[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 02:46.51 PM GMT ]
இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குமரன் பத்மநாதனை பாதுகாக்கும் தரப்பினர் என்னை தேசத் துரோகி என குற்றம் சுமத்தினால் பரவாயில்லை.
ஊடகவியலாளர்களை பாதுகாக்க நான் தொடர்ச்சியாக குரல் கொடுப்பேன்.
குமரன் பத்மநாதனை பாதுகாப்பதா அல்லது ஊடகவியலாளர்களை பாதுகாப்பதா என்ற பிரச்சினை உருவாகியுள்ளது.
ராஜபக்ச அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை முற்று முழுதாக ஒடுக்கியுள்ளது.
அளுத்கம சம்பவம் தொடர்பிலான செய்திகள் ஊடகங்களில் மறைக்கப்பட்டமைக்கு காரணம் சமாதானத்தை நிலைநாட்டுவதல்ல.
அரசாங்கத்தின் பாவ காரியங்களை மறைத்துக் கொள்ளவேயாகும்.
அளுத்கம, பேருவளை சம்பவங்கள் தொடர்பிலான செய்தி அறிக்கையிடலுக்கு அரசாங்கம் பல்வேறு வழிகளில் தடைகளை ஏற்படுத்தியிருந்தது.
சில ஊடகங்களுக்கு எழுத்து மூலமான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன.
பொதுவாக மதப்பிரச்சினை ஏற்பட்டால் அதனை தூண்டி விடாது அமைதிப்படுத்தும் வகையில் செய்தி அறிக்கையிட வேண்டியது ஊடகங்களில் கடமையாகும்.
எனினும் அரசாங்கம் ஒரு பக்கச்சார்பான செய்திகளை வெளியிட ஊடகங்களை பணித்திருந்தது.
தர்ஹா நகர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பற்றிய செய்திகளை வெளியிட வேண்டாம் என கோரியிருந்தது என ரணி;ல் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLblx7.html
தாதியொருவரின் வீட்டின் கூரை மீது நின்ற சிங்களவர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 02:39.29 PM GMT ]
இன்று முற்பகல் 10 மணியளவில், குறித்த வீட்டின் கூரையின் மீது ஒருவர் நிற்பதை அவதானித்த அயல் வீட்டார், அப்பகுதி இளைஞர்களுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, இளைஞர்கள் சுற்றி வளைத்து அந்த நபரை மடக்கி பிடித்து மட்டக்களப்பு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சிங்களவர் கொழும்பு பாதுக்கையைச் சேர்ந்த விக்ரம ஆராச்சி ( 35 வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பு மங்களராம விகாரையில் தங்கியிருந்தவர் என பொலிஸார் தெரிவிததுள்ளனர்.
குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLblx6.html
நியமனம் பெற்றுள்ள புதிய தூதுவர்களிடம் நாட்டின் முன்னேற்றத்தை கண்டறியும்படி மகிந்த தெரிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 02:48.19 PM GMT ]
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு உயர் ஸ்தானிகர்கள் மற்றும் மூன்று புதிய தூதுவர்கள் இன்று காலை தமது நியமனப் பத்திரங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கையளித்தனர்.
இது தொடர்பான வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் கிரஹம் மோர்டன், ஜோர்தான் ஹஷேமைட் இராச்சியத்தின் தூதுவர் ஹசன் மஹ்மூத் முகமது அல் ஜவாமி, மாலைதீவுகள் குடியரசு உயர் ஸ்தானிகர் திருமதி ஸாஹியா ஸரீர், பூட்டான் இராச்சியத்தின் தூதுவர் திருமதி பெமா சோடன், பொஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினாவின் தூதுவர் சாபித் சுபாசிக் ஆகியோரே தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர் திருமதி சித்ராங்கனி வகீஸ்வர ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி மாளிகையில் இன்று நடந்த கலந்துரையாடலில், போரின் பின்னர் நாட்டில் நடந்த முன்னேற்றத்தையும், 30 வருட துயரத்திற்கு பிறகு தற்போது நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவி வருவதாகவும் வெளிநாட்டு தூதர்களுக்கு ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி, தமிழீழ விடுதலைப் புலிகளின் மிருகத்தன்மையும், வடக்கு மாகாணத்தில் பள்ளிக்கூடம், போக்குவரத்து மற்றும் மருத்துவமனைகளை LTTE அழித்ததையும், பின்னர் அரசு அதனை சீரமைத்ததையும் பற்றி விவரித்தார்.
மேலும் வடக்கு மாகாணத்தில் 28 வருடங்களுக்கு பிறகு தேர்தல் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அனைத்து தூதர்களும் சிறிலங்காவுடன் உறவினை மேம்படுத்தவும், இணைந்து செயல்பட்டு அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை காணவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLbkoy.html
Geen opmerkingen:
Een reactie posten