கிழக்கு உக்ரைனில் இரண்டு போர் விமானங்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த மார்ச் 17ம் திகதி கைபற்றிய ரஷ்யா அரசு, தற்போது கிழக்கு உக்ரைனில் உள்ள பல்வேறு பகுதிகளையும் கைபற்ற திட்டமிட்டுள்ளதால், அங்கு அமைதியில்லா சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் ராணுவத்தின் இரண்டு போர் விமானங்கள் நேற்று சவூர் மோகிலா பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
இதனை உறுதி செய்த உக்ரைன் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர், இரண்டு விமானங்களிலும் தலா இரண்டு விமானிகள் இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
கடந்த 17ம் திகதி கிழக்கு உக்ரைனில் 298 பேருடன் சென்ற மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு வாரத்திற்குள் இந்த எதிர் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
|
Geen opmerkingen:
Een reactie posten