[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 03:34.54 AM GMT ]
இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை நடத்தும் விசாரணையை விஞ்சும் வகையில் எமது குழுவின் விசாரணைகள் அமையும். இவ்வாறு காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார்.
காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையானது யுத்த காலத்தில் சர்வதேச மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதா என்பதனை விசாரிக்கும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் விரிவுபடுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கொழும்பு தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேகச் செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தொடர்கையில்,
எமது குழு ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் விசாரணையை விட சுயாதீனமானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான விசாரணையை எமது நாட்டில் உள்ளக ரீதியில் நடத்தி அறிக்கையை வெளியிடும். இது விரிவுபட்டதாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது நேருக்கு நேர் விசாரணையாகும். எனவே எமது உள்ளக விசாரணை சுயாதீனமாகவும் நம்பகத்தன்மை மிக்கதாகவும் அமையும். இந்த விசாரணை செயற்பாட்டில் புலம் பெயர்ந்தவர்களும் சாட்சியங்களை அளிக்கலாம்.
மேலும், யாருக்கு எதிராக முறைப்பாடு முன்வைக்கப்படுகின்றதோ அவர்கள் விசாரிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய ஆணைக்கு அமைவாக சர்வதேச தரத்துக்குட்பட்ட வகையில் விசாரணைகளை நடத்துவதற்காக ஆலோசனை வழங்கவே சர்வதேச நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை எமது விசாரணை அமர்வுகளில் பங்குபற்றுவதற்கு நாங்கள் அழைக்கவுள்ளோம் என்றும் பரணகம கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLckw5.html
ஜூலை வன்முறைகளில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் கொல்லப்பட்டனர்!– சந்திரகுமார் முருகேசு
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 12:08.51 AM GMT ]
ஜூலை பணிப் புறக்கணிப்பு தொடர்பிலான நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதம் ஓர் இரத்தம் தோய்ந்த மாதமாகும்.
ஜனநாயக ரீதியில் தங்களது உரிமைகளைக் கோரிய அரச பணியாளர்கள் தாக்கப்பட்டு, பணி நீக்கப்பட்டிருந்தனர்.
83ம் ஆண்டு இன வன்முறைகளில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
தமிழ் அரசியல் கைதிகளையும் கொலை செய்தனர்.
இன்று தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் தரப்பினர் அன்று பெருந்தோட்டத் தமிழர்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கவில்லை. இதனால் நிலைமை மேலும் மோசமடைந்தது.
1983ம் ஆண்டில் நாட்டை ஆட்சி செய்தவர்கள் இந்த அனர்த்தங்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLckv5.html
Geen opmerkingen:
Een reactie posten