தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 24 juli 2014

லண்டன், நெதர்லாந்தில் நடைபெற்ற கறுப்பு ஜுலை நினைவுதின போராட்டம்!



தமிழர்களின் மீதான இனவழிப்பில் வடுவாகி நிலைத்துவிட்ட கறுப்பு ஜுலையின் 31வது வருட நினைவுநாளான நேற்று லண்டனில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
சிங்களப் பேரினவாத அரசின் அராஜகத்தை எதிர்க்கும் முகமாக பிரித்தானியத் தமிழர் பேரவையால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.
நேற்று மாலை மாலை 4:00 மணியளவில் பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தின் முன்பு இப்போராட்டம் ஆரம்பமாகியது.
பேரினவாத அரசுக்கு எதிரான பதாகைகளைத் தாங்கியபடி மக்கள் தங்கள் இறுதி இலட்சியத்துக்காக உறுதியுடன் குரல் கொடுத்தனர்.
இப்போராட்டத்தில் பெரும் திளரான புலம் பெயர் தமிழர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நெதர்லாந்தில் கறுப்பு ஜூலை தினம் அனுஷ்டிப்பு 
நெதர்லாந்தின் DAM சதுக்கத்தில் கறுப்பு ஜூலையின் 31 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து மக்கள் அவையால் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 
கறுப்பு ஜூலை விட்டுச்சென்ற வேதனை வடுக்கள் மீண்டும் ஒருமுறை நினைவு கூரப்பட்டது.
இலங்கை அரசின் திட்டமிட்ட இன அழிப்பை விளக்கும் புகைப்படங்களும், பதாகைகளும் வைக்கப்பட்டும் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் அங்கே குழுமியிருந்த வேற்றின மக்களுக்கு இதன்போது விநியோகிக்கப்பட்டன.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLckw3.html

Geen opmerkingen:

Een reactie posten