தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 24 juli 2014

நாட்டை பிளவுபடுத்த இடமளிக்க முடியாது: ரணிலின் கேள்விக்கு பிரதமர் பதில்!

போதைவஸ்துக்காரர்கள் தொடர்பான பெயர்களை, ஹிருனிக்கா வெளிப்படுத்தினால் உடனடி நடவடிக்கை: பொலிஸ்
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 01:39.14 AM GMT ]
கொலன்னாவ பிரதேசத்தில் போதைவஸ்து விநியோகத்தஸ்கள் தொடர்பில் ஹிருனிக்கா பிரேமசந்திரவிடம் இருந்து தகவல்களை எதிர்ப்பார்ப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாகாணசபை உறுப்பினர் ஹிருனிக்கா குறித்த தகவல்களை தருவாராக இருந்தால், அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தமது தந்தையான பாரதலஷ்மன் பிரேமசந்திரவை கொலை செய்தவர்களே கொல்லன்னாவ பகுதியில் போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்று ஹிருனிக்கா அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதனையடுத்தே குறித்த போதைவஸ்து வியாபாரிகளின் பெயர்களை, ஹிருனிக்கா  வெளியிட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கோரியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLckv7.html
நாடாளுமன்ற பதவிக் காலம் வரையறுக்க வேண்டும்! அமைச்சர்களின் பெயர்களிலான அறக்கட்டளைகளுக்கு தடை!: ரணில் கோரிக்கை
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 01:46.45 AM GMT ]
நாடாளுமன்றின் பதவிக் காலம் நான்கு ஆண்டுகளுக்கு வரையறுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு பதவிக் காலத்தை வரையறுத்தால் அது நாட்டுக்கு நன்மையை ஏற்படுத்தும்.
இவ்வாறு பதவிக் காலத்தை வரையறை செய்தால் அரசியல்வாதிகள் காத்திரமாக மக்களுக்கு சேவையற்றுவார்கள்.
ஊடகங்கள் இது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
உலகின் பல நாடுகளில் நாடாளுமன்ற பதவிக் காலம் 4 முதல் 5 ஆண்டுகளாகும்.
அமெரிக்காவில் நான்கு ஆண்டுகள், பிரிட்டனில் ஐந்து ஆண்டுகளாகும்.
இலங்கையில் நாடாளுமன்றக் பதவிக் காலம் ஆறு ஆண்டுகளாக காணப்படுகின்றது. இது மிக நீண்ட காலப்பகுதியாகும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களின் பெயர்களிலான அறக்கட்டளைகளும் தடை செய்யப்பட வேண்டும் - ரணில்
அமைச்சா்களின் பெயர்களிலான அறக்கட்டளைகளும் தடை செய்யப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கல்வி செயற்பாடுகளில் அரச சார்பற்ற நிறுவனங்கள் பங்களிப்பு செய்ய முடியாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாது.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயர்களில் அறக்கட்டளைகள் இயங்கி வருகின்றன.
அரச சார்பற்ற நிறுவனங்கள் கல்விச் செயற்பாடுகளுக்கு நிதி உதவி வழங்க அனுமதி மறுக்கப்பட்டால், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களில் இயங்கி வரும் அறக்கட்டளைகளையும் தடை செய்ய வேண்டும்.
அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் எவ்வாறான விசாரணைகளை நடத்துகின்றனர்? அவர்களுக்கு யார் அந்த அதிகாரத்தை வழங்கினார்கள்.
எதன் அடிப்படையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தேசியப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பதிலளிக்க வேண்டுமென ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் அதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLckwy.html
பொலிஸ் மா அதிபர் பதவியில் மாற்றம்?
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 01:54.00 AM GMT ]
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்படக் கூடுமென நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் பொலிஸ் மா அதிபர் பதவியில் மாற்றம் செய்யப்படலாம் என குறிப்பிடப்படுகிறது.
பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவிற்கு பொறுப்பாக செயற்பட்டு வரும் உயர் அதிகாரியொருவர் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் பின்னர் தாம் பதவியில் நீடிக்கப் போவதில்லை என தற்போதைய உயர் பொலிஸ் அதிகாரி, நண்பர்களிடம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2016ம் ஆண்டு வரையில் சேவையில் நீடிப்பதற்கு சந்தர்ப்பம் இருந்த போதிலும்,  அவர் அடுத்த ஆண்டில் பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளார்.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் தற்போதைய பொலிஸ் மா அதிபராக என்.கே. இளங்கக்கோன் கடமையாற்றி வருகின்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLckwz.html
நாட்டை பிளவுபடுத்த இடமளிக்க முடியாது: ரணிலின் கேள்விக்கு பிரதமர் பதில்
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 02:22.38 AM GMT ]
கல்வி அபிவிருத்தித் திட்டங்கள் என்ற போர்வையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் நாட்டை பிளவுபடுத்தவும், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும் முயற்சிப்பதாக பிரதமர் டி.எம். ஜயரட்ன குற்றம் சாட்டியுள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரும் ஏனைய புலனாய்வுப் பிரிவினரதும் அறிக்கைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டின் தந்திரோபய தகவல்கள், முக்கிய நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் எதிரித் தரப்புக்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் வழியாகவே செல்கின்றன.
நாட்டின் பௌதீக ஒருமைப்பாட்டுக்கும் இறைமைக்கும் குந்தகம் ஏற்படக் கூடிய செயற்பாடுகளை அனுமதிக்கப் போவதில்லை.
நோக்கத்திற்கு புறம்பாக எந்தத் தரப்பினரேனும் செற்பட்டால் அவர்கள் தொடாபில் பாதுகாப்பு அமைச்சு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசசார்பற்ற நிறுவனங்களின் செயல் குற்றமாயின் அமைச்சர்களின் நிதியங்களையும் தடை செய்ய வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர்
அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக கல்வியை வழங்குவது குற்றமாயின் ஆளும் கட்சியின் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொண்டர் அமைப்புகளாக ஏற்படுத்தியுள்ள நிதியங்கள் ஊடாக கல்வி வழங்குவதை தடைசெய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்
நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் எழுப்பட்ட கேள்விக்கு பிரதமர் டி.எம். ஜயரத்ன வழங்கிய பதில் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ரணில் விக்ரமசிங்க இதனை கூறியுள்ளார்.
பேர்டி பிரேமலால் நிதியம் என்று கூறி ஒரு நிதியத்தை அங்கீகரிப்பதற்கான யோசனை ஒன்று நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை கல்வி கற்பிக்கும் போர்வையில், சதித்திட்டங்களை தீட்டி, குழப்பங்களை ஏற்படுத்தி நாட்டில் பிரச்சினை ஏற்படுத்த அரசசார்பற்ற நிறுவனங்கள் முயற்சித்தால் அதற்கு இடமளிக்க முடியாது என பிரதமர் டி. எம். ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.
நாட்டையும் நிலத்தையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் கடமை. அரசாங்கத்தை அழிக்கவும் நாட்டை இரண்டாக பிளவுபடுத்த வெளிநாட்டில் இருந்து வந்தது கல்வியை கற்பித்தால் அதற்கு இடமளிக்க முடியாது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLckw0.html

Geen opmerkingen:

Een reactie posten