தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 23 juli 2014

பிரிக்ஸை அடுத்து சார்க் வங்கி! இந்தியாவின் புதிய திட்டம்!!

ஜனாதிபதியின் இணைப்பாளர்களாக 23 பேர் கடமையாற்றி வருகின்றனர்
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 12:05.40 AM GMT ]
ஜனாதிபதியின் இணைப்பாளர்களாக 23 பேர் கடமையாற்றி வருவதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கான இணைப்புச் செயலாளர்களாக 23 பேர் கடமையாற்றி வருகின்றனர்.
இணைப்புச் செயலாளர் ஒருவருக்கு மதாந்த சம்பளம் 30000 ரூபாவாகும். இதற்கு மேலதிகமாக போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.
மாதமொன்றுக்கு 170 லீற்றர் பெற்றோல் வழங்கப்படுகின்றது.
பெற்றோல் கொடுப்பனவிற்கு மேலதிகமாக 30000 ரூபா கொடுப்பனவும், 5000 ரூபா தொலைபேசி கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது.
இதன்படி கடந்த மூன்று ஆண்டுகளில் இணைப்புச் செயலாளர்களுக்காக மூன்று கோடி எழுபத்து ஆறு லட்ச ரூபா செலவிடப்பட்டுள்ளது என அவர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLckq6.html
பிரிக்ஸை அடுத்து சார்க் வங்கி! இந்தியாவின் புதிய திட்டம்
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 12:52.49 AM GMT ]
பிரிக்ஸ் என்ற வங்கி அமைப்புக்கு பின்னர் தெற்காசிய நாடுகள் மத்தியில் வங்கி ஒன்றை ஸதாபிப்பதற்கு இந்தியாவின் நரேந்திர மோடியின் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இலங்கை உட்பட்ட சார்க் நாடுகளை உள்ளடக்கி இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சார்க் நாடுகளின் அபிவிருத்தியை அடிப்படையாக கொண்டே இந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
தெற்காசிய அபிவிருத்தி வங்கி என்ற பெயரில் உருவாக்கப்படவுள்ள இந்த வங்கியின் மூலம் சார்க் நாடுகள் உட்கட்டமைப்புகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு உந்து சக்தி வழங்கப்படும்.
இந்தியாவின் இந்த யோசனைக்கு சார்க் உறுப்பு நாடுகள் இணங்கினால், திட்டம் முன்னெடுத்து செல்லப்படும் என்று பூட்டானில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இந்திய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பிரேசில், ரஸ்யா, இந்தியா. சீனா மற்றும் தென்னாபிரிக்கா ஆகியன இணைந்து தமது நாடுகளின் முன்னெழுத்துக்களை கொண்டு பிரிக்ஸ் என்ற வங்கி அமைப்பை உருவாக்கியதன் பின்னரே புதிய திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLckr0.html

Geen opmerkingen:

Een reactie posten