முல்லைத்தீவு மாவட்ட நீதி மன்றில் இடம்பெற்று வரும் ஆட்கொணா்வு வழக்கு விசாரணைக்காக வடக்கு மாகாண சபை உறுப்பினா் அனந்தி சசிதரன் (எழிலன்) முல்லைத்தீவு மாவட்ட நீதி மன்றுக்கு சென்ற போது அங்கு அவருக்கு ஏதிராக ஆா்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
எழிலனால் பிடிக்கப்பட்ட தங்களது பிள்ளைகளுக்கு பதில் கூறு , உனது கணவனை தேடும் நீ எங்கள் பிள்ளைகளைத் தேடித்தருவாயா? போன்ற கோசங்களை அனந்தியை நோக்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவா்கள் எழுப்பினா். இதனால் நீதி மன்றுக்கு சென்ற அனந்தி மாற்று வழியின் ஊடே நீதி மன்றுக்குள் சென்றுள்ளார்.
அனந்திக்கு எதிராக குறித்த ஆா்ப்பாட்டத்தில் சிஎஸ்டி பண்ணைகளில் பணியாற்றுகின்றவா்கள் பெரும்பான்மையாக கலந்து கொண்டதாகவும் இதனை இரானுவத்தினா் பின்புலமாக நின்று ஏற்பாடு செய்திருந்ததாகவும், பலர் விருப்பம் இன்றி கட்டாயத்தின் பேரில் கலந்து கொண்டதால் முகத்தை மறைத்திருந்தனர் எனவும் ஆர்ப்பாட்டத்தை அவதானித்த பலா் கருத்து குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிவித்தனர்.


http://www.jvpnews.com/srilanka/76971.html
Geen opmerkingen:
Een reactie posten