தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 23 juli 2014

இளைஞர் பாராளுமன்ற அமர்வை யாழ்.உறுப்பினர்கள் புறக்கணிக்கத் தீர்மானம்!

உறுப்பினர்கள் போதாமையினால் நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு!
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 02:47.34 PM GMT ]
இலங்கை நாடாளுமன்றில் போதியளவு உறுப்பினர்கள் பிரசன்னமாகாத காரணத்தினால் நாடாளுமன்ற அமர்வுகள் நாளை வியாழக்கிழமை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் காரணத்தினால் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி அவை நடவடிக்கைகளை நாளை வரையில் ஒத்தி வைத்துள்ளார்.
ஜூலை பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டது.
நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் சமால் ராஜபக்ச தலைமையில் ஆரம்பமானது.
எனினும் பின்னர் போதியளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் பிரசன்னமாகியிருக்காத காரணத்தினால், அவை நடவடிக்கைகளை நாளை வரையில் ஒத்தி வைப்பதாக பிரதி சபாநாயகர் அறிவித்துள்ளார்.

சம்பிக்கவின் முகநூல் பக்கம் முடக்கம்! முகநூல் நிறுவனத்திடம் சம்பிக்க முறைப்பாடு!
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 02:52.06 PM GMT ]
தொழில்நுட்ப மற்றும் ஆய்வு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
எனது முகநூல் மற்றும் ரசிகர் இணையப் பக்கங்கள் எவ்வித காரணமும் அறிவிக்கப்படாது முடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பிக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து முகநூல் நிர்வாகத்தினருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளேன். ஆராய்ந்து பார்த்து பதிலளிப்பதாக நிர்வாகத்தினர் பதிலொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

எனது முகநூல் பக்கத்தில் மாறுபட்ட கருத்துக்களை உடைய 21,000 பேர் இணைந்து கொண்டுள்ளனர்.

எனது பெயருக்கு நிகரான பெயர்களைக் கொண்டதும், புகைப்படத்தையும் உடையதுமான ஐந்துக்கும் மேற்பட்ட போலிக் கணக்குகள் காணப்படுகின்றன.

இவற்றில் போலித் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன் மக்கள் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளனர்.

எனது முகநூல் பக்கம் முடக்கப்பட்டதனால் ரசிகர்கள்,  அரசியல்வாதிகள் மற்றும் ஏனைய தரப்பினர் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்தினால் இது குறித்து ஊடகங்களில் அறிவித்தேன்.

முகநூல் பக்கம் முடக்கப்பட்டதன் பின்னணியில் திட்டமிட்ட குழுவொன்று செயற்பட்டுள்ளது என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

முகநூல் நிறுவனத்திடம் சம்பிக்க முறைப்பாடு

தமக்கு அறிவிக்காமலேயே தமது முகநூலை செயலிழக்கச் செய்தமை தொடர்பில் இலங்கையின் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க முகநூல் நிறுவனத்திடம் முறையிட்டுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தமது முறைப்பாடு குறித்து ஆராய்ந்து பதிலளிப்பதாக முகநூல் நிறுவனம் தனக்கு உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமது முகநூலில் 21000 பேர் தமக்கு அறிமுகமானவர்களாக உள்ளதாகவும், இந்தநிலையில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அதில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமது பெயரில் 5 முகநூல் முகவரிகள் போலியாக திறக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றமை காரணமாகவே தமது உத்தியோகபூர்வ முகநூல் முடக்கப்பட்டிருக்கலாம் என்று தாம் நம்புவதாக ரணவக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLcku6.html
இளைஞர் பாராளுமன்ற அமர்வை யாழ்.உறுப்பினர்கள் புறக்கணிக்கத் தீர்மானம்
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 03:29.52 PM GMT ]
யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ள இளைஞர் பாராளுமன்ற 9வது அமர்வைப் புறக்கணிக்கவுள்ளனர்.
கம்பகாவில் இடம்பெற்ற 26 வது இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியில், யாழ் மாவட்ட அணியினர் தாக்கப்பட்டமை, வீரர்களுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் கீழ்த்தரமாக அம்பாந்தோட்டை மாவட்ட அணி நடந்து கொண்டமைக்கு கண்டனம் தெரிவித்தும்,
தாக்கியவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியுமே இளைஞர் பாராளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிக்கவுள்ளனர்.
இன்று யாழ்ப்பாணக் காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் படியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான கடிதங்கள் இளைஞர் விவகார திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அளகப்பெரும, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் நாயகம் லலித் பியூம் பெரேரா உள்ளிட்டவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLcku7.html

Geen opmerkingen:

Een reactie posten