ஈராக்கின் மோசுல் நகரில் உள்ள சகல பெண்களிலும் பிறப்பு உறுப்புக்களை சிதைக்கும் சம்பிரதாயத்தை நிறைவேற்ற வேண்டுமென ஐசிஸ் கிளர்ச்சிக் குழு உத்தரவிட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.
இஸ்லாமிய ராஜ்ஜியம் என்ற பெயரில் இயங்கும் ஐசிஸ் குழு 11 வயதிற்கும் 46 வயதிற்கும் இடைப்பட்ட பெண்களுக்கு பிறப்பு உறுப்பை சிதைக்கும் சம்பிரதாயம் நிறைவேற்றப்பட வேண்டுமென உத்தரவிட்டுள்ளதாக ஐநா வதிவிட மற்றும் மனிதாபிமான பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஐக்குலின் பாற்கொக் தெரிவித்துள்ளார்.
இப்ரில் நகரில் இருந்து வீடியோ சம்பாஷணை மூலம் கருத்து வெளியிட்டபோது,
கிளர்ச்சிக் குழுவின் உத்தரவினால் 40 இலட்சம் பெண்களும் பிள்ளைகளும் பாதிக்கப்படக்கூடுமென அவர் குறிப்பிட்டார்.
http://newsonews.com/view.php?22cOl72bcY80Mb4e2yMM402dBnB2dd0nBnB303C6A42e4W08Secb2lOec3
|
Geen opmerkingen:
Een reactie posten