[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 05:35.24 AM GMT ]
குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளான 34 வயதான பெண் மகாசேன்புர களுக்கல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் புல்மோட்டை பொலிஸார் கூறியுள்ளனர்.
தாக்குதல் நடத்திய நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். அவரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சீனப் பிரஜை கடலில் மூழ்கி மரணம்
கடலில் குளித்து கொண்டிருந்த சீன பிரஜை ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக திக்குவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திக்குவளை பத்தீகம கடலில் இன்று காலை மனைவியுடன் குளித்து கொண்டிருந்த சீன பிரஜையே இவ்வாறு கடலில் மூழ்கி இறந்துள்ளார்.
இருவரும் கடலில் குளித்து கொண்டிருந்த போது அலையில் இழுத்து செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெண் காப்பற்றப்பட்டுள்ளதுடன் அவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாழைச்சேனையிலிருந்து காணாமல் போன இரு மீனவர்களில் ஒருவர் கரை திரும்பினார்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பகுதியிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிப்பதற்காக படகொன்றில் சென்ற போது காணாமல் போன இருவரில், ஒருவர் புதன்கிழமை வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்துக்கு வேறொரு படகில் வந்த நிலையில் அவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
முஹமட் பௌசுதீன் அறபாத் (வயது 20) என்பவரே இவ்வாறு திரும்பி வந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
இந்த நிலையில் மேற்படி நபர் பொலிஸாருக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில் படி, செவ்வாய்க்கிழமை கடலுக்குச் சென்ற போது தன்னுடன் இருந்த 03 பேரில் தன்னைத் தவிர ஏனைய இருவரும் மதுபானம் அருந்தினர்.
இதன் பின்னர், இன்னும் கண்டுபிடிக்கப்படாதுள்ள நபர் உறங்கியுள்ளார், ஏற்கெனவே கரை திரும்பிய நபர் தனக்கு அடித்ததாகவும் அவரது அடி தாங்க முடியாமல் அருகில் சென்ற படகை சைகை காட்டி அழைத்து அதில் ஏறி தான் ஊருக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.
காணாமல் போன மற்றைய நபரை தேடும் பணியில் அவரது உறவினர்களும், மீனவ சங்க அமைப்புக்களும் ஈடுபட்டுவருவதாக இவரது குடும்ப உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நான்கு பேருக்கு மரண தண்டனை
கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நான்கு பேருக்கு கண்டி உயர் நீதிமன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1999ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் திகதி புசல்லாவ பலாகொலல்லே என்னும் இடத்தைச் சேர்ந்த சானக்க பெரேரா என்ற நபரை படுகொலை செய்ததாக ஐந்து பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
நீண்ட காலமாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காரணத்தினால் சந்தேக நபர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எஞ்சிய நான்கு சந்தேக நபர்களுக்கும் இன்று நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதவான் மனிலால் வைத்தியதிலக்கவினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டம் 296ம் சரத்தின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ருவான் பெரேரா பிரயன் அபேசிங்க அனுரபிரியந்த குமார மற்றும் எச்.ரொசான் ஆகியோருக்கு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLckx0.html
வடக்கு மாகாண சபையின் சட்ட மீளாய்வை நிராகரித்த ஆளுநர்
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 05:45.19 AM GMT ]
வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியின் மீளாய்வுக்காக வடக்கு மாகாண சபை வழங்கிய மாகாண சபை சட்டத்தை ஆளுநர் நிராகரித்துள்ளார்.
சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கே இருப்பதாக கூறியே ஆளுநர் அதனை நிராகரித்துள்ளார்.
இது தொடர்பான கடிதத்தை அவர் வட மாகாண சபைக்கு அனுப்பியுள்ளார்.
வடக்கு மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட வருமான வரி அறவீடு, முதலமைச்சருக்கான மானியம், முத்திரை வருமானம் ஆகிய வருமான வரிக்கான சட்ட அனுமதி மற்றும் மீளாய்வுக்காக மாகாண சபை அதனை கடந்த ஜூன் மாதம் 6 ஆம் திகதி ஆளுநருக்கு அனுப்பியிருந்தது.
வடக்கு மாகாண சபை அனுப்பிய இந்த சட்டத்தை ஆளுநர், சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்து ஆலோசனைகளை பெற்றுள்ளதுடன் அதனை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLckx1.html
தமிழ் மக்கள் மீது இந்தியாவுக்கு உண்மையான கரிசனை இல்லை: ஜே.வி.பி தலைவர்
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 06:03.11 AM GMT ]
மனித வளத்தை கட்டியெழுப்புவதன் மூலமே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வவுனியாவில் அண்மையில் நடைபெற்ற ஜே.வி.பியின், எமது நோக்கு கொள்கை திட்டம் தொடர்பான கூட்டத்தில் உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியா இன்று வடக்கு கிழக்கு பிரதேசத்தில் மாத்திரமல்லாது நாட்டின் பொருளாதாரத்திலும் பெரும் பங்கை விழுங்கியுள்ளது.
இந்தியா இன்று வடக்கு கிழக்கு பிரதேசத்தில் மாத்திரமல்லாது நாட்டின் பொருளாதாரத்திலும் பெரும் பங்கை விழுங்கியுள்ளது.
அனைத்து துறைகளிலும் இந்தியா உட்புகுந்துள்ளது. இலங்கையின் மருந்து சந்தை இந்தியாவின் கைகளிலேயே உள்ளது.
மோட்டார் வாகனங்களில் அதிகளவான பங்கு இந்தியாவிற்கே உள்ளது. கிழக்கு மாகாணத்தில் பெரும் பகுதியை இந்தியா விழுங்கியுள்ளது.
சம்பூரில் இடம்பெயர்ந்த மக்களை திருகோணமலையில் உள்ள அகதி முகாமுக்கு விரட்டி விட்டு அவர்களின் நிலங்களை இந்தியாவுக்கு வழங்கியுள்ளனர்.
வடக்கில் ரயில் பாதைகளை நிர்மாணிக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இலங்கையின் பெறுமதிமிக்க கனிய வளமான புல்மோட்டை இல்மனைட் கனியத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தில் உள்ள துரையப்பா விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணி கூட இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மக்கள் மீது இந்தியாவுக்கு உண்மையான கரிசனை இருந்தால், ஏன் வடக்கு மீனவர்களின் மீன்வளத்தை கொள்ளையிட இந்தியா படகுகளை அனுப்புகிறது?.
ஜெயலலிதாவுக்கு வடக்கு மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், ஏன் மீன் வளத்தை கொள்ளையிட முயற்சித்து வருகிறார்?.
அதேபோல் இலங்கையின் இன்றைய அரசாங்கத்தினால் மக்களின் எந்த பிரச்சினைக்கும் தீர்வை வழங்க முடியாது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLckx2.html
Geen opmerkingen:
Een reactie posten