தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 25 juli 2014

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்குமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் சம்மேளனம்! சந்திரிகா,சிராணி,மாதுளுவாவே தேரர் உட்பட பலரும் பங்கேற்பு



நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என வலியுறுத்தி, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில், வண.மாதுலுவாவே சோபித்த தேரரின் தலைமையில் நேற்று வியாழக்கிழமை, கொழும்பு நகர மண்டப கேட்போர் கூடத்தில் அணிதிரண்டனர்.
இதில், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, மக்கள் விடுதலை முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவரும் எம்.பியுமான கரு ஜெயசூரிய உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம்' என்ற தொனிப்பொருளில் நேற்றுக் கொழும்பில் இடம்பெற்ற சம்மேளனத்தில் கலந்துகொண்டே மேற்படி அரசியல் தலைவர்களும், சமயத் தலைவர்களும், சிவில் சமூகப் பிரதிநிதிகளும் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
கோட்டே ரஜமஹா விகாராதிபதி வண.மாதுலுவாவே சோபித்த தேரர் தலைமையிலான சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, கொழும்பு - 07 புதிய நகர மண்டபத்தில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு இந்தச் சம்மேளனம் நடைபெற்றது.
அரச பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் வண.அத்துரலிய ரத்ன தேரர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, திஸ்ஸ அத்தநாயக்க, ரவி கருணாநாயக்க, கயந்த கருணாதிலக்க, மங்கள சமரவீர, விஜேதாஸ ராஜபக்­ச, அசோக அபேசிங்க   உள்ளிட்ட மேலும் பல பல அரசியல்வாதிகளும் பங்கேற்றனர்.
அத்துடன், சட்டத்தரணிகளான ஜயம்பதி விக்ரமரட்ண, வெலியமுன மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் எனப் பலரும் இந்தச் சம்மேளனத்தில் கலந்துகொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLcjq0.html

Geen opmerkingen:

Een reactie posten