தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 21 juli 2014

ஜெயலலிதா இலங்கை வர வேண்டும்! மகிந்தருக்கு அருகில் இருந்த சுவாமி அழைப்பு…

ரஷ்யா சீனாவை நம்ப வேண்டாம் மகிந்தவுக்கு அறிவுரை…

சர்வதேச அழுத்தங்களில் இருந்து ரஸ்யாவும், சீனாவும் இலங்கையை காப்பாற்றுமென நம்பி இருக்க வேண்டாம் என்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் ராஜதந்திரிகள் சிலரும் சிரேஸ்ட அமைச்சர்கள் சிலரும் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து இந்த எச்சரிப்பை விடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இனப்பிரச்சினை, காணி அபகரிப்பு, காணாமல்போனோர், அரசியல் கைதிகள் என்று பல்வேறு விடயங்களில் சர்வதேச ரீதியான அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. தற்போது இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான சர்வதேச நடவடிக்கைகளில் இருந்து ரஸ்யாவும், சீனாவும் தம்மை காப்பற்றும் என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.  அதன் காரணமாகவே அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளை பகைத்துக் கொண்டு, இன்னும் தமிழ் மக்களுக்கான தீர்வினை முன்வைக்காமல் செயற்படுகிறது.
ஆனால் ரஸ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இலங்கை விடயத்தில் செயற்படக்கூடிய எல்லைகள் உள்ளன என்பதை, ராஜதந்திரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே இந்த இரண்டு நாடுகளையும் நம்பி, ஏனைய நாடுகளை பகைத்துக் கொள்வது இலங்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் சுட்டிக்காட்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/76968.html


ஜெயலலிதா இலங்கை வர வேண்டும்! மகிந்தருக்கு அருகில் இருந்த சுவாமி அழைப்பு…

சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட குழுவில் டாக்டர் சுரேஸ் பிரபாகர் பிரபு, டாக்டர் சாரி ஷேசாத்திரி ராமானுஜன், டாக்டர் ஸ்வபன் தாஸ்குப்தா மற்றும் மாதவ் நளபட் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். இலங்கை சார்பில் ஜனாதிபதியுடன் வெள்ளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் ஆலோசகர் டாக்டர் சுனிமல் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
 2ம் இணைப்பு 
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இங்குள்ள நிலவரத்தை நேரில் பார்வையிடவேண்டும். இவ்வாறு கொழும்பில் வைத்து அவருக்கு அழைப்பொன்றை விடுத்தார் பாரதீய ஜனாதாக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் சுப்பிரமணிய சுவாமி.
பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிறுவகத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் ‘மோடியின் கீழ் இந்தியா’ என்ற தொனிப் பொருளில் அவர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை இந்திய உறவில் இருந்து தமிழ் நாட்டையும் தமிழர் விவகாரத்தையும் துண்டிக்க வேண்டும் என்ற கருத்தையும் முன் வைத்தார். தமிழ் நாட்டிலோ தமிழ் நாட்டு தேர்தல்களிலோ இலங்கைத் தமிழர் விவகாரம் முக்கிய இடத்தைப் பிடிக்கவில்லை.


அவர்கள் தேர்தல்கள் மூலம் இதனை வெளிப்படுத்தி உள்ளார்கள். வெளிநாடுகளில் உள்ள எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளின் பணத்தையும் போதைப் பொருள் விற்ற பணத்தையும் தமிழ் நாட்டில் உள்ள சில குழுக்கள் பயன்படுத்துகின்றன. இந்த நிலை சினிமா உலகத்திலேயே மிக மோசமாக காணப்படுகிறது – என்றும் அவர் தெரிவித்தார்.  SuvameSuvame-01Suvame-02
http://www.jvpnews.com/srilanka/76998.html

Geen opmerkingen:

Een reactie posten