[ புதன்கிழமை, 02 யூலை 2014, 12:26.38 AM GMT ]
உலக வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றிலேயே இந்த விடயம் வெளியாகியுள்ளதாக செய்தித்தளம் ஒன்று தெரிவிக்கின்றது.
எனவே தெற்காசியாவில் உள்ள அரசாங்கங்கள், தமது பாடசாலைகளில் திறன்வாய்ந்த கல்விமுறையை உறுதிசெய்யவேண்டும் என்று உலக வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்காக பாடசாலைகளின் செயற்திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உலக வங்கி கேட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு சென்று வெறுமனே நேரத்தை செலவழிப்பது போதாது. இது சிறந்த கல்விக்கற்றலை ஏற்படுத்தாது என்று உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய உதவி தலைவர் பிலிப் லெ ஹ_ரோயு தெரிவித்துள்ளார்.
கல்வி முறையின் செயற்திறன், தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சியையும் பிராந்தியத்தின் முதலீடுகளையும் அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்;டுள்ளார்.
இலங்கை உட்பட்ட இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், பூட்டான், மாலைத்தீவு, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் 2015 ம் ஆண்டுக்கான கல்வி வளர்ச்சிக்காக அதிக பணத்தை முதலிட்டுள்ளன.
இந்த முதலீடுகள் காரணமாக தெற்காசியாவில் ஆரம்ப பாடசாலைகளின் வீதம் 75 முதல் 89வீதம் வரை அதிகரித்துள்ளது.
எனினும் இது லத்தீன் அமரிக்காவில் 94 வீதமாகவும் கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக்கில் 95 வீதமாகவும் உள்ளதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையை பொறுத்தவரை சர்வதேச தரத்தில் ஆரம்ப பாடசாலை திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
எனினும் இந்த விடயத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் பின்னிலை வகிக்கின்றன.
இந்தநிலையில் தெற்காசியாவில் மாணவர்கள் கல்விப்பயிற்சிகளில் ஈடுபடுத்தப்படுவது குறைவாக உள்ளது.
இதன்காரணமாக ஆரம்பபாடசாலைகளில் இருந்து வெளியேறும் மாணவர்கள்ää குறைந்த திறன்களுடனேயே வெளியேறுகின்றனர்.
எனவே இவற்றை தவிர்ப்பதற்கு சிறுவர்களின் போசாக்கு தன்மையை அதிகரிக்க வேண்டும், ஆசிரியைகளின் திறன்களை உயர்த்த வேண்டும், நிதியளிப்புகளை அதிகரிக்கவேண்டும், கல்வியில் தனியாருக்கு அதிக இடம் வழங்கப்பட வேண்டும். மாணவர்களின் முன்னேற்றங்களை அளவீடு செய்யவேண்டும் போன்ற பரிந்துரைகளை உலக வங்கி முன்வைத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkp1.html
நல்லிணக்க பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்!- ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் கோரிக்கை
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 12:40.48 AM GMT ]
இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை விசாரணைக் குழுவினரை நியமித்துள்ளமை வரவேற்கத்தக்கது.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் நல்லிணக்க பரிந்துரைகளை முழுமையாக அமுல்செய்ய முன்வர வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் பிரசல்ஸில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுவே இலங்கையில் நிரந்தரமாக அமைதியை கொண்டு வரும் என்றும் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkp2.html
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு முல்லைத்தீவில் ஆரம்பம்
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 12:47.03 AM GMT ]
இந்த அமர்வு எதிர்வரும் ஐந்தாம் திகதி முதல் எட்டாம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ஆம் 6 ஆம் திகதிகளில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திலும் 7ஆம் 8 ஆம் திகதிகளில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிலும் அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்த ஆணைக்குழுவின் அமர்வுகள் ஏற்கனவே கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன.
இதன்போது மட்டக்களப்பில் 195 முறைப்பாடுகளுக்கு புறம்பாக 216 புதிய முறைப்பாடுகள் கிடைத்தன.
இதேவேளை ஆணைக்குழுவுக்கு இதுவரை 18789 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இவற்றில் ஐயாயிரம் முறைப்பாடுகள் பாதுகாப்பு தரப்பில் இருந்து கிடைத்தவையாகும்.
இந்த ஆணைக்குழு 14 ஆகஸ்ட் 2013 இல் ஸ்தாபிக்கப்பட்டது. இது 1990 ஜூன் 10 திகதி முதல் 2009 மே 19 திகதி வரையில் இடம்பெற்ற காணாமல் போதல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் அதிகாரத்தை கொண்டிருக்கிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkp3.html
Geen opmerkingen:
Een reactie posten