[ புதன்கிழமை, 02 யூலை 2014, 05:12.29 AM GMT ]
மரணம் அடைந்த பெண் வீட்டின் முதலாவது தளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பெண்ணின் கணவர் வீட்டில் இருந்து வெளிப்புறமாக பாய்ந்து தீயினால் பாதிக்கப்பட்டு காயமைடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வோத்தம்ஸ்ரோ, வூட்போர்ட், லெயிஸ்ரன் பகுதிகளில் இருந்து சென்ற தீயணைப்புப் படை வீரர்கள் அதிகாலை 3.05 மணியவில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தீக்கான காரணம் மற்றும் பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத் தீ விபத்தினால் உயிரிழந்தவர் 55 வயதுடைய தமிழ்ப் பெண்ணொருவர் என அடையாளம் காணப்பட்டுள்ள போதும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவற்துறையினரால் இதுவரை பெயர் வெளியிடப்படவில்லை.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkq7.html
கூட்டமைப்பினர் மோடியை சந்தித்தாலும் இலங்கை மீது இந்தியா அழுத்தம் பிரயோகிக்காது!
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 04:39.31 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சி என்ற வகையில் உலகில் எந்தவொரு தலைவரையும் சந்தித்துப் பேச்சு நடத்தலாம். அதற்காக இந்தியா எமது உள்நாட்டு விவகாரங்களில் ஒருபோதும் தலையிடாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்மாதம் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளமை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த விடயம் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசியல் கட்சி என்ற ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்திய பிரதமரை சந்தித்துப் பேச்சு நடத்தலாம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகின்றனர் என்பதற்காக இந்தியா இலங்கை மீது எவ்வாறான அழுத்தத்தையும் பிரயோகிக்காது. எந்தவொரு நாடும் இன்னொரு நாட்டின் இறைமை பாதிக்கும்படி செயற்படக்கூடாது.
அந்த வகையில் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடாது என்பதுடன் அழுத்தங்களையும் பிரயோகிக்காது. இல்ஙகை இறைமையும் ஒருமைப்பாட்டையும் கொண்ட நாடு என்பது சிரேஷ்ட தலைவராக இருக்கும் நரேந்திர மோடிக்கு நன்றாகவே தெரியும். இலங்கையின் உள்ளக விவகாரங்களில் இந்தியா தலையிடாது.
அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவதனை நம்பிக்கொண்டு இந்திய பிரதமர் எவ்வாறான அழுத்தத்தையும் எமக்கு பிரயோகிக்கமாட்டார். அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் நரேந்திர மோடிக்கும் இடையில் இடம்பெறவுள்ளதாகக் கூறப்படும் சந்திப்பு தொடர்பில் எமக்கு எந்த சிக்கலும் இல்லை.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkq5.html
Geen opmerkingen:
Een reactie posten