தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 22 juli 2014

ஏழு முக்கிய புலித் தலைவர்கள் மலேசியாவில்...

'எழிலன் உள்ளிட்டோரின் வழக்கு சிறப்பு நீதவான் முன்னிலையில்'
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 10:01.02 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையில் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்து, இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்ததன் பின்னர் தகவல் தெரியாதுபோன எழிலன் உள்ளிட்ட 12 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணைகள் சிறப்பு நீதவான் ஒருவர் முன்னிலையிலேயே முல்லைத்தீவில் நடத்தப்படும் என்று திங்களன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட இந்த வழக்குகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சம்பவங்கள் முல்லைத்தீவிலேயே நடந்துள்ளமையால், அவை பற்றிய விசாரணைகளை நடத்தி விபரங்களை அறிவிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அந்த விசாரணைகள் சிறப்பு நீதவான் ஒருவர் முன்னிலையில் நடைபெறும் என்று அறிவித்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் கணேசராஜா, அந்த விசாரணைகளை வரும் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
எழிலனின் மனைவியான வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட வழக்காளிகள் இந்த வழக்கு விசாரணைக்காக அங்கு சென்றிருந்தனர்.
அவர்களை புலனாய்வுத் துறையினர் என சந்தேகிக்கப்படுகின்ற பல நபர்கள் புகைப்படங்கள் எடுத்ததுடன், முல்லைத்தீவில் இருந்து பரந்தன் செல்லும் வீதியில் உள்ள முக்கிய சந்திகளில் ஆங்காங்கே காவல் இருந்து தம்மை அச்சுறுத்தும் வகைளில் சந்தேகத்திற்கு இடமாக நடந்துகொண்டதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
இவ்வாறான கண்காணிப்பு அச்சுறுத்தல்கள் புதுக்குடியிருப்பு நகருக்கு அப்பால் உள்ள வள்ளிபுனம் வரைக்கும் தொடர்ந்ததால், தாங்கள் மீண்டும் புதுக்குடியிருப்பு நகருக்குத் திரும்பி வந்து காவல்துறையினரிடம் முறையிட்டு பின்னர் யாழ் பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்டு காவல்துறையினரின் வழிப்பாதுகாப்பைப் பெற்றுச் சென்றதாகவும் அனந்தி சசிதரன் கூறினார்.
தாங்கள் தாக்கல் செய்துள்ள வழக்குகளைத் தொடரவிடாமல் நிறுத்தும் வகையிலேயே இவ்வாறான அச்சுறுத்தல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், ஏற்கனவே விசாரணைகள் மிகவும் தாமதமாக்கப்பட்டுள்ள இந்த வழக்குகளின் மூலம் தங்களுக்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRVLclw7.html


ஏழு முக்கிய புலித் தலைவர்கள் மலேசியாவில்...
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 11:50.36 PM GMT ]
ஏழு முக்கிய புலித் தலைவர்கள் மலேசியாவில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் இலங்கை அரசாங்கம், மலேசிய அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த சந்தேக நபர்களின் ஆள் அடையாள விபரங்களை இலங்கை அரசாங்கம் மலேசிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருக்கு வழங்கியுள்ளது.
முல்லைத்தீவு பதுங்கு குழியொன்றிலிருந்து மீட்கப்பட்ட ஆவணங்களிலிருந்து குறித்த புலி உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த ஏழு பேரும் ஆயுதம் மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் இரண்டு பேர் விமானிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRVLclxy.html

Geen opmerkingen:

Een reactie posten