தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 1 juli 2014

போர்க்குற்றங்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிட அரசாங்கம் திட்டம்!

இலங்கையின் அரச ஊடகங்களுக்கு கசக்கும் சொல் “ஜெனரல்”
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 04:38.21 PM GMT ]
இலங்கையின் அரசாங்க ஊடகங்களில் “ஜெனரல்” என்ற பதத்தை சொல்லாமல் தவிர்க்கும் நடைமுறை ஒன்று இருந்து வருகிறது.
சாதாரணமாக இலங்கையின் சிங்கள மக்கள் மத்தியில் ஜெனரல் என்ற சொல்லுக்கு சரத் பொன்சேகா என்ற பெயர் பழக்கப்படுத்தப்பட்டமை காரணமாகவே இந்த நடைமுறையை அரசாங்க ஊடகங்கள் பின்பற்றுகின்றன.
இந்தநிலையில் இன்று காலை செய்திப் பத்திரிகை வாசிக்கும் நிகழ்ச்சி ஒன்றின்போது அறிவிப்பாளர் ஜெனரல் எலெக்சன்( பொதுத்தேர்தல்) என்ற ஆங்கில வார்த்தையை வாசிக்கும் போது எலெக்சன்( தேர்தல்) என்ற சொல்லை மாத்திரமே வாசித்தார்.
ஆனால் அவர் வாசிக்கும் போது கீழே காட்டப்பட்ட தலைப்புகளில் ஜெனரல் எலெக்சன் என்ற பதத்தை காணக்கூடியதாக இருந்தது.
அடுத்த வருடத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்ற செய்தியின் போதே இந்த தவிர்ப்பு இடம்பெற்றது.
எனினும் 5 வருடங்களுக்கு முன்னர் இன்று செய்திப் பத்திரிகையை வாசித்த அதே அறிவிப்பாளர் ஜெனரல் பொன்சேகாவை பேட்டி கண்டபோது 2009 ஆம் ஆண்டு போரை வெற்றி கொண்டதன் மூலம் நீங்கள் உலகில் சிறந்த இராணுவத் தளபதியாக விளங்குகிறீர்கள் ஜெனரல் என்று குறிப்பிட்டமையை இலங்கையின் சிங்கள இணையம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGQULblt1.html

வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை மீண்டும் பார்வையிட்டார் ஜனாதிபதி
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 04:42.02 PM GMT ]
இலங்கையின் தென்பகுதியில் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இடங்களை ஜனாதிபதி இன்று இரண்டாவது முறையாகவும் பார்வையிட்டார்.
இந்த இடங்களில் மேற்கொள்ளப்படும் புனர் நிர்மாணப் பணிகளை பார்வையிடும் நோக்கிலேயே அவர் அங்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தின் போது பல அமைச்சர்களும் உடன் சென்றிருந்தனர்.
இதன்போது ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
http://www.tamilwin.com/show-RUmsyGQULblt2.html
போர்க்குற்றங்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிட அரசாங்கம் திட்டம்
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 11:48.58 PM GMT ]
போர்க்குற்ற விசாரணைகளுக்கு எதிராக மக்களை தூண்டி விடுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது.
இதற்காக தொகுதி வாரியாகவுள்ள அரசாங்க உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில், பொரளையில் நடைபெற்ற அரசாங்க தரப்பு உறுப்பினர்களுக்கான மாநாடு அமைந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாநாடு எதிர்வரும் தேர்தல்களை இலக்கு வைத்து நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இது போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்க்குற்ற விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கம் பாராளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ள போதும், மக்களிடம் இருந்து பாரிய அளவில் எதிர்ப்புகள் வெளியாகவில்லை.
இந்த நிலையில் மக்களை தூண்டிவிட்டு போர்க்குற்ற விசாரணைக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyGQULblt5.html

Geen opmerkingen:

Een reactie posten