மூன்று பங்களாதேஸ் பிரஜைகள் கைது!
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 10:39.06 AM GMT ]
போலியான வீசாவை பயன்படுத்தியதாக குறித்த நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் லிபியா நோக்கிப் பயணிக்க முயற்சித்த போது அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த பங்களாதேஸ் பிரஜைகள் சில நாட்கள் இலங்கையில் தங்கியிருந்தமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
பங்களாதேஸ் பிரஜைகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbju6.html
கைத்தொலைபேசி திருடியதை காட்டிக் கொடுத்த சீசீரிவி கமெரா
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 10:01.24 AM GMT ]
இச்சம்பவம் 03.07.2014 அன்று நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து தெரியவருவதாவது,
உணவகம் ஒன்றுக்கு உணவு உட்கொள்ள வந்த நபர் ஒருவர் தனது கையடக்க தொலைபேசியை மறதியால் அவ்விடத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.
பிறகு அவர்; அவ்விடத்திற்கு வந்து தனது கையடக்க தொலைபேசியை நான் மறதியால் வைத்துவிட்டு சென்றுள்ளேன். அதனை யாராவது பார்த்தீர்களா என்று தொலைபேசியை திருடிய நபரிடமே கேட்டபோது அவர் நான் பார்க்கவில்லை என கூறியுள்ளார்.
எனினும் குறித்த நபரே தொலைபேசியை திருடிய காட்சிகள் குறித்த உணவகத்தில் இருந்த சீசீரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
மேற்படி சந்தேக நபரை யாருக்காவது தெரியுமானால் உடனடியாக ஹற்றன் பொலிஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbju2.html
புலிகளின் நான்கு சிரேஷ்ட உறுப்பினர்கள் மலேசியாவில் கைது
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 10:40.52 AM GMT ]
புக்கிட் அம்மான் பொலிஸ் நிலைய பயங்கரவாத விசேட பிரிவின் அதிகாரிகள் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் பகுதிகளில் மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் ஒருவர் குண்டு தயாரிப்பு நிபுணர் எனவும் இவர் அகதிகளுக்காக ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகம் வழங்கிய அடையாள அட்டையை வைத்திருந்தார் எனவும் மலேசியா இன்ஸ்பெக்டர் ஜென்ரல் டான்ஸ்ரீ காலித் அபுபக்கர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
மற்றுமொரு சந்தேக நபர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கொலை செய்யும் முயற்சிக்கு உதவியவர் எனவும் அவர் கூறியுள்ளார்.
மூன்றாவது சந்தேக நபர் இந்தியாவில் முறியடிக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தவர்.
நான்காவது சந்தேக நபர் விடுதலைப் புலிகளின் வலையமைப்பின் தகவல்களை சேகரிப்பதற்கு பொறுப்பாக இருந்தவர் எனவும் காலித் அபுபக்கர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து போலி கடவுச்சீட்டுகள், மலேசியா உட்பட வெளிநாடுகளின் குடிவரவு துறையின் உத்தியோகபூர்வ முத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மலேசியாவில் இந்த வருடம் கைது செய்யப்பட்ட 14 விடுதலைப் புலி உறுப்பினர்களில் 7 பேர் அகதிகளுக்காக ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயத்தின் அடையாள அட்டைகளை வைத்திருந்தனர் எனவும் காலித் அபுபக்கர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbju7.html
Geen opmerkingen:
Een reactie posten