தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 23 juli 2014

பிரிட்டனில் இலங்கை மாணவர் கொலை! இரண்டாவது கொலையாளியும் இனங்காணப்பட்டார்!



இலங்கை சைக்கிள் ஓட்ட வீரர்களை தடுத்து நிறுத்திய ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸார்
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 03:54.04 PM GMT ]
பொதுநலவாய நாடுகளின் போட்டிகளுக்காக சென்ற சைக்கிள் ஓட்ட வீரர்கள், ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸாரால் தடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நான்கு பேரைக் கொண்ட இலங்கை சைக்கிள் ஓட்ட வீரர்கள், ஸ்கொட்லான்ட்யாட்டின் மிகவும் சுறுசுறுப்பு மிக்க வீதியில் பயணித்துள்ளனர்.
இது தொடர்பில் தகவல் அளித்துள்ள ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸார்,
குறித்த நான்கு பேரும் எம் 77 வீதியின் மதர்வெல் மற்றும் ஹமில்டன் வெளிச்செல்லும் இடத்தில் வைத்து தடுக்கப்பட்டனர். இதன்போது குறித்த வீரர்கள் வீதி ஒழுங்கை மீறியதாக அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்களை வீதியில் இருந்து அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சைக்கிள் ஓட்ட வீரர்கள் தடுக்கப்பட்ட இடம் எதிர்வரும் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் ட்ரைலதன் (நீண்ட தூர ஓட்டம், நீச்சல் மற்றும் சைக்கிளோட்டம்) போட்டிகள் இடம்பெறவுள்ள இடத்துக்கு அருகில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்)
இதேவேளை, 2002ம் ஆண்டு மான்செஸ்டர் விளையாட்டுப் போட்டிகளின் போது இரண்டு கென்ய சைக்கிளோட்ட வீரர்கள், போக்குவரத்து நெரிசல் மிக்க எம் 61 வீதியில் பிரவேசித்திருந்தனர். இந்த வீரர்களையும் பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLckvy.html
பிரிட்டனில் இலங்கை மாணவர் கொலை! இரண்டாவது கொலையாளியும் இனங்காணப்பட்டார்
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 04:16.57 PM GMT ]
இலங்கை பல்கலைக்கழக மாணவரான தவசிக்க பீரிஸை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இருவரில் ஒருவர் இன்று குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
25 வயதான தவசிக்க பீரிஸ் ஷெபிபீல்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். இதன்போது அவர் பகுதிநேர தொழிலாக பீஸா விநியோகிப்பவராக செயற்பட்டு வந்தார்.
இந்தநிலையில் கடந்த ஒக்டோபர் 27 ம் திகதி அவர் பீஸா விநியோகம் செய்து விட்டு திரும்பும் போது அவரின் கையடக்க தொலைபேசியை களவாடும் நோக்கில் இருவர் அவரைத் தாக்கி கொலை செய்தனர்.
இந்தக் கொலை தொடர்பில் 25வயதான சாம்ராஸ் கான் என்பவர் இன்று ஷேப்பீல்ட் க்ரௌன் நீதிமன்றத்தில் குற்றவாளியாக ஜூரிகளால் இனங்காணப்பட்டார்.
இதனையடுத்து அவருக்கான தண்டனை தீர்ப்பு இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது.
18வயதான காசிம் அஹ்மட் ஏற்கனவே இந்தக் கொலை சம்பவத்தின் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். வழக்கு விசாரணையின் போது இருவருமே கொள்ளை மற்றும் கொலையை ஏற்றுக்கொண்டனர்.
நீதிமன்றத்தில் இரண்டு குற்றவாளிகளும் இனங்காணப்பட்ட நிலையில் தவசிக்க பீரிஸின் குடும்பத்தினர் பிரித்தானிய பொலிஸாருக்கும் ஊடகங்களுக்கும் கொலையாளிகளை கண்டுபிடித்தமைக்காக நன்றி கூறியுள்ளனர்.
எனினும் தமது மகனின் இழப்பை ஈடுசெய்ய முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLckvz.html

Geen opmerkingen:

Een reactie posten