தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 21 juli 2014

எழிலன் உள்ளிட்டோரின் வழக்கில் அதிரடியாக விலகினர் மாவட்ட நீதிபதி….

இறுதி யுத்த நடவடிக்கையின் போது சரணடைந்த மற்றும் குடும்பத்தவர்களால் நேரடியாக படையினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையினிலிருந்து தாம் விலகுவதாக முல்லைதீவு நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராசா அறிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் உச்சபட்ச அழுத்தங்களினையடுத்தே அவர் அவ்வாறு அறிவித்திருப்பதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் விசேட நீதிபதியொவரை நியமித்து ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையினை முன்னெடுக்க அவர் நீதி அமைச்சினை கோரியிருப்பதாக தெரியவருகின்றது.
வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட சிலரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் மீதான ஆரம்ப கட்ட விசாரணையினை வவுனியா மேல்நீதிமன்று முல்லைதீவு மாவட்ட நீதிமன்றிற்கு பணித்து வந்திருந்தது. எனினும் முல்லைதீவு நீதிமன்ற விசாரணைகளிற்கு அரச தரப்பு ஒத்துழைப்பு வழங்காது இழுத்தடித்து வந்திருந்தது.
இந்நிலையினிலேயே ஆட்கொணர்வு மனுமீதான விசாரணையினிலிருந்து தாம் விலகுவதாக முல்லைதீவு நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராசா அறிவித்துள்ளார்.அத்துடன் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கினை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைத்துமுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/76962.html

Geen opmerkingen:

Een reactie posten