தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 1 juli 2014

அரசாங்கத்தினால் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியும்?



சீனாவின் நவீன பட்டுவீதி தொடர்பான தகவல்களை திரட்டும் இந்தியா
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 11:57.56 PM GMT ]
இலங்கை,  பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் ஒத்துழைப்புடன்  சீனா உருவாக்கி வரும் நவீன பட்டுவீதி திட்டத்தின் தகவல்களை இந்தியா திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
இலங்கையின் ஊடாக பாகிஸ்தானிய தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவுவதாக வெளியான தகவல்களும், இலங்கை அரசாங்கம் சீனாவுடன் அதீத உறவினை பேணி வருகின்றமையும், இலங்கையை இந்தியாவுக்கு அச்சுறுத்தலான நாடாகப் பார்க்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது.
இந்த நிலையில் சீனா இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தோடு இணங்கியதாக, நவீன பட்டுவீதியை நிர்மாணித்து வருகிறது.
ஆனால் இதனை பயன்படுத்தி சீனா, அம்பாந்தோட்டையில் தங்களின் ஆயுதக் கப்பல்களை நிறுத்த முயற்சிக்கும் என்று இந்தியா கருதுகிறது.
இந்தநிலையிலேயே இந்தியா இது குறித்த தகவல்களை திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyGQULblt6.html
வெளிநாட்டு விஜயங்களின் போது அமைச்சர்களின் செயற்பாடு குறித்து ஜனாதிபதி ஆலோசனை
[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 12:38.37 AM GMT ]
வெளிநாட்டு விஜயங்களின் போது அமைச்சர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்.
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  அமைச்சர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார்.
வெளிநாட்டு விஜயங்களின் போது சில நியதிகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக வெளிநாட்டு விஜயங்களின் போது எவ்வாறு அரசாங்கப் பணத்தை பயன்படுத்துவது என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரச நிதி முகாமைத்துவம் மற்றும் சரியான பயன்பாடு என்ற தொனிப் பொருளில் இந்த நியதிகள் உருவாக்கப்பட்டுளளன.
இந்த நியதிகள் தொடர்பிலான ஆவணமொன்று ஏற்கனவே அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள்,  உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், இந்த புதிய நியதிகள் அடங்கிய ஆவணத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆளுனர்களின் விஜயங்கள் தொடர்பில் எவ்வித கட்டுப்பாடுகளும் பிறப்பிக்கப்படாமை ஆளும் கட்சியினருக்கு இடையில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLbluz.html
அரசாங்கத்தினால் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியும்?
[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 02:08.30 AM GMT ]
அரசாங்கத்தினால் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
அனுமதியின்றி; தொலைபேசிக்குள் புகுந்து உளவுப் பணிகளில் ஈடுபட சாத்தியங்கள் காணப்படுகின்றன.
உலகின் பல நாடுகளின் அரசாங்கங்கள் இவ்வாறு தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கின்றன.
கலிலியோ என்னும் கருவியைக் கொண்டு இவ்வாறு உளவு பார்க்கப்படுவதாக கஸ்பர்ஸ்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.
அன்ட்ரைட்,  ஐ.ஓ.சிஸ்,  வின்டோஸ்,  பிளக்பரி போன்ற தொலைபேசிகளுக்குள் இலகுவில் பிரவேசிக்க முடியும்.
தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள், குறுந்தகவல்கள் பற்றிய விபரங்களை பெற்றுக்கொள்வது மட்டுமன்றி தொலைபேசியின் மைக்கை ஒன் செய்து சுற்றுச்சூழலின் சத்தங்களைக் கூட அறிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு நவீன கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
அபிவிருத்தி அடைந்து வரும் மற்றும் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இவ்வாறு உளவு பார்க்கப்படுகின்றது.
சில நாடுகளில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கும், மாற்றுக் கருத்துக்களை முடக்குவதற்கும் இவ்வாறு தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLblu1.html

Geen opmerkingen:

Een reactie posten