தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 4 juli 2014

தேர்தலை இலக்கு வைத்து பேஸ்புக்கில் களமிறங்கும் ரணில் - மட்டு - அம்பாறை மாவட்டங்களில் விசேட போக்குவரத்து பொலிஸ் பிரிவு ஆரம்பம்

கூட்டமைப்பை தமிழர்களின் ஏகப்பிரதிநிதியாக மக்களே தெரிவு செய்துள்ளனர்!- கெஹலியவிற்கு சுரேஷ் பதில்
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 09:47.53 AM GMT ]
தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களை ஒருபோதும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறியதில்லை. தமிழ் மக்களே கூட்டமைப்பை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியாக தெரிவு செய்துள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதி என கொள்ள முடியாது. கூட்டமைப்பை ஏக பிரதிநிதிகள் என்று மக்கள் ஏற்றுக்கொண்டால், அவர்களுடன் அரசாங்கம் பேசுவதற்கு தயார். எனினும் அவ்வாறு இல்லாத நிலையில் கூட்டமைப்பை ஏக பிரதிநிநி என அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது.
இதற்கு பதில் வழங்கும் முகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
நடந்து முடிந்த தேர்தல்களின் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வழங்கியுள்ள ஆணை அதனை தெளிவுப்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbju1.html
கிளிநொச்சியில் இராணுவ வீரர் ஒருவர் தற்கொலை முயற்சி
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 10:15.59 AM GMT ]
கிளிநொச்சி, இரணைமடு இராணுவ தலைமையகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
மாத்தறை பகுதியைச் சேர்ந்த 29 வயதான இராணுவ வீரரே, தனக்குத்தானே சுட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாக பொலிஸார் ​தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் போது கழுத்துப் பகுதியில் சூட்டுக் காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
தற்கொலை சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbju3.html

தேர்தலை இலக்கு வைத்து பேஸ்புக்கில் களமிறங்கும் ரணில் - மட்டு - அம்பாறை மாவட்டங்களில் விசேட போக்குவரத்து பொலிஸ் பிரிவு ஆரம்பம்
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 10:27.08 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் புகழை உயர்த்து நோக்கத்தில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் சில பக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அடுத்த ஜனாதிபதி ரணில் என்று குறிப்பிட்டு இந்த பக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சில வாரங்களுக்கு முன்னர் இந்த பக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் கௌரவ ரணில் என்ற பெயரில் புதிய பேஸ்புக் பக்கம் ஒன்று கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த சமூக வலைத்தள பக்கங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தொடர்பாடல் பிரிவின் கீழ் நடத்தப்படவில்லை அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
 ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகபூர்வ பேஸ்புக் வலைத்தள பக்கம் ஒன்றை கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மட்டு - அம்பாறை மாவட்டங்களில் விசேட போக்குவரத்து பொலிஸ் பிரிவு ஆரம்பம்
கிழக்கு மாகாணத்தில் வீதி விபத்துக்களை குறைத்து பொதுமக்களின் பாதுகாப்பான போக்குவரத்தினை உறுதிப்படுத்தும் வகையில் விசேட போக்குவரத்து பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதிகளவு விபத்துக்கள் இடம்பெற்றுவரும் மாவட்டங்களான மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை இணைத்ததாக இந்த விசேட போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்கீழ் விசேட அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸ் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டு அவர்களுக்கான விசேட மோட்டார் சைக்கிள்களும் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ன தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சர் காரியாலயத்தில் நடைபெற்றது.
பிரதான நெடுஞ்சாலைகளில் சீரான போக்குவரத்துகளை ஏற்படுத்தும் வகையிலும் பொதுமக்களின் பாதுகாப்பான போக்குவரத்தினை உறுதிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விசேட போக்குவரத்து பிரிவு இங்கு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இந்த விசேட வீதி போக்குவரத்துக்கு பிரிவுக்குக்காக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் இந்த பிரிவானது கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்கவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கவுள்ளது.
இந்த பிரிவின் அங்குரார்ப்பண நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட உதவி பொலிஸ் அத்தியட்சர் மேமன் சில்வா மற்றும் அம்பாறை,மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள உதவிப்பொலிஸ் அத்தியட்சகர்கள் தெரிவுசெய்யப்பட்ட போக்குவரத்து பொலிஸார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
24 மணிநேரமும் அதிவேக வீதிகளில் போக்குவரத்து விதிகளைக் கண்காணிப்பதற்காக 600 குதிரை வலுகொண்ட ஒவ்வொன்றும் தலா 36 இலட்சம் ரூபா பெறுமதியான 12 மோட்டார் சைக்கிள்கள் மட்டக்களப்பு –அம்பாறை மாவட்ட புதிய பொலிஸ் ரோந்துப் பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளன.
இதன்போது புதிய ரோந்துப்பிரிவின் கடமைகளும் பொறுப்புக்களும் பற்றி மட்டக்களப்பு, அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ண விளக்கமளித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbju4.html

Geen opmerkingen:

Een reactie posten