[ புதன்கிழமை, 02 யூலை 2014, 01:30.20 AM GMT ]
இது தொடர்பில் முஸ்லிம் கவுன்ஸில், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸீக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
அதில் அளுத்கம வன்முறைப்பற்றி இலங்கையால் கூறப்பட்ட விடயங்கள் பிழையானவை என்று கவுன்ஸில் குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கம் ஜெனீவாவில் வெளியிட்ட தகவல்படி ஜூன் 15 ஆம் திகதி அளுத்கமை வன்முறைகளை முஸ்லிம்களே ஆரம்பித்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் சர்வதேசத்தில் இலங்கையின் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு ஒன்றுக்கு வழி வகுக்கப்பட்டுள்ளதாக கவுன்ஸில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜெனீவாவுக்கான இலங்கையின் பிரதிபிரதிநிதி மனிஷா குணசேகர தமது அறிக்கை சமர்ப்பிக்கும் போது, இலங்கையின் பொலிஸ்மா அதிபரை போன்ற தோரணையில் அதனை சமர்ப்பித்துள்ளார்.
வன்முறைக்கான முதல் கல் முஸ்லிம் கிராமத்தில் இருந்தே வீசப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் வன்முறைக்கான காரணத்தை விரும்பினால் அமைச்சருக்கு காண்பிக்க முடியும் என்று கவுன்ஸில் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkp5.html
அஸ்வர் எம்.பிக்கு கொலை அச்சுறுத்தல் - பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 01:49.54 AM GMT ]
தொலைபேசி அழைப்புக்கள், குறுந்தகவல்கள் மூலமாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சில முஸ்லிம் கடும்போக்குடைய அரசியல்வாதிகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எனக்கு எதிராக குற்றம் சுமத்தி வருகின்றனர்.
ஜனாதிபதியையும் என்னையும் தொடர்புபடுத்தி ஆபாச வார்த்தைகளினால் திட்டி சிலர் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கின்றனர்.
எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் சில தரப்பினர் பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஐம்பது ஆண்டு காலமாக சிங்கள - முஸ்லிம் நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு வருகின்றேன்.
பேருவளை, அளுத்கம சம்பவங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளது.
நாட்டில் மீண்டும் போர் இடம்பெற அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு செவ்வியளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொலை மிரட்டல் தொடர்பில் அஸ்வர் எம்.பியிடம், பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkp6.html
சர்வதேச விசாரணை! நாட்டை அச்சுறுத்தும் அதிகாரம் எவருக்கும் கிடையாது!- அமைச்சர் வாசுதேவ
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 12:51.11 AM GMT ]
அதேநேரம், எதிர்ப்பு அரசியல் நடத்தி வரும் எதிர்க்கட்சி பேருவளை மற்றும் அளுத்கம சம்பவங்களை ஒரு பொழுது போக்காக எடுத்துக்கொண்டு அரசாங்கத்தின் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அவர் கூறினார்.
இராஜகிரியவிலுள்ள அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைக் குழு உறுப்பினர் முன்வைத்திருக்கும் கருத்துத் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்படக்கூடாது என்பதே அரசாங்கத்தின், பாராளுமன்றத்தின் இந்த நாட்டு மக்களின் தெளிவான நிலைப்பாடாகும். இந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.
இவ்வாறானதொரு நிலைப்பாட்டை எடுப்பதற்கான உரிமை எமக்கு உள்ளது. அவ்வாறு தீர்மானம் எடுக்கக்கூடாது என்று அச்சுறுத்தும் அதிகாரம் எவருக்கும் இல்லை.
தென்னாபிரிக்க குழுவினர் அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றே இலங்கை வருகின்றனர். இவர்களின் வருகை சிறந்த பலனைத் தரும் என்ற எதிர்பார்ப்பிலேயே நான் உள்ளேன் என்றார்.
அளுத்கம, பேருவளை சம்பவங்களைத் தடுப்பதற்கு அரசாங்கம் தவறிவிட்டதாக எதிர்க்கட்சி குற்றஞ்சுமத்துகிறதே, இதுதொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்னவென ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார,
எதிர்ப்பு அரசியல் கொள்கையைக் கொண்ட எதிர்க்கட்சியினர் இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கின்றனர். இச்சம்பவங்களை ஆயுதமாகப் பயன்படுத்தி தமது பொழுது போக்குக்காக அரசாங்கம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தச் சம்பவத்தை விட மிகவும் மோசமான இனவாத சம்பவங்களை அவர்கள் தோற்றுவித்தவர்கள், இந்த நிலையில் பேருவளை, அளுத்கம சம்பவங்கள் குறித்து கதைப்பவர்கள் தமது கைகள் எவ்வளவு சுத்தமானது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தைத் தடுப்பதற்கு அப்போது ஆட்சியிலிருந்த ஐ.தே.க அரசாங்கம் தவறிவிட்டது என்பதை அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளாரே என்றும் அமைச்சரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
பல வருடங்கள் கழித்தாவது அதனை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டிருப்பது நல்லவிடயம். இனவாதத்தைத் தூண்டி அதனை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தவேண்டும் என்ற தேவை ஐ.தே.க தலைமைக்கும் அப்போதைய ஐ.தே.க அரசாங்கத்துக்கும் இருந்தது. அக்கட்சியின் ஒரு சிலருக்கும் அப்போதைய குழப்ப சூழ்நிலைக்கும் தொடர்பு இருந்தது என்பதையும் அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkp4.html
Geen opmerkingen:
Een reactie posten