[ புதன்கிழமை, 23 யூலை 2014, 12:13.50 PM GMT ]
ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களும், ஏனைய இரு நாடுகளின் தூதுவர்களும் இணைந்து கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தில் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இதனை கூறியுள்ளனர்.
தனிநபர்கள் தமது கருத்தை வெளியிடும் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம், பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் என்பன பொது விவகாரங்களின் பகுதி, அதில் தேவையற்ற தலையீடுகளை தவிர்த்து அந்த உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிவில் சமூகத்தினர் தடையின்றி பாதுகாப்பாக சுதந்திரமாக செயற்படுவதற்கான சூழலை ஏற்படுத்துமாறும் இலங்கை அதிகாரிகளுக்கு தாம் அழைப்பு விடுப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
ஜனநாயக சமூகத்தில் சுதந்திரமான, வேறுப்பட்ட, பன்மைவாதம், அமைதி மற்றும் ஜனநாயகத்தை கட்டிக்காப்பது அவசியம் எனவும் அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLcku0.html
பேருவளை முஸ்லிம்களில் 25 வீதமானவர்கள் அடிப்படைவாதிகள்: பொதுபல சேனா
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 12:25.34 PM GMT ]
இந்த முஸ்லிம் உறுப்பினர்கள் நீண்ட தாடிகளை வளர்த்து, சில பெண்களை தம்முடன் வைத்துள்ளதுடன் அவர்கள் ஜிகாத் அடிப்படைவாதிகளுக்கு இணையாக செயற்படுகின்றனர்.
தவ்ஹித் ஜமாத் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி கிடைத்து வருகிறது எனவும் அவர்களுக்கு ஆயுத பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளமைக்கான சாட்சியங்கள் தன்னிடம் இருப்பதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLcku1.html
பிரபாகரனுக்கும் பொதுபல சேனாவிற்கும் இடையில் தொடர்பாம்! அரசாங்க அமைச்சரின் கண்டுபிடிப்பு
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 02:15.08 PM GMT ]
பிரபாகரனுக்குத் தேவையானதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை செய்கின்றார்.
நவனீதம்பிள்ளைக்கு தேவையானதை பொதுபல சேனா செய்கின்றது.
எனவே, பொதுபல சேனாவிற்கு பிரபாகரனுக்கும் இடையில் தொடர்பு காணப்படுகின்றது.
கடும்போக்குவாதத்தின் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLcku2.html
முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. உட்பட நால்வர் பிணையில் விடுதலை (செய்தித் துளிகள்)
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 02:21.24 PM GMT ]
இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், நீதிமன்றத்தை புறக்கணித்து வந்த நிலையில், இன்று சட்டத்தரணி ஊடாக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
சந்தேக நபர்களை தலா 5 ஆயிரம் ரூபா பிணையில் விடுதலை செய்யுமாறு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். ஏ. ரணராஜா உத்தரவிட்டார்.
அத்துடன் சந்தேக நபர்களுக்கு தலா 5 லட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, பிரதி ஞாயிறு தோறும் திருகோணமலை விசேட குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகளின் பட்டியல் ரத்து
இலங்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள ஹஜ் யாத்திரைக்குச் செல்லும் பயணிகளின் பட்டியலை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.
அத்துடன், ஹஜ் பயணத்துக்கு செல்லவுள்ள பயணிகளின் எண்ணிக்கையைப் பயண முகவர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
யாத்திரைக்குச் செல்லும் பயணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையில் முறைகேடு இடம்பெறுவதாக தொடரப்பட்ட வழக்கிலே உயர்நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
மேலும், யாத்திரைக்கு அனுப்பும் பயண முகவர்கள், நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே, யாத்திரிகர்களின் எண்ணிக்கை பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென, முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு முன்பாக புதிதாக தயாரிக்கப்படும் பயணிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரிசி என்றுக்கூறி மஞ்சளை இறக்குமதி செய்த புறக்கோட்டை வர்த்தகர்
அரிசி எனக்கூறி 27ஆயிரம் கிலோ மஞ்சள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் இருந்து இரண்டு கொள்கலன்களில் இந்த மஞ்சள் இறக்குமதி செய்யப்பட்டதாக சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மஞ்சள் தொகையின் சந்தைப் பெறுமதி 9.5 மில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் வரியாக கிடைக்கவேண்டிய 5.5 மில்லியன் ரூபாய்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கொள்கலன்களிலேயே இந்த மஞ்சள் கொண்டு வரப்பட்டு ஒருகொடவத்தை களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இந்த கொள்கலன்களில் 37500 கிலோகிராம் அரிசி இருப்பதாக கூறி அவற்றை 187,500 ரூபா செலுத்தி கொழும்பு புறக்கோட்டை வர்த்தகர் பொறுப்பேற்க முன்வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சோதனையின்போது 10 ஆயிரம் கிலோகிராம் அரிசியும் 27,000 கிலே கிராம் மஞ்சளும் அதில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
அனுராதபுரம் சிறையில் 18 இந்திய மீனவர்கள்
இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட 38 இந்திய மீனவர்களில் 18 பேர் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
38 இந்திய மீனவர்களை நேற்றுக் காலை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களின் 9 படகுகளையும் கைப்பற்றினர்.
கடற்படை முகாமில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர்கள், தலைமன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
இவர்களில் 20 பேரை எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
ஏனைய 18 மீனவர்கள் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக இந்திய மீனவ அமைப்பின் தலைவர் இந்திய ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
இந்த மீனவர்கள் இந்தியாவின் இராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLcku3.html
7 பேரை விடுவிப்பது தொடர்பான விசாரணை ஆரம்பம்!
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 02:33.08 PM GMT ]
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுவிப்பது தொடர்பான வழக்கில் விசாரணை ஆரம்பித்தது.
உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க பெப்ரவரியில் தமிழக அரசு முடிவு செய்தது.
இதனை அடுத்து 7 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLcku4.html
Geen opmerkingen:
Een reactie posten