தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 2 juli 2014

பிரிவினையை ஏற்படுத்தும் தென்னாபிரிக்காவின் முயற்சியின் பின்னணியில் இந்தியா, ஜப்பான்!

இத்தாலியில் அமைச்சர் விமல் மீது தாக்குதல் முயற்சி
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 02:25.34 AM GMT ]
இத்தாலிக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் விமல் வீரவன்ச, பொதுபல சேனாவைப் பற்றி விமர்சித்ததால் அவர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று பொதுபலசேனா நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டின்போது, பொதுபலசேனாவின் தேசிய அமைப்பாளரான வித்திர தெனிய நந்த தேரோ இதனை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சர் விமல் வீரவன்ச தற்பொழுது இத்தாலியிற்குச் சென்றுள்ளார். அவரை அந்நாட்டில் வாழும் சிங்கள மக்கள் ஒரு கூட்டத்திற்கு கலந்து கொள்ளுமாறு அழைத்திருந்தனர்.
அங்கு அவர் பேசிக்கொண்டிருக்கும்போது பொது பலசேனாவைப் பற்றி மிக கடுமையாக விமர்சித்து பேசிக்கொண்டிருந்தாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு இருந்த சிலர் உடன் அமைச்சரின் சேட்டை பிடித்து தள்ளியதாகவும் கூறினார்.
மேலும், பொதுபல சேனாவைப் பற்றி இங்கு பேசக் கூடாது என அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தாகவும் வித்திர தெனிய நந்த தேரோ குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தினையடுத்து, உடன் செயற்பட்ட அமைச்சரின் மெய்பாதுகாவலர் அமைச்சரை பாதுகாத்ததாகவும் தேரர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkqy.html
எட்டியாந்தோட்டையில் 2 தமிழ் சிறுவர்கள் தூக்கில் தொங்கி மரணம்! - லிந்துலையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை! குவைத்தில் இலங்கையர் தற்கொலை
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 02:58.52 AM GMT ]
கொழும்பு ஹட்டன் வீதியின், எட்டியாந்தோட்டை வீஓய என்ற பெருந்தோட்டத்தில் இரண்டு தமிழ் சிறுவர்களின் சடலங்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. மரணமானவர்கள் சிறுமி 7 வயதைக் கொண்டவர். சிறுவன் 3 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சிறுவர்களின் தாய் வெளிநாடு சென்றுள்ள நிலையிலேயே இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் மரணமான பிள்ளைகளின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லிந்துலை தோட்டத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை!
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை மிளகுசேனை தோட்டத்தில் 16 வயது பாடசாலை மாணவன் ஒருவர் இன்று புதன்கிழமை காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மொட்டையன் மதியழகன் என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாகவும், தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையெனவும் லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் சடலம் தற்போது லிந்துலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
குவைத்தில் இலங்கையர் ஒருவர் தற்கொலை
இலங்கையை சேர்ந்த தொழிலாளர் ஒருவர் குவைத்தில் அவர் பணியாற்றிய வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குவைத்தின் சாட் அல் அப்துல்லா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த நபர் கிருமிநாசனியை அருந்தியே தற்கொலை செய்து கொண்டுள்ளார். என்ன காரணத்திற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதை அறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkq2.html
பிரிவினையை ஏற்படுத்தும் தென்னாபிரிக்காவின் முயற்சியின் பின்னணியில் இந்தியா, ஜப்பான்!
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 04:28.33 AM GMT ]
இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்தும் தென்னாபிரிக்காவின் முயற்சியின் பின்னணியில் இந்தியா ஜப்பான் மற்றும் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களான நிமால் சிறிபாலடி சில்வா வாசுதேவ நாணயக்கார உட்பட பலர் உள்ளனர் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொது செயலாளர் டாக்டர் வசந்த பண்டார குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதேவேளை, தென்னாபிரிக்காவின் மத்தியஸ்தத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் மக்களை வீதியில் இறக்கி போராடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்;
தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி ரமபோஷா தலைமையிலான குழுவினர் இராஜதந்திர விஜயமாக இலங்கை வருவதையும் ஜனாதிபதி உட்பட அரசியல் தலைவர்களை சந்திப்பில் எந்தவிதமான ஆட்சேபனையோ எதிர்ப்போ கிடையாது.
ஆனால் இலங்கையில் அரசியல் தீர்வு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு உதவும் தென்னாபிரிக்காவின் குழுவாக இலங்கை வருவதையும் தலைவர்களை சந்திப்பதையும் கடுமையாக எதிர்க்கின்றோம்.
அவ்வாறானதோர் மத்தியஸ்தம் எமக்கு அவசியமில்லை. ஏற்கனவே ஐதேக ஆட்சிக் காலத்தில் நோர்வேயின் சொல்ஹெய்மை மத்தியஸ்தராக ஏற்றுக்கொண்டதால் விடுதலைப் புலிகள் பலமடைந்து யுத்தம் உக்கிரமடைந்தது. பிரிவினை தலைதூக்கியது.
இன்று அரசாங்கம் தென்னாபிரிக்காவின் மத்தியஸ்தத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டால் அன்றைய ஐதேக அரசுக்கும் இன்றைய அரசுக்கும் வித்தியாசமில்லை என்பதாகவே அமையும்.
அவ்வாறான நிலைமை ஏற்படுமானால் தேசிய அமைப்புக்களின் ஆதரவு இந்த அரசாங்கத்திற்கு இல்லாமல் போகும். அது மட்டுமல்லாது இதற்கெதிராக மக்களை வீதியில் இறக்கி போராடுவோம்.
தென்னாபிரிக்காவின் பின்னணியில் இலங்கையில் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி பிரிவினையை ஏற்படுத்தும் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளே உள்ளன. அது மட்டுமல்லாது அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களான நிமால் சிறிபாலடி சில்வா வாசுதேவ போன்று வேறும் பலரும் உள்ளனர்.
எனவே, தென்னாபிரிக்காவின் பொறியில் சிக்கினால் அதிலிருந்து மீள முடியாது போகும் என்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkq4.html

Geen opmerkingen:

Een reactie posten