[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 02:16.06 AM GMT ]
உலக அரங்கில் இலங்கையின் நன்மதிப்பினை மேம்படுத்தும் நோக்கில் இந்த இரண்டு நிறுவனங்களும் செயற்பட உள்ளன.
இதற்காக அரசாங்கம் பாரியளவு பணத்தை செலவிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மெடிசன் மற்றும் போல்ட்வே ஆகிய இரண்டு முன்னணி பிரசார நிறுவனங்களே இவ்வாறு ஈடுபடுத்தப்பட உள்ளன.
மெடிசன் குருப் நிறுவனம் சேவைக் கட்டணமாக 15000 அமெரிக்க டொலர்களை அறவீடு செய்கின்றது.
ஏனைய நிகழ்வுகளுக்காக மேலதிகமாக பணம் செலுத்தப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
பொல்ட்வே நிறுவனத்திற்கும் பாரியளவில் பணம் செலுத்த வேண்டியுள்ளது.
நாட்டின் நன்மதிப்பை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறு பிரசார நிறுவனங்களின் உதவி நாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLblu3.html
பேருவளை கூட்டத்தில் சர்வதேச விசாரணை குறித்து ஆராயப்படவில்லை! தேர்தலுக்கு தயாராகுமாறு அறிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 02:21.11 AM GMT ]
பேருவளையில் நேற்று ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக இடம்பெற்ற நிகழ்வில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை.
பாப்பரசர் அடுத்த வருட ஆரம்பத்தில் இலங்கைக்கு வருகை தரவிருப்பதால் அதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே அவரின் வருகையின் பின்னரே தேர்தல்களை நடத்த முடியும் என்று இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
மற்றும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தற்போதைய நிலைமைகள் குறித்து கருத்துக்கள் பெறப்பட்டன. அத்துடன் புத்திஜீவிகளை கொண்டு அவர்களுக்கு கருத்தமர்வுகளும் நடத்தப்பட்டன.
அண்மையில் தென்னிலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்தும் இதன்போது கருத்துக்கள் பகிரப்பட்டன.
எனினும் முன்னர் குறிப்பிடப்பட்டபடி இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைகள் குறித்தோ அதன் போது செயற்படும் விதங்கள் குறித்தோ இந்த அமர்வில் கருத்துக்கள் பகிரப்படவில்லை என்று அதில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLblu4.html
ஆளும் கட்சியினரே இனவாத முரண்பாடுகளை தூண்டுகின்றனர்: ஐ.தே.க
[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 02:29.50 AM GMT ]
பேருவளை, அளுத்கம சம்பவங்களுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது வேறும் தரப்பினருக்கோ தொடர்ப இருந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பார்கள்.
வன்முறை சம்பவத்தில் ஆளும் கட்சியுடன் தொடர்புடையவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
இன, மத வன்முறைகளுடன் அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக ஆளும் கட்சி அமைச்சர்கள் பகிரங்கமாக ஒப்பக்கொண்டுள்ளனர். இதனை விடவும் வேறும் சாட்சிகள் அவசியமில்லை.
அரசாங்கத்தின் உயர் பதவிகளை வகித்து வரும் முக்கிய தலைவர்களே இன, மதவாத அமைப்புக்களை வழி நடத்துகின்றனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நியாயங்களை முன்வைத்தாலும், சம்பவங்கள் இடம்பெறுவதற்கு அரசாங்கமே காரணம்.
ஐக்கிய தேசியக் கட்சி இன சமூகங்களை ஐக்கியப்படுத்தும் கட்சியாகும்.
தமிழ் முஸ்லிம் மக்கள் அதிகளவில் ஐக்கிய தேசயிக் கட்சிக்கே ஆதவரளிக்கின்றனர்.
கட்சியின் தவிசாளர் பதவியை முஸ்லிம் ஒருவரும், பொருளாளர் பதவியை தமிழர் ஒருவரும் வகித்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLblu5.html
சிங்கள மக்களால் மாத்திரமன்றி பௌத்த சங்கத்தாலும் புறக்கணிக்கப்படும் பொது பல சேனா அமைப்பு!
[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 02:31.36 AM GMT ]
இது பற்றி அவர் தகவல் வெளியிடுகையில்,
நான் பல வருடங்கள் வெளிநாட்டில் பணியாற்றி விட்டு வந்து இவ் அமைப்பில் இணைந்ததன் பின்னர் தன்னைப் பார்ப்பதையும் தான் பங்குபற்றும் நிகழ்ச்சிகளிலும் கூட பலர் கலந்து கொள்வதை தவிர்த்து வருவதாகவும், தன்னோடு நெருக்கமாக இருந்த பல துறவிகள் பலர் தன்னை ஒதுக்கி வைக்க ஆரம்பித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறு இருக்க இன்றும் கூட பொதுபல சேனா அமைப்பு ஒரு பாரிய சக்தியாக இருப்பதற்கு இலகுவில் வன்முறையை தூண்டக்கூடிய சக்தியாக இருப்பதற்கும், அவ்வமைப்புக்காக அரச ஆதரவும் அனுசரணையுமே காரணம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLblu6.html
விடுதலைப்புலிகளின் ஏவுகணை படைப்பிரிவு உறுப்பினர்களை தடுத்து வைக்க உத்தரவு
[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 02:39.44 AM GMT ]
இது தொடர்பான விசாரணை நேற்று இடம்பெற்ற போது இந்த இரண்டு பேரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜெகன் மற்றும் சின்னத்திலகன் ஆகியோர் பலாலியில் இருந்து ரத்மலானைக்கு புறப்பட்ட அன்டனோவ் 34 விமானத்தை அநுரதபுரத்தில் வைத்து சுட்டுவீழ்த்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 4 ரஷ்யர்கள் உட்பட்ட 40 பேர் பலியாகினர்.
இதன்பின்னர் குறித்த இருவரும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் விடுதலைப்புலிகளின் ஏவுகணை படைப்பிரிவை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்தநிலையில் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது
http://www.tamilwin.com/show-RUmsyHTVLblu7.html
Geen opmerkingen:
Een reactie posten