தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 2 juli 2014

இனவாத தாக்குதல்களை நிறுத்தக்கோரி ஐ.நாவுக்கு கடிதம்!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை: கோத்தபாய ராஜபக்ச
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 02:27.11 AM GMT ]
இலங்கையை மையமாக வைத்து இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று இலங்கை பாதுகாப்புத் துறை செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.
இது குறித்து அந்நாட்டில் வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கோத்தபாய ராஜபக்ச நேற்று செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியாவுக்கு எதிரான தாக்குதலை நடத்தும் திட்டத்துடன் இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதிகள் தங்கியிருக்க வாய்ப்புள்ளது என்று இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் என்னிடம் கூறினர்.
இதன் அடிப்படையில் நாங்கள் விசாரித்த போது, அது உண்மையல்ல என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் கூறியது போன்று எதுவும் நடக்க வாய்ப்பில்லை. இதுபற்றி அவர்கள் கவலைப்படத்
தேவையும் இல்லை என்றார்.
முன்னதாக, சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த தீவிரவாதியான ஜாகீர் உசேனிடம் தமிழகப் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தையும், பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தையும் தகர்க்க திட்டமிட்டது தெரியவந்தது.
அவருக்கு கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி மூலம் ஐஎஸ்ஐ அமைப்பு பயிற்சி அளித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனிடையே ஜாகீர் உசேனின் கூட்டாளி முகமது ஹோசினியை மலேசியாவில் அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர். அவருக்கும் இந்தச் சதியில் தொடர்பு இருப்பதை தமிழக போலீஸார் கண்டுபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள அன்னிய நாட்டுத் தூதரகங்களைக் குறிவைத்து இலங்கை, மாலைதீவு, மலேசியா ஆகிய நாடுகளில் முஸ்லிம் தீவிரவாதிகள் செயல்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் இலங்கை அரசிடம் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkqz.html
சுதந்திரத்தையும், அபிவிருத்தியையும் ஏற்படுத்திக் கொடுத்த ஒரே தலைவர் ஜனாதிபதியே: சபாநாயகர்
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 01:59.19 AM GMT ]
நாட்டுக்கு சுதந்திரத்தையும், அபிவிருத்தியையும் ஏற்படுத்திக் கொடுத்த ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே என சபாநாயகர் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஒரே தசாப்த காலத்தில் ஜனாதிபதி மஹிந்த, சுதந்திரத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
1994ம் ஆண்டிற்கு முன்னதாக ஆட்சி செய்த தலைவர்களினால் உரிய இலக்குகளை எட்ட முடியவில்லை.
வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களுக்கு ஜனாதிபதி அடிபணியவில்லை.
விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தி ஏனையவர்களின் பொருளாதாரத்தையும் ஜனாதிபதி மேம்படுத்தியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkp7.html

இனவாத தாக்குதல்களை நிறுத்தக்கோரி ஐ.நாவுக்கு கடிதம்
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 02:35.26 AM GMT ]
கடந்த 2010ம் ஆண்டு முதல் இன்றுவரை முஸ்லிம்களுக்கெதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள 260 நடவடிக்கைள் மற்றும் அளுத்கம சம்பவம் தொடர்பாகவும் புலம்பெயர் இலங்கை முஸ்லிம் சமூகம்,  ஐ.நா மனித உரிமை ஆணையாளர், ஐ.நா செயலாளர் ஆகியோருக்கு அறிக்கையினை சமர்ப்பித்துள்ளனர்.
28-06-2014 அன்று ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா தலைமைக் காரியாலயத்தில் இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக புலம்பெயர் இலங்கை முஸ்லிம் சமூகம் ( Overseas Ceylon Community  - France  ) அமைப்பின் செயலாளர் முயீஸ் வஹாப்தீன் தெரிவித்தார்.
நடந்து முடிந்த கொடிய யுத்தத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாகி நிர்க்கதிக்குள்ளாகி பாதிக்கப்பட்டு மீண்டுவராத இச்சூழ்நிலையில், சனத்தொகையில் 9 சதவீதமாக காணப்படும் முஸ்லிம்கள் மீது அண்மையில் அளுத்கமவில் நடந்த இனவெறியாட்டத்தினால் 8 மரணங்கள் பதிவாகின.
150 க்கும் அதிகமான வீடுகள் சேதமாக்கப்பட்டன. 80க்கும் அதிகமான வியாபார ஸ்தலங்கள் பாதிப்படைந்தன. 17 க்கும் அதிகமான பள்ளிவாசல்கள் காடையர்களால் பாதிக்கப்பட்டது.
இப்படி ஒரு சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட இன வெறியை ஒரு வாரகாலமாக இலங்கை அரசும் பாதுகாப்பு துறையும் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருந்தது.
இனிவரும் காலத்தில் இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் இந்நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பந்தபட்டவர்களை
சட்டத்தின் முன்னிறுத்துமாறும் வலியுறுத்தியே இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்ட்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkq0.html

Geen opmerkingen:

Een reactie posten