[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 05:06.14 PM GMT ]
எதிர்வரும் காலங்களில் அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கத்தின் அனுமதியின்றி வெளிநாட்டு நிதி பெற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளது.
இந்த அனுமதி நிதி திட்டமிடல் அமைச்சிடம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
உள்நாட்டு தர நிர்ணயங்களுக்கு அமைவாக வெளிநாட்டு நிதி உதவி பயன்படுத்தப்பட வேண்டியது அவசியமானது.
உரிய அனுமதியின்றி பல அரச சார்பற்ற நிறுவனங்கள் வெளிநாட்டு பணத்தைப் பெற்றுக்கொண்டு, செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
வெளிநாட்டு நிதி உதவி பெற்றுக்கொள்ளும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள், தேசிய அபிவிருத்தி திட்டங்களை மலினப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாக நிதி திட்டமிடல் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRWLckq2.html
சர்வதேச நிபுணர்களை இணைத்துக்கொண்ட ஜனாதிபதியின் செயலுக்கு வீரவன்ச எதிர்ப்பு - ஹெல உறுமயவும் கண்டனம்
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 11:41.31 PM GMT ]
இது தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச, ஜனாதிபதி மகிந்தவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் சர்வதேச நிபுணர்கள் என்போர் பொம்மைகளாக செயற்படக் கூடியவர்கள். அவர்கள் மேற்கத்தைய முதலாளித்துத்தின் பால் நின்றே முடிவுகளை மேற்கொள்வர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நிபுணர்களை இலங்கையின் உள்நாட்டுக் குழுவில் இணைத்தமையானது, இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை நடத்த வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
எனவே இந்த முடிவை அரசாங்கம் உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று விமல் வீரவன்ச கோரியுள்ளார்.
ஜனாதிபதி நியமித்துள்ள இந்த சர்வதேச நிபுணர்களை பயன்படுத்தி வெளியார் இலங்கையின் பிரச்சினைகளில் இலகுவதாக தலையிடக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டு விடும்.
அத்துடன் இது இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கும் உறுதிப்பாட்டை வழங்கிவிடும் என்று விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஆலோசனை வழங்க குழு நியமித்தமைக்கு ஹெலஉறுமய கண்டனம்
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நிறுவிய குழுவிற்கு பதிலாக மூன்று நிபுணர்கள் அடங்கிய குழுவை அரசாங்கம் நியமித்தமை அரசாங்கத்தின் தகுதியில்லாத நடவடிக்கை என்று ஜாதிக ஹெல உறுமய குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாண சபையின் உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவிக்கையில்,
மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக வெளியார் தலையிடுவதற்கு அனுமதியளித்தல் அவ்வாறு இல்லாவிடின் வெளிநபர்களை அழைத்து விசாரணைகளை முன்னெடுத்தல் ஆகியவற்றுக்கு இடமளிக்காது இருப்பதே அரசாங்கத்தில் நிலைப்பாடாக இருந்தது.
இந்நிலையில், வெளிநாடுகளைச் சேர்ந்த நிபுணர்களை நியமித்ததன் ஊடாக அரசாங்கம் இதுவரையிலும் கடைபிடித்து வந்த கொள்கை மற்றும் நிலைப்பாட்டை மீறியுள்ளது. இந்த நியமனம் தொடர்பில் அரசாங்கத்தின் பங்காளியான எங்களுடைய கட்சிக்கு எவ்விதத்திலும் தெளிவுப்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
பாதுகாப்பு படையினருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அவற்றை ஜாதிக ஹெல உறுமய கடுமையாக எதிர்க்கும்.
அதேபோல, ஆலோசனை வழங்குவதற்காக வெளிநாட்டு நிபுணர்கள் மூவரை நியமித்தமைக்கு ஜாதிக ஹெல உறுமய தம்முடைய கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது என்றார்.
ஆலோசனை வழங்குவதற்காக இந்த நிபுணர்கள் குழுவை நியமித்தமைக்கு அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும் என அவர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRWLckq5.html
இஸ்ரேலுடன் இலங்கை சகல தொடர்புகளையும் கைவிட வேண்டும்! பலஸ்தீன ஒத்துழைப்பு அமைப்பு கோரிக்கை
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 12:25.38 AM GMT ] [ பி.பி.சி ]
காசாவில் பலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்ற இஸ்ரேலுடன் இலங்கை சகல தொடர்புகளையும் கைவிட வேண்டுமென்று இலங்கை பலஸ்தீன ஒத்துழைப்பு அமைப்பு இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளது.
இந்த அமைப்பு கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய கூட்டத்தில் இக்கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐநாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தயான் ஜெயதிலக,
இலங்கை ஜனாதிபதி பலஸ்தீனர்களுக்கு ஆதரவான கொள்கையைக் கடைப்பிடித்தாலும், இலங்கை அரசாங்கத்தின் அங்கமான வெளிநாட்டு அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் இஸ்ரேல் அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் வடகிழக்கில் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்ட பாதுகாப்பு குழு இஸ்ரேலிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டிருந்தன என்றும், இதனால்தான் வெளிநாடுகளில் தமிழ் பிரிவினைவாதிகள் பலமடைந்தனர் என்றும் தயான் குற்றஞ்சாட்டினார்.
இலங்கையின் தவறான வெளியுறவுக் கொள்கையே இந்நிலைக்கு காரணம் என அவர் சாடினார்.
இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறையின் பின்னணியில் இஸ்ரேலின் ஆதரவைப் பெற்ற குழுக்கள் இருப்பதாக அவர் பழிசுமத்தினார்.
ஆனால் பலஸ்தீனம் தொடர்பான இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் இல்லை என்றும், அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டங்களின் போது பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக செயல்படுமாறு ஜனாதிபதி அமைச்சர்களைக் கேட்டுக்கொண்டார் என்றும் இலங்கை பலஸ்தீன ஒத்துழைப்பு சங்கத்தின் சமதலைவர் அமைச்சர் அதாவுத செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLckq7.html
Geen opmerkingen:
Een reactie posten