[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 06:03.35 AM GMT ]
இந்த உதாரணத்தை இலங்கையும் பின்பற்றும் என்று இந்திய செய்தித்தாள் ஒன்று எதிர்வு கூறியுள்ளது.
இந்திய மீனவர்களை கைது செய்த பின்னர் கைப்பற்றப்படும் படகுகளை திருப்பியனுப்ப பாகிஸ்தானும் இலங்கையும் மறுத்து வந்தன.
தமது நாட்டுக்கு நட்டமேற்படுத்தியதாக குற்றம் சுமத்திய பாகிஸ்தான், குஜராத் மீனவர்களின் படகுகளை பாகிஸ்தான் தடுத்து வைத்து வருகிறது.
எனினும் கடந்த மே மாதத்தில் இந்திய பிரதமரின் பதவியேற்பு நிகழ்வுக்கு செல்லும் முன்னர் இந்த படகுகளை திருப்பியனுப்பும் அறிவிப்பை பாகிஸ்தானிய பிரதமர் வெளியிட்டார்.
இந்தநிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் முதல் அவை விடுவிக்கப்படவுள்ளன.
எனினும் இதில் பெரும்பாலானவை இயற்கையால் பாதிக்கப்பட்டுள்ளமையால் இந்திய குழு ஒன்று பாகிஸ்தான் சென்று படகுகளை திருத்தியமைத்து வருகிறது.
இதன் பின்னர் அவை இந்தியாவுக்கு எடுத்து வரப்படும் இதேவேளை இலங்கையும் தடுத்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை திருப்பியனுப்பும் என்று இந்திய செய்தித்தாள் எதிர்வு கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLckx3.html
இந்திய வீட்டுத்திட்டம் முஸ்லிம்களுக்கு தாமதம்: வடமாகாணசபை உறுப்பினர் குற்றச்சாட்டு
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 06:26.56 AM GMT ]
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
யுத்தம் நிறைவடைந்த காலப் பகுதியில் யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்கள் என்ற பதிவுகளுடன் 10, 000ற்கும் அதிகமான முஸ்லிம்கள் வெளிமாவட்டங்களில் வசித்து வந்தார்கள்.
இதனை உறுதி செய்வதாகவே 2009 ஆக்ஸ்ட் 8ம் திகதி இடம்பெற்ற யாழ் மாநகரசபை தேர்தலில் முஸ்லிம்கள் 23 அங்கத்தவர்களுள் 5 அங்கத்துவங்களைப் பெற்றுக்கொண்டார்கள்.
எனவே கனிசமான தொகையினர் 2009 வரை யாழ்ப்பாண முஸ்லிம்கள் என்ற அடையாளத்துடன் வாழ்ந்தார்கள் இன்னமும் வாழ்கின்றார்கள்.
இதனடிப்படையில் மீள்குடியேற்றத்தை நோக்குகின்ற போது 2252 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்கான பதிவுகளை யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வேலனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேற்கொண்டுள்ளார்கள்.
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் மாத்திரம் 2012 ஜனவரி கணிப்பின் பிரகாரம் 1962 குடும்பங்களைச் சேர்ந்த 8118 பேர் மீள்குடியேற்றத்திற்காக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.·
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் தன்னுடைய பிரதேச திட்டமிடல் பிரிவின் மூலம் தயாரித்த “யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் கருத்திட்டம்” என்கின்ற ஆவணத்தில் 50 முஸ்லிம் குடும்பங்களுக்கே நிரந்தர வீடுகள் தேவை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று 2011 நவம்பர் 17ம் திகதி தனது காரியாலயத்தில் வெளியிட்ட வாராந்த முன்னேற்ற அறிக்கையில், முஸ்லிம் வட்டாரத்தில் இருந்து வீட்டுத்திட்டத்திற்காக உறுதிப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் 159 என்று குறிப்பிட்டுள்ளார். (இதில் தமிழ் மக்களும் உள்ளடக்கப்படுவர்).
எனவே யாழ்ப்பாணம் பிரதேச செயலாளருடைய எண்ணத்தில் அல்லது அவரை வழிநடாத்துகின்றவர்களின் எண்ணத்தில் 1990களில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 3417 குடும்பங்கள், 2011களில் மீளக்குடியேற்றத்திற்காக பதிவு செய்யப்பட்ட 2252 குடும்பங்களுக்கும் 50 அல்லது 100 வீடுகள் போதுமானவை என்று இருந்திருக்கின்றது என்பது தெளிவாகிறது.
எனவே நான் முன்னர் குறிப்பிட்ட அந்த சிந்தனை இப்போது இவர்கள் வசமாகிவிட்டதோ என்ற ஐயப்பாடு எழுகின்றது. இதற்கு Muslim Foundation For Culture and Development (MFCD) என்கின்ற தொண்டு நிறுவனம் 100 நிரந்தர வீடுகள், 100 வீடுகளைத் திருத்தியமைத்தல் என்கின்ற திட்டத்தோடும், வாழ்வாதார மேம்பாடு என்கின்ற திட்டத்தோடு யாழ்ப்பாணத்தில் வேலைத்திட்டங்களைத் தொடக்கியபோது இறுக்கமான சட்ட நடைமுறைகளை அவர்களின் மீது பிரயோகித்து 7 வீடுகள் மாத்திரம் நிர்மானித்த நிலையில் அவர்கள் தமது கருத்திட்டத்தைக் கைவிட்டு மன்னார் நோக்கி நகர்ந்தார்கள்.
வீட்டுத்திட்டங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டபோது யாழ்ப்பாணம் பிரதேச செயலாளரினால் முன்மொழியப்பட்ட காரணங்கள் அவரால் எழுத்துமூலம் தரப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருக்கின்ற காரணங்கள் புத்தளத்தில் வீடு இருக்கின்றது என மக்கள் கூறுகின்றார்கள், பாணந்துறையில் 10 வீட்டுத்திட்டத்தில் வீடு கிடைத்துள்ளது.
காணி சிறியது, இருவரைக் கொண்ட குடும்பம், மகன் பொறியியலாளர், உறுதி பெயர் மாற்றம் செய்யப்படவில்லை இதுபோன்ற காரணங்களை குறித்த நிறுவனம் கோரி நிற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதய சுத்தியோடு நடந்துகொண்டிருந்தால் இத்திட்டத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் பயனடைந்திருப்பார்கள் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLckx4.html
சுப்பிரமணிய சுவாமி ஒரு ஜோக்கர்! அவர் தெரிவித்திருப்பவை அவருடைய தனிப்பட்ட கருத்துக்களே!- சுரேஸ் எம்.பி.
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 06:43.52 AM GMT ]
அவருடைய கருத்துக்களை இந்திய மத்திய அரசாங்கத்தின் கருத்தாகவோ, பாரதீய ஜனதா கட்சியின் கருத்தாகவோ எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என தெரிவித்திருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன், சுப்பிரமணிய சுவாமியை ஒரு ஜோக்கராக இந்தியாவில் பார்க்கிறார்கள். நாங்களும் பார்க்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சியின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி 13ம் திருத்தச்சட்டம் தொடர்பாகவும், தேசிய இனப்பிரச்சினை தொடர்பாகவும் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் என்ன இருக்கின்றது. என்பதை ஆராயாமல், இலங்கை அரசாங்கம் 13ம் திருத்தச் சட்டம் தொடர்பாக கடந்த காலத்தில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தொடர்பில் ஆராயாமல் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்திருக்கின்றார்.
எனவே அவருடைய கருத்தினை பெரிய விடயமாக எடுத்துக் கொள்வதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இல்லை. என்பதுடன் அவருடைய கருத்தினை பாரதீய ஜனதா கட்சியின் கருத்தாகவோ, இந்திய மத்திய அரசின் கருத்தாகவோ நாங்கள் எடுத்துக் கொள்ளவும் தயாராக இல்லை. அது அவருடைய சொந்தக் கருத்தாகும்.
மேலும் சுப்பிமணிய சுவாமி மிக நீண்டகாலமாக இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்.
போர் வெற்றி கொள்ளப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறிய போதும், போர் வெற்றி தினங்கள் கொண்டாடப்பட்ட போதும் அவர் இங்கே வந்து அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.
எனவே அவர் யார்? எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளார்? என்பது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் தெரியும், தமிழ் மக்களுக்கும் தெரியும். மேலும் இந்தியாவில் அவரை ஒரு ஜோக்கர் என்றே பலர் அழைக்கிறார்கள். ஜோக்கராகவே பார்க்கிறார்கள்.
எனவே அவரை நாங்களும் அவ்வாறே பார்க்க வேண்டியதாக இருக்கின்றது. மேலும் அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் மூலம் அவரிடம் அறியாமை அதிகமாகவே இருக்கின்றது என்பதும் இம்முறை மிக தெளிவாக புரிந்துகொள்ளக் கூடியதாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLckx5.html
Geen opmerkingen:
Een reactie posten