தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 1 juli 2014

அகதிகளின் படகை திருப்பி அனுப்ப நடவடிக்கை!- சிட்னி மோர்னிங் ஹெரால்ட்- படகுகள் வந்தாலும் அதுபற்றி கூற மாட்டோம்!– ஸ்கொட் மொரிசன்!

அவுஸ்திரேலிய கடற்பரப்பில் நுழைந்த இலங்கை அகதிகளின் படகினை அவ்வாறே இந்தியா நோக்கி திருப்பி அனுப்ப அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அவுஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
153 அகதிகளுடன் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் இருந்து 175 கடல் மைல்களுக்கு அப்பால் இந்த படகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த படகினை அங்கிருந்து திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு திருப்பி அனுப்புவது சர்வதேச சட்ட மீறல் என்றும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
2ம் இணைப்பு
ஆறு மாதங்களாக அகதிக் கப்பல் வரவில்லை என்ற சாதனையை தக்க வைக்க அவுஸ்திரேலியா முயற்சி!– சிட்னி மோர்னிங் ஹெரால்ட்
இலங்கை அகதிகளை ஏற்றிய படகுகள் குறித்து கருத்து வெளியிட அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபொட் மறுப்பு தெரிவித்துள்ளார்.
153 இலங்கையருடான படகு ஒன்றும், இலங்கையரும் இருக்கலாம் என்று நம்பப்படும் மற்றுமொரு அகதிப் படகும் தற்போது அவுஸ்திரேலிய கடற்பரப்பில் ஆதரவின்றி நிற்கின்றன.
இவற்றை திருப்பி அனுப்ப அரசாங்கம் முயற்சிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் இது குறித்து ஊடகங்கள் டொனி அபொட்டிடம் வினவிய போதும், அவர் இதற்கு பதில் வழங்க மறுத்துள்ளார்.
இதேவேளை கடந்த ஆறு மாதங்களாக எந்த ஒரு அகதிப் படகும் அவுஸ்திரேலியாவுக்குள் நுழையவில்லை என்ற சாதனையை தக்கவைத்துக் கொள்ள அரசாங்கம் முயற்சிப்பதாக, அவுஸ்திரேலியாவின் த சிட்னி மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதற்காக இரகசியமான முறையில் குறித்த கப்பல்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பத்திரிகை உறுதிப்படுத்தியுள்ளது.
படகுகள் வந்ததாக அறிவிக்கப்பட்டாலும், அதுபற்றி கூற மாட்டோம் – ஸ்கொட் மொரிசன்
கிறிஸ்மஸ் தீவிற்கு அப்பால் கோளாறுகளுக்கு உள்ளானதாகக் கூறப்படும் இரு அகதிப் படகுகள் வழிமறிக்கப்பட்டாலும், அது பற்றிய தகவல்களை பகிரங்கப்படுத்தப் போவதில்லையென அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலிய கடற்பரப்பிற்குள் பிரவேசித்த இரு படகுகளை கடற்படை ரோந்துப் படகுகள் வழிமறித்ததாகத் தெரிகிறதென ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
படகுகளில் இருந்தவர்கள் கிறிஸ்மஸ் தீவிற்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் தெரிகிறது. இது உண்மையானதாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் ஆறு மாதத்திற்கு மேலான காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவை அடையும் முதற்தொகுதி புகலிடக் கோரிக்கையாளர்களாக இருப்பார்கள்.
இவற்றில் ஒரு படகு இந்தியாவில் இருந்து புறப்பட்டதாக நம்பப்படுகிறது. பொதுவாக அவுஸ்திரேலியாவை நோக்கி வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மிகவும் அரிதாகவே இந்தியாவில் இருந்து வருவதால், இது புதிய பிரச்சினையைத் தோற்றுவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த படகில், 37 பிள்ளைகள் அடங்கலாக 150 இற்கு மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் இருந்ததாகவும், இது கிறிஸ்மஸ் தீவில் இருந்து சுமார் 300 கிலோமீற்றர் தொலைவில் வழிமறிக்கப்பட்டதாகவும் தெரிகிறதென ஏபிசி அறிவித்துள்ளது.
படகுகளுக்கு என்ன நடந்தது – எதிர்க்கட்சிகள் கேள்வி
இது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை காலை வானொலி நிகழ்ச்சியொன்றிற்கு கருத்து வெளியிட்ட குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன், படகுகள் குறித்து எதுவும் சொல்லப் போவதில்லை எனத் தெரிவித்தார்.
கடந்த ஆறு மாதங்களாக ஆட்கடத்தல் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இதற்குக் காரணமான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை பாதிக்கக்கூடிய எந்தவொரு விடயத்தையும் சொல்லவோ, செய்யவோ போவதில்லை. எனவே, இந்த விடயத்திலும் மாற்றமில்லை என்றார் மொரிசன்.
படகிற்கு நேர்ந்த கதி பற்றி கேட்பதன் மூலம் தொழிற்கட்சியும், பசுமைக் கட்சியும் ஆட்கடத்தல்காரர்களுக்காக பேரம் பேசுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
ஆனால், இந்த நிலைமை கேள்வி எழுப்புவது நியாயமானது தான் என்றார். ‘அந்த மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?’ என்று அவர் கேட்டார்.
அரசாங்கத்தின் ஊடக தந்திரோபாயம் ஒழித்து மறைப்பது தானென பசுமைக் கட்சியின் செனட்டர் சாரா ஹான்சன் யங் சாடினார். ‘எப்போதும் படகுகள் நின்றதாக தாம் நம்பவில்லை’ என்று அவர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLblt7.html

Geen opmerkingen:

Een reactie posten