[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 11:34.50 PM GMT ]
இந்திய பிரதி வெளிவிவகார அமைச்சர் வை.கே. சின்ஹா, இலங்கையில் 13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென இ;ந்திய நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்ய இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதனால், 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காணி பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய 13வது திருத்தச் சட்ட பரிந்துரைகளை அமுல்படுத்த முடியும் என இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் தெரிவித்துள்ளது.
எனினும் பொலிஸ் காணி அதிகாரங்கள் மாகாணசபைக்கு வழங்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRWLckq4.html
விக்னேஸ்வரனின் கோரிக்கையை ஐ.நா. நிராகரித்துள்ளது!
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 11:26.56 PM GMT ]
வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனின் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் அமைப்பு நிராகரித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுளளது.
வடக்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பில் வட மாகாண சபையுடன் இணைந்து செயற்படுமாறு விக்னேஸ்வரன், ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்துடன் மட்டுமே ஐக்கிய நாடுகள் அமைப்பினால் இணைந்து செயற்பட முடியும் என அறிவித்துள்ளது.
வட மாகாணசபை ஒர் அரசாங்கம் இல்லையென்பதால் உடன்படிக்கைகள் கைச்சாத்திட முடியாது.
வடக்கு குறித்த திட்டங்களை அமுல்படுத்தும் போது அது தொடர்பில் மாகாணசபைக்கு அறிவிக்க வேண்டுமென விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.
எனினும், இந்தக் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் அமைப்பு நிராகரித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRWLckq3.html
Geen opmerkingen:
Een reactie posten