தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 1 juli 2014

உயர்பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புலிகள் பணம் வழங்கி வருகின்றனர்?

உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பணம் வழங்கி வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் புலம்பெயர் தமிழர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டனில் உள்ள இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் அரச நிர்வாக கட்டமைப்பை வலுவிழக்கச் செய்யும் நோக்கில் சில அரசியல்வாதிகள் மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புலம்பெயர் புலி ஆதரவு அமைப்புக்கள் பணம் வழங்கி வருகின்றன.
அவ்வாறு பணம் வழங்கிய நபர் ஒருவரை கைது செய்ய கொழும்பு மத்திய பிரிவு குற்றத் தடுப்புப் பொலிஸார் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
ரேகன், பரிதி போன்ற பெயர்களில் தோன்றும் பிரான்ஸ் தமிழர் இணைப்புச் செயலகத்தின் இணைப்பாளராகவும் செயற்பட்டுள்ள நபர் ஒருவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை, இந்தியா மற்றும் மலேசிய கடவுச் சீட்டுக்களைப் பயன்படுத்தி அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்யும் போது பரிதியை கைது செய்து கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு விமான நிலைய சுங்கப் பிரிவினருக்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பரிதி, முன்னாள் கரும்புலித் தலைவி சஞ்சனாவின் சகோதரர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவர் இலங்கைக்கு விஜயம் செய்த போது சந்தித்த அரசியல் பிரமுகர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGQULblt4.html

Geen opmerkingen:

Een reactie posten