.
தேர்தல் ஒன்று வரும் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து பலர் தமது கவனத்தை செலுத்துவர்.
அடுத்து நடைபெற உள்ள தேர்தல்களில் ஆயிரம் விடயங்கள் நடைபெறக் கூடும். அவை பற்றி கவனம் செலுத்துவது முக்கியமானது.
இலங்கை அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கினால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சல சந்தர்ப்பங்களிலும் சரியான முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுத்துள்ளது.
போர் நடைபெற்ற காலத்தில் கூட விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அளுத்கம சம்பவம் தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் ஒன்றை எடுக்காத நிலைமையை காணமுடிகிறது.
இந்தச் சம்பவத்தில் இருத்தரப்பில் தவறுகள் இருப்பதாக கூறி அரசாங்கம் நழுவ பார்க்கின்றது எனவும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjr3.html
புரட்சியை எற்படுத்தும் இணையத்தளங்கள்! இளைஞர்கள் மீண்டும் துப்பாக்கிகளை ஏந்தலாம்: ராஜித சேனாரத்ன
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 06:08.48 AM GMT ]
அரசில்வாதிகளில் சிலர் பத்திரிகைகள் மூலமாக தமது அரசியல் பலத்தை அதிகரித்து கொள்ள முயற்சித்து வருவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு பொது நூலகத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல்வாதிகள் அவ்வாறான முயற்சியில் ஈடுபட்டாலும் இணையத்தளங்கள் மூலம் அரசியல்வாதிகள் வெளியிடும் கருத்துக்கள் அடங்கிய செய்திகள் அதிகளவில் வெளிவருகின்றன.
இந்த செய்திகள் மக்களின் மனங்களுக்கு செல்கின்றன. எனது மகன் தினமும் இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகளை படிப்பது வழக்கம்.
அந்த செய்திகள் குறித்து அவர் எனக்கு தெளிவுப்படுத்துவார். செய்தி இணையத்தளங்கள் நாட்டிற்குள் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது.
உண்மையான செய்திகளை இணையத்தளங்களில் மாத்திரமே இன்று படிக்க முடிகிறது.
இன்றைய இளைய தலைமுறையினர் புதிய அரசியல் கருத்து பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். இது இணையத்தள செய்திகள் மூலம் தெளிவாகியுள்ளது.
இந்த நிலைமை எங்கு சென்று எந்த இடத்தில் வெடித்து சிதறுமோ என்று தெரியாது.
எந்த தலைவருக்கும் நாளைய தினம் பற்றி சிந்திக்க முடியாது. அந்தளவுக்கு இளைய தலைமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
நாம் எமது இளமை காலத்தில் இடதுசாரி கொள்கையுடன் இருந்து வந்தோம். ஒரு காலத்தில் இது இல்லாமல் போனது.
தற்போது அது எழுச்சி பெற்று முன்னோக்கி வந்து கொண்டிருக்கின்றது.  நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அதனை தவிர்க்க முடியாது.
இலங்கையில் 1988-89 ஆம் ஆண்டு புரட்சிகளுக்கு முன்னர் இளைஞர்களில் கைகளில் சித்திர கதை பத்திரிகைகளே இருந்தன. புரட்சி நடைபெற்ற போது அவர்களின் கைகளில் துப்பாக்கிகள் இருந்தன.
அதன் பின்னர் அவர்களில் கைகளில் துப்பாக்கிகள் இருக்கவில்லை. அது சிறந்தது. கைவிட்ட துப்பாக்கியை மீண்டும் இளைஞர்கள் கையில் எடுக்கக் கூடும்.
இளைஞர்கள் அந்த இடத்திற்கு செல்லும் முன்னர் அதனை தவிர்க்க வேண்டியது இன்றைய ஆட்சியாளர்களுக்கு இருக்கும் பொறுப்பு என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjr4.html

Geen opmerkingen:

Een reactie posten